Friday, December 10, 2010

அவன் அவள் அல்வா

எனக்கு கதையும் எழுத வரல , கவிதையும் எழுத வரல அதான் ரெண்டையும் கலந்துகட்டி எழுதலாம்னு ஒரு சிறுமுயற்சி ,


கதை இதுதான் ஒரு பையன் ஒரு பொண்ண சின்சியரா காதலிக்கிறான் , ஆனா அந்த பொண்ணு அவன ஜஸ்ட் ஒரு டைம் பாஸ்காகவும் , அவன் காசுல என்ஜாய் பண்றதுக்காகவும் காதலிக்குற மாதிரி நடிகுறா, இதுதான் கதை ( ஐ கதை எழுதிட்டேன் ) இப்ப அந்த காதலன் அவள் காதலியை பார்த்து கவிதை நடைல (?) வர்ணிக்க , அதற்கு அந்த காதலியும் மனதிற்குள் கவிதை (?) நடைலயே பதில் சொல்றாங்க .. இதில் காதலி சொல்லும் அனைத்தும் அவள் மனதிற்குள் சொல்லி கொள்வது ..


அவன் : 
அன்பே , எப்பொழுதும் உன்முகம் மட்டும் 
எவ்வாறு பிரகாசமாக உள்ளது ?
காலையில் சூரியனும் 
மாலையில் சந்திரனும் 
உன்முகத்தை மட்டும் பார்பதாலா ?


அவள் ( மனதிற்குள் ) :

அன்பே , எப்பொழுதும் உன்முகம் மட்டும் 
எவ்வாறு பிரகாசமாக உள்ளது ?
நீ ஒரு டுயுப் லைட் என்பதாலா ?

அவன் :
அன்பே , நீ நடக்கும் சாலையெங்கும் 
மலர்களை தூவி வைப்பேன் 
உன் பாதத்திற்கு வலிக்காமல் இருக்க!

அவள் ( மனதிற்குள் ):
சாலையெங்கும் மலர்கள் வேண்டாம் 
அன்பே , தினம் ஒரு முழம் போதும் 
எனக்கு பத்துருபாய் மிச்சம் 

அவன் :
அன்பே , உன் சிரிப்பில் இருந்து 
சில்லறையாய் சிதறுகிறதே 
அது எப்படி ?

அவள் :
உன் பாக்கெட்லிருந்து பணம் சிதறும்வரை 
என் சிரிப்பிலிருந்தும் சில்லறை சிதறும் 

அவன் :
நான் எப்போதும் உன்னை நினைத்துக்கொண்டிருக்கிறனே
உனக்கு எப்போதும் விக்கல் வருகிறதா ?

அவள் :
நீ சென்றவுடன் கணேஷ் வந்து விடுவதால் 
உன் ஞாபகம்கூட வருவதில்லை அன்பே !

அவன் :
எப்போதும் நீ எனக்கு மட்டும் அழகாக தெரிகிறாயே    
எப்படி ?

அவள் : 
என் மேக் அப் கலையும்வரை எல்லோர்க்கும் அழகாத்தான் தெரிவேன் 
அப்படி !


அவன் : 
அன்பே உனக்காக நான் உயிரையும் தருவேன் 
எனக்காக நீ என்ன தருவாய் ?


அவள் :
உன்னிடம் தருவதற்கு அல்வாவை தவிர 
வேறொன்றும் இல்லை அன்பே ..


அவன் :
அன்பே , நமது  திருமணம் எப்போது நடக்கும் ?


அவள் :
எப்போதும் போல்  இரவில் உன் கனவில் மட்டும்தான் அன்பே ...


Moral of the Story : அவன் போன்ற காதலனும் , அவள் போன்ற காதலியும் இருக்கும்வரை , அல்வா கடைகளுக்கு அழிவில்லை .


            

போஸ்டர் குறும்பட விமர்சனம்

நான் வலைத்தளம் ஆரம்பிக்க காரணமே அண்ணன் கேபிள் சங்கர் அவர்கள்தான் , அது எப்படி என்பது பல தடவை பல பேரிடம் சொல்லிருப்பதால் அதை அப்படியே விட்டுவிடுவோம் . 


அவரை பற்றி தெரிந்த அனைவருக்கும் கண்டிப்பாக தெரியும் அவருடைய திரைப்பட ஆர்வம் , ஒரு திரைப்பட இயக்குனராக தீவிரமாக முயற்சி செய்து வரும் அவர் தற்பொழுது ஒரு எழுத்தாளராகவும் வெற்றி கண்டுள்ளார். ஒரு காலத்தில் அவரது விமர்சனத்தை படித்துவிட்டு அதற்குபிறகுதான் படம் பார்க்கவே செல்வேன், ஆனால் பலதடவை அவர் நன்றாக பாராட்டிய படம் எனக்கு பிடிக்காது அல்லது எனக்கு மிகவும் பிடித்த படம் அவருக்கு பிடிக்காது விமர்சித்திருப்பார் , ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை ... 


நான் இரண்டு காரணங்களுகாக  சங்கர் அண்ணனின் படத்தை மிகவும் எதிர்பார்கிறேன் , ஒன்று, மூன்று வருடங்களாக அண்ணனின் ப்ளாக் படித்து கொண்டிருக்கிறேன் ஆகையால் அவரது இயக்குனர் கனவை பற்றி நன்றாக தெரியும், அது நிறைவேற வேண்டும் என்ற ஆசை, மற்றொன்று எல்லாருடைய படத்தையும் விமர்சிக்கும் இவரது படம் எப்படி இருக்கும் என்பதை காணும் ஆவல்.. 


அண்ணன் ஏற்கனவே குறும்படத்தை இயக்கி இருந்தாலும் அதை நான் கண்டதில்லை , அவரது வலைத்தளத்தில் அவர் கதை , திரைகதை அமைத்த போஸ்டர் குறும்படம் கலைஞர் தொலைகாட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பு  ஆக இருப்பதாக   அறிவித்திருந்தார் , ஏற்கனவே அந்த நிகழ்ச்சியின் போலீஸ் சுற்றை கண்டிருந்ததால் , அண்ணனின் கைவண்ணத்தை காணும் ஆவல் ஏற்படிருந்தது .. ஆனால் ஆடிட்டிங் வேலை அதிகமாக இருந்ததால் சென்ற ஞாயிற்று கிழமை அலுவலகமே கெதியாக இருந்தேன் ஆகையால் அதை காண முடியவில்லை , நேற்று இரவு அதே நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்தார்கள் , நான் பாதியில் இருந்துதான் நிகழ்ச்சியை பார்த்தேன் ஆகையால் கடைசி மூன்று படங்களைத்தான் பார்க்க முடிந்தது அதில் ஒன்று போஸ்டர்.


படத்தை பலரும் பார்த்திருப்பீர்கள் ஆனாலும் யாரேனும் பார்க்காமல் இருந்தால் அவர்களுக்காக.. படத்தின் கதை இதுதான் ஒரு விபச்சாரம் செய்யும் சாந்தி என்ற பெண்ணை பற்றி ஒரு தெருவில் போஸ்டர் ஓட்ட பட்டிருகிறது , எங்கே விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கமாகி விடுமோ என்று இரவோடு இரவாக அந்த ஏரியா காவல்துறையினர் அந்த போஸ்டரை கிழித்து எறிகின்றனர், அந்த சாந்தியை உடனடியாக பிடிக்க சொல்லி அந்த ஏரியா இன்ஸ்பெக்டர்க்கு அவரது மேலதிகாரிகள் நெருக்கடி அளிக்கின்றனர், மறுநாள் காலை சாந்தி என்ற விபச்சாரம் செய்யும் பெண் அவளது கையாளிடம் புதுசா ரெண்டு பசங்க (பொண்ணுங்க ) வந்துருகாங்க வழக்கமா வர அந்த எக்ஸ்போர்ட் பார்ட்டியிடம் சொல்லு ராசியான ஆளுங்கன்னு சொல்கிறாள் , அவனும் அந்த எக்ஸ்போர்ட் ஆளுக்கு போன் செய்ய நம்பரை தேடி போன் செய்கிறான் அந்த நம்பர் 76 என முடிகிறது ஆனால் அவனோ தவறுதலாக 70 என கால் செய்து விடுகிறான், அது அந்த ஏரியா போலிசின் நம்பர் , போன் செய்தவன் அவர்களது அட்ரசையும் போலீசிடம் சொல்ல போலீஸ் அந்த சாந்தியை பிடிக்கிறது. இரவு போஸ்டர் ஒட்டிருந்த இடத்திற்கு இருவர் வந்து அந்த போஸ்டர்களை தேடுகின்றனர் , அதில் ஒருவன் போன் செய்து சொல்கிறான் , அண்ணே நேத்து சீரியலுக்காக ஒட்டிருந்த போஸ்டர் ஷூட்டிங் நின்னதால அப்படியே விட்டு போனோம்ல அத காணோம்னே எவனோ கிழிச்சிட்டாய்ங்கனே னு சொல்றான்.. ஆக ஷூடிங்க்காக ஒட்டபட்ட போஸ்டர தவறா புஞ்சிகிட்ட போலீஸ் உண்மையிலே சாந்திங்கிற விபசாரியையும் பிடிச்சிட்டாங்க .. 


இதுதான் நான் படத்த பார்த்து புரிஞ்சிகிட்ட அளவில் படத்தோட கதை . படத்தோட கதையிலேயே ஹுயுமர் இருந்தாலும் அதை சொன்ன விதம் அருமை .. பொதுவா போலீஸ் ஸ்டோரினு எடுத்துகிட்டா ரௌடிசம், என்கவுன்டர் இதுதான் பிரதானமா இருக்கும் அதையேதான் நான் பார்த்த அடுத்த ரெண்டு படத்திலையும் கொடுதிருதாங்க ஆனா இந்த படம் அந்த எந்த விஷயத்திலும் சிக்காம அழகா ரசிக்கிற மாதிரி இருக்கு .. 


படத்துல நடிச்ச எல்லோரும் ரொம்ப இயல்பான நடிப்ப வெளிபடுதிருந்தாங்க எனக்கு அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் , போன்ன அட்டென்ட் பண்ணற அந்த காண்ஸ்டேபிள் அப்புறம் அந்த சாந்தியின் கையாள் ( போன் செய்பவர் ) இவர்களின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது , படத்தின் மைனஸ்னா நான் இதற்கு அடுத்து பார்த்த ரெண்டு படம் கரனம் தப்பினால், அச்சம் தவிர் இந்த ரெண்டு படத்தோட ஒப்பிடும்போது making style, edititing, music இதெல்லாம் நம்ம படத்துல கொஞ்சம் low தான் ஆனாலும் நம்ம படத்தின் கதைக்கு செய்ய முடிந்த அளவிற்கு சிறப்பாகவே செய்துள்ளார்கள் , என்னதான் பெரிய நட்சத்திர அந்தஸ்து , பெரிய டெக்னிசியன்ஸ் இருந்தாலும் அசல் , சுறா , இப்போ உத்தமபுத்திரன் போன்ற படங்களை விட களவானி , மைனா போன்ற படங்கள் மனதை கவருதோ அந்த மாதிரி இந்த ரெண்டு படங்களை விட நம்ம படம் தூள் .. 


அடுத்த சின்ன மைனஸ் அந்த சாந்தி சொல்றாங்க அந்த எக்ஸ்போர்ட் பார்ட்டிய வர சொல்லு ராசியான ஆளுங்கனு, ஏற்கனவே வந்துட்டு போயிட்டு இருகிறவங்களுக்கு எதுக்கு மறுபடியும் அவர் அட்ரெஸ் தரனும் ( ஒரு வேள வீடு மாத்திடான்களோ )  எது எப்படியோ எனக்கு படம் ரொம்ப புடிச்சிருந்துச்சு , நடுவர்களுக்கும் புடிச்சிருந்துச்சு சிறந்த படம்னு பெயரும்  கிடைச்சாச்சு, போஸ்டர் பட டீம்க்கு வாழ்த்துக்கள் .. மொத்தத்தில் Poster - Blaster.

Wednesday, December 8, 2010

திரை நட்சத்திரங்களின் கலக்கல் கவிதைகள்

நம்ம திரையுலக பிரபலங்கள் திரைபடத்தில் சொன்ன கவிதைகளின் சிறு தொகுப்பு உங்களுக்காக...


ஜனங்களின் கலைஞன் விவேக் ...

காதல் 
காதல் ஒரு கழட்டி போட்ட செருப்பு 
சைஸ் சரியா இருந்தா 
யாரு வேணாலும் மாட்டிக்கலாம்!


ஆட்டோ 

ஆட்டோவே நீ எப்போது வருவாய் 
உன்னிடம் தரும் அளவிற்கு 
எங்களிடம் இல்லை வருவாய் ! 

அடுத்து நம்ம மிர்ச்சி சிவா

காதல் நாய் 

மரத்துல இருக்குது காயி
மரத்துல இருக்குது காயி
தூங்க தேவை பாயி  
தூங்க தேவை பாயி
நீ ம் னு சொன்னா இந்த சிவா 
உன் காலடி நாயி செல்வி நாயி!

இன்னொரு கவிதை(?)

மவுன் ரோட்டுல அன்னா சாலை 
ரஜினிகாந்த்  முரட்டு காளை......

நம்ம பார்த்திபன் ...


ஒரு அழகான பொண்ணு ஸ்வீட் சாப்பிடுற அழக (அது அழகு ??) நம்ம பார்த்திபன் கவிதையாய் சொல்லறார் .

ஒரு, ஸ்வீட் ஸ்டால்லே 
ஸ்வீட் சாப்பிடுகிறதே ...!

டேய் டேய் இதல்லாம் நோட் பண்ணுங்கடா நோட் பண்ணுங்கடா 

கடைசியா நம்ம கவுண்டமணி அண்ணே , ரெண்டே வரில அவரோட அக்கா மகளுக்காக எழுதின கவிதை ..

அடி அக்கா மகளே இந்து ,
யே வக்கா மகளே இந்து ...

நான் காலேஜ் படிக்கும்போது ஒரு பொண்ண சின்சியரா லவ் பண்ணேன், அவ என்ன பார்க்க நான் அவள பார்க்கனு நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு , ஒருநாள் அவளபத்தி ஒரு கவிதை எழுதி அவ கிளாஸ் பையன்கிட்ட கொடுத்து அனுப்புனேன் , அதுல இருந்து அவ என்ன பாக்குறதையே நிறுத்திட்டா , அப்புறம் என்னோட 34 லவ் மாதிரியே இதுவும் பெயிலா போச்சு ( இது என்னடா பரிட்சையா பெயிலா போறதுக்கு ) அந்த கவிதை இதுதான் , அவ பெயர் பாரதி ..

பாரதி , அழகான பெயர் ,
நீ ஏன் இவ்வளவு ஒல்லியாக இருகிறாய் ?
பேரு வைத்த உன் வீட்டில் யாரும் 
உனக்கு சோறு வைக்கவில்லையா ?

இவ்வளவு அழகான கவிதைய (?) அவளுக்கு பிடிக்காம போயிடிச்சே ..:( 


அவ அப்படி பன்ன மாட்டா

ஆபீஸ்ல ISO ஆடிட்டிங் அது இதுன்னு ஏகபட்ட வேலை எல்லாம் ஒரு வழியா முடிஞ்சு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகாலம்னு நான் அப்புறம் என்னோட சீனியர்ஸ் மூனு பேரும் பார்க்கு போனோம் மொத ஆளுக்கு ஒரு பீர் ஆர்டர் பன்னிட்டு வெயிட் பண்ணிடிருக்கும்போது எனக்கு ஒரு யோசனை வந்துச்சு நம்ம  ப்ளாக்ல எழுத சரக்கு இல்லாம கஷ்டபடறோம் , இந்த மாதிரி குடிமகன்கள் இருக்குற எடத்துல கண்டிப்பா நமக்கு நிறைய மேட்டர் கடைக்கும் அவனவன் குடிச்சுட்டு போதைல உண்மைய பேசுவாங்க அத அப்படியே பதிவுல எழுதி ஹிட்ஸ்ச அள்ளிடனும்னு முடிவுபன்னேன் . சரக்கு அடிக்குற இடத்திலையும் பதிவுக்கு சரக்கு சேர்கிற என்னோட ஆர்வத்த நீங்க பாராட்டியே ஆகனும் (என்ன பண்றது கேட்டு வாங்க வேண்டியதா இருக்கு ) . அப்படியே ஒரு பீர லைட்டா குடிச்சிட்டே பக்கத்து கேபின்ல என்ன பேசுராங்கனு கேட்க ஆரம்பிச்சேன் , அங்கே .... மச்சி நீ என்ன நம்புறியா இல்லையா ?., என்னடா மச்சி இப்படி கேட்குற சத்தியமா நம்புறேண்டா .. அப்படினா கேளு அவ அப்படி பன்னிருக்க மாட்டா ... ஆஹா ஒரு பொன்ன பத்தி பேசுறாய்ங்கா அப்படினா நாம பதிவுபோட கண்டிப்பா ஒரு மேட்டர் சிக்கிருச்சு ( இது நான் )..


அவன் : இல்ல மச்சி நான் அவளோட எத்தன வருசமா பழகிருக்கேன் எனக்கு தெரியும்டா அவ பன்னிருப்பா


இவன் : எனக்கு நம்பிக்கை இல்லடா அவ பன்னிருக்க மாட்டா ..


அவன் : என்னடா என்ன நம்ப மாட்டியா ? அவ பன்னிருபாடா


இவன் : அவ போய் சே சே இருக்காது


அவன் : அவதாண்டா பன்னா எவ்வளவு வேணாலும் பெட் கட்டுவேன்


நான் ( மனதிற்குள் ) டேய் என்னதாண்ட அவ பன்னா சொல்லி தொலைங்கடா சீக்கிரம் இன்னும் எனக்கு பதிவு போட மேட்டர் கடைக்கலடா.


இவன் : மச்சி நீ எனக்கு ஒரு பீர் வாங்கிகொடுதேனு நான் எது சொன்னாலும் நம்புவேணு பார்த்தியா போடா


அவன் : அப்படிலாம் இல்ல மச்சி அவதாண்டா பன்னா , என்ன நம்பு .


இவன் : அவ பன்னிருக்க மாட்டா  


நான் ( மனதிற்குள் ) டேய் அவ என்னத்த பன்னாலோ இல்லையோ இனிநான் ஒன்னு பன்ன மாட்டேன்டா, இனி எவன் குடிச்சுட்டு பேசுனாலும் நான் ஒட்டு கேட்க மாட்டேன்டா ..ஒரு பீர் குடிக்கலாம்னு வந்தவன ரெண்டு பீர் குடிக்க வைச்சுட்டாங்க பாவிங்க .. கடைசியா கிளம்பும்போது ஒரு வழியா மேட்டர்க்கு வந்துட்டாய்ங்களானு பார்த்தேன் ...


அவன் : மச்சி உன் தல மேல சத்தியம் அவதாண்டா பன்னா 


இவன் : மச்சி உன் தளபதி மேல சத்தியம் அவ பண்ணிருக்க மாட்டா 


அட பாவிங்களா அவ பன்னதுக்கு இவுங்க ரெண்டு பேரும் என்னடா பாவம் பன்னாயிங்க .. சத்தியமா இந்த பாருக்கு இனிமேல் குடிக்க வர மாட்டேன்டா .. 


நண்பர்களே நானும் ஒழுங்கா ஒரு பதிவு எழுதனும்னு ஆசைதான் என்னத்த பன்ன ???

Monday, December 6, 2010

என்னை அழ வைத்த டிவி நிகழ்ச்சி

எச்சரிக்கை : தப்பி தவறி கூட பெண்கள் இந்த பதிவை படிக்க வேண்டாம் ..
பல பேர் சேர்ந்து பொது மாத்து போட்டாலும் அசால்டா அழுகாம போற ஆள் நான் ஆனா என்னையே ஒரு டிவி நிகழ்ச்சி அழுக வச்சுடுச்சு ... ஆனா இது நடந்தது நான் பத்தாவது படிக்கும்போது.. பொதுவா ஆண்கள் எல்லாத்துக்கும்  சுய இன்ப பழக்கம் இருக்கத்தான் செய்யும் . நான் பத்தாவது படிச்சுட்டு இருக்கும்போது வயசுக்கு வந்தேன் , யாரும் தப்பா நனைச்சுகாதிங்க that means எனக்கு அப்போதான் அந்த மேட்டர்லாம் கொஞ்ச கொஞ்சமா தெரிஞ்சுச்சு ..சரி என்னதான் அதுல இருக்குனு தெரிஞ்சிக்கலாம்னு ஆரம்பிச்சு ஒரு ஒன்னற மாசம் அதுபாட்டுக்கு நடந்துட்டு இருந்துச்சு அப்போ ஒருநாள் நான் டிவி பார்த்துட்டு இருந்தேன் , ஒவ்வொரு சேனலா மாத்திட்டு இருக்கும்போது ஒரு சேனல்ல ஒருத்தர் சட்டை போடாம உட்கார்ந்து ஏதோ உரல்ல வச்சு இடிச்சுட்டு இருந்தார் , என்னடா இதுன்னு ஆர்வமா பார்த்தேன் கொஞ்ச நேரத்துல அதே மாதிரி நிறைய போட்டோ மாறி மாறி வந்துச்சு .. அப்புறமா ஒருத்தர் வந்து பேச அரம்பிசாரு அவர் முடிலாம் கருப்பா இருக்க கிர்தா மட்டும் வெள்ளையா இருந்துச்சு , ஆளு வித்தியாசமா இருக்காரே அப்படி என்னதான் சொல்ல போறார்னு பார்க்கலாமேன்னு பார்த்தேன் .. இனி அவர் , ஏன் எதுக்கு ஏன்டா ? இந்த வயசுலேயே இந்த _______ பழக்கத்த பழகிட்டு நியும் கெட்டு பின்னாடி உன்ன நம்பி வரபோற பொண்ணோட வாழ்க்கையையும் சேர்த்து கேடுகீறிங்க ? தயவுசெஞ்சு சொல்றேன் நீங்கலாம் கல்யாணமே பண்ணிக்காதீங்க சே... இத பார்த்த உடனே என் கன்னு ஆட்டோமேட்டிக்கா கலங்கிடிச்சு.. அய்யய்யோ இது இவ்வளவு பெரிய தப்பா இது தெரியாம ஒன்னற மாசமா பன்னிட்டு இருக்கோமே ... அப்போ அவருக்கு ஒரு போன் வருது .. ம் சொல்லு என்னது அடுத்த மாசம் கல்யாணமா ? நீயெல்லாம் ஏன்டா கல்யாணம் பண்ணிக்க போற , உனக்கு அறிவு இருக்கா இல்லையா அந்த பொண்ணு என்ன பாவம் பன்னா அவள கல்யாணம்பன்னி உன்னால என்ன சுகத்த கொடுக்க முடியும் மொத நி போன்ன வை ... நான் அழுதே விட்டேன் ஏன்னா நான் அப்போதான் அனிதானு ஒரு பொன்ன கரெக்ட் பன்னிட்டு இருந்தேன் .. அப்படியே அவர் அவரோட டென்ஷன்ன கட்டுபடுத்திகிற மாதிரி என்என்னமோ பன்னி திரும்பவும் பேச அரம்பிசாரு .. நான் சொல்லறதே கேளுங்க ஏதோ நடந்தது நடந்துபோச்சு என்ன உங்க தாத்தாவா நனைச்சிகுங்க சேலத்துக்கு வாங்க என்ன வந்து பாருங்க நாங்க பழங்காலத்து ஓலை சுவடிகளை வச்சு பல மருந்து தயாரிச்சிருக்கோம் வாங்க நாங்க இருக்கோம்னு வாசன் ஐ கேர் மாதிரி சொன்னாரு, இத கேட்ட உடனேதான் எனக்கு உயிரே வந்துச்சு அப்போ நான் நினைச்சிகிட்டேன் உண்டியல ஒரு 120 ருபா இருக்கு எப்படியோ இன்னும் ஒரு 30 ருபா சேர்த்து யாருக்கும் தெரியாம சேலத்துக்குபோய் இந்த டாக்டர் தாத்தாவ பார்த்துடணும்னு முடிவு பண்ணேன் .. அப்பறம் அந்த பழகத்தா அதோட விட்டாச்சு .. அப்பறம் காலேஜ் சேர்ந்து விவரம் தெரிஞ்ச அப்புறம்தான் தெரிஞ்சிச்சு அவர் சொன்னதெல்லாம்  பொய்னு.   இப்படித்தான் சின்ன வயசுல டிவிய பார்த்து misunderstand ஆல குழப்பம் ஆயிடுச்சு. நான் பரவாயில்லை என் நண்பர் ஒருத்தர் சின்ன வயசா இரும்போது டிவி பார்த்துட்டு இருந்துருக்காரு அப்போ நம்ம அஜித் நடிச்ச உயிரோடு உயிராக னு ஒரு படம் ஓடிட்டு இருந்துருக்கு அதுல அஜித் ஹீரோயின் கன்னத்துல முத்தம் கொடுத்துருக்காரு அத இவர் பார்த்துட்டு இருக்கும்போது இவர் பக்கத்து வீட்டு பசங்க இவர விளையாட கூப்டாங்கனு இவர் போயிட்டாரு போனவர் கரெக்டா படத்தோட கிளைமாக்ஸ்லதான் வந்துருகாரு அப்போ ஹீரோயின் பிரசவ வழில துடிச்சுருகாங்க பக்கத்துல அஜித் பதறிட்டு இருக்காரு இத பார்த்த உடனே நம்ம நண்பர் என்ன நனைச்சிட்டாரு பொண்ணுங்களுக்கு கன்னத்துல முத்தம் கொடுத்துட்டா அவங்களுக்கு குழந்தை பிறந்துடும்னு நினைச்சிட்டார், அப்பவே அந்த பிஞ்சு மனசுல இது நஞ்சா விழுந்துடிச்சு, அதுக்கு அப்புறம் அவரு 9  வது படிக்கும்போது ஒரு பொன்ன லவ் பன்னாரு ஆனா அந்த மேட்டர மனசுல வட்சிட்டு அந்த பொண்ணுக்கு ஒரு முத்தம்கூட கொடுக்கல, என்னடா இவன் இப்படி நம்மள காய விடறானேன்னு அந்த பொண்ணு இவர divorce பண்ணிடுச்சு இல்ல இல்ல கட் பண்ணிடுச்சு , இப்படியே இவருக்கு அஞ்சாறு லவ் போனதுக்குப்புறம்தான் உண்மையே தெரிஞ்சிச்சாம்... அது அப்படி இல்லைன்னு .

Thursday, December 2, 2010

Wikileaks தெரியும் அது என்ன venkileaks? - அதிர்ச்சி தகவல்

பதிவுக்கு போறதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான விஷயம் :
நீங்கள் படித்து கொண்டிருக்கும் இந்த வலைத்தளம் உலகிலேயே நம்பர் ஒன் தமிழ் வலைத்தளம் என IRDCAF ஆல் அங்கீகரிக்க பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன் ( IRDCAF னா என்னான்னு கேட்றாதீங்க ஏனா எனக்கே தெரியாது ) எல்லாம் ஒரு விளம்பரத்துக்குத்தான்.


உலக நாடுகளின் குறிப்பா அமெரிக்காவின் ரகசியங்களை அம்பலபடுத்தி பரபரப்பை ஏற்படுத்தி வருது wikileaks என்ற இணையத்தளம்.அதே மாதிரி பல பதிவர்களோட வெளிவராத ரகசியங்களை விரைவில் வெளியிட்டு பரபரப்பை பதிவுலகில் ஏற்படுத்த வருகிறது venkyleaks என்ற இணையத்தளம் . அதை பற்றிய ஒரு சிறு பார்வை .


அந்த தளம் முதல் கட்டமாக வெளியிட போகும் சில பதிவர்களின் ரகசியங்கள் நமது காதுக்கு எட்டின, அவை ...1. Wikileaks இணையத்தளம் அமெரிக்காவின் பல கேபிள்களை வெளியிட்டு கொண்டிருகின்றன அதேபோல் விரைவில் இந்தியாவின் பல கேபிள்களை வெளியிட போகிறதாம், இந்த இணையதளத்திற்கு இதுபோன்ற கேபிள்களை சப்ளே செய்வது வெறும் யாரும் அல்ல , சொன்னால் நம்ப மாட்டிர்கள் அது பிரபல பதிவர் அண்ணன் கேபிள் சங்கர்தான்...அப்போ இவர்தான் weapon suppliernu சொல்லுங்க .. 


Cable சங்கர்


2. கணக்கில் வராத பல கோடி சொத்துகளுக்கு சொந்தகாரர் இந்த பதிவர் , எங்கே விஷயம் வெளிய தெரிஞ்சா பிரச்சனை ஆயிடுமோன்னு இவரு இவருக்கு வச்சுகிட்ட பேரு வெறும்பய ... அட கொடுமையே ...
3. இந்த பதிவர் மேல Google கொலைவெறில இருக்காம் , காரனம் இதனாம் இவரு தன்னோட வலைதளத்துக்கு வச்சுருக்குற பேரு பாலாவின் பக்கங்கள் ... ஆன இவரு எழுதுறதெல்லாம் Google ஓட blogger.com பக்கங்கள் .. விரைவில் Google இவர் மேல கேஸ் போடலாம்னு எதிர்பார்க்கபடுகிறது ... அப்போ முன் ஜாமீன் வாங்கிடுங்க ...


4. புது வீடு கட்டிருகேன்னு தன்னோட வலைதளத்தை அறிவிப்பு செஞ்ச பதிவர் வென் புரவிக்கு திருப்பூர்ல ஒரு சின்ன வீடு இருக்காம் .... இப்பலாம் யாரையும் நம்ப முடியல .. 
5. இவர் ரொம்ப தைரியமான பதிவர் அவர் பெயர முழுசா சொல்ல மாட்டாரு அவர சுருக்கமா SK னு கூப்பிடுவாங்க அதோட உண்மையான அர்த்தம் S for சந்தனம் K for கடத்தல் .... எவ்வளவு தைரியம் .
6. அடுத்து எங்க ஊரு காரரு அறியாமையே ஆனந்தம்னு சொல்லி தன் பெயரை கரூர் கிறுக்கன்னு  வட்சிகிட்டவர் இவர்மேல ஆள் கடத்தல் கற்பழிப்புனு பல கேஸ் இருக்குனா நீங்க நம்புவீங்களா ஆன அதான் உண்மை ... 
அப்ப பதிவுலகில் யாருமே ஒழுங்கா இல்லையா ? அப்படினு ஒரு சந்தேகம் இந்நேரம் உங்களுக்கு வந்திருக்கும் இதே சந்தேகம்தான் Scotland Yard போலீஸ்களுக்கும் வந்துச்சு உடனடியா அவங்க உலகம் முழுவதும் தேடி கடைசியா தமிழ்நாட்டு போலீஸ்கிட்ட கலந்து ஆலோசிச்சு எடுத்த முடிவு .... இந்த வெங்கட் சரண்தான் அந்த நல்லவன்கிறதுதான் ... இத படிச்ச உடனே சிலர் டென்ஷன் ஆகலாம் ஆனா சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும் ..


ok friends மேல சொன்ன எல்லாம் மேட்டரும் கற்பனைதான் யாரும் அந்த பதிவர்கள்கிட்ட போட்டு கொடுதுராதீங்க நான் ஏன் சொல்லறேனா ஏற்கனவே நமக்கும் அந்த பதிவர்களுக்கும் வாய்கால் தகறாரு இருக்கு இதுல இது வேறையா...Wednesday, December 1, 2010

ஏகன் vs சுறா - ஒரு மொக்க chatting

எனக்கு பிடித்த பொழுதுபோக்கு நண்பர்களுடன் chat செய்வது அதிலும் சில நண்பர்களுடன் chat செய்யும்போது பயங்கரமாக கலாய்த்துகொள்வோம் , அப்படிப்பட்ட நண்பர்களுள் ஒருவன்தான் ரங்கபிரபு, நேற்று அவனோடு chat செய்தேன் , அவன் ஒரு விஜய் ரசிகன், அதுவே போதுமே கலாய்க்க....

venkat saran is online


அவன் : இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் my dear friend. My best wishes for all of ur movements


நான் : வாஞ்சிநாதன் நகர் நற்பணி மன்றம் சார்பாக என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் , மிக்க நன்றி .


அவன் : வாஞ்சி நற்பணி மன்ற தலைவரே நீங்கதானே தளபதி 


நான் : நீ இப்படிலாம் சொன்னா மட்டும் நான் அரசியலுக்கு வந்துடுவேன்னு நனைச்சியா , நான் இமய மலைக்கு  போனும் .


அவன் : நான் எப்போ அப்படி சொனேன் ? நீயா imagine பண்ணிக்காத , நான் விஜயவச்சு சொன்னா நீ தலைவர் ரேஞ்சுக்கு போய்டியா ?


நான் : விடுடா சும்மா chat லயாவது சொல்லிக்கலாம்னு பார்த்தா....


அவன் : ஆசைய பாரு, போங்க தம்பி அப்புறம் நாங்கலாம் எங்க போறது ?


நான் : என்ன பா தளபதி மட்டும் என்ன சாதாரண ஆளா? ஜெயலலிதா, விஜயகாந்த் , விஜய் மூனு பேரும் கூட்டணி வச்சு வரபோற தேர்தல சந்திக்க போறங்களாம் , இப்போதான் பஸ் ஸ்டாண்ட்ல நக்கீரன் விளம்பரத்துல பார்த்தேன் .


அவன் : அப்போ எங்க தளபதி கண்டிப்பா அடுத்த MLA ஆகபோரார்னு சொல்லுங்க , Dr. Ilayathalapathi Vijay MLA va ?


நான் : அமாம் MLA தான் Member Of Lorry Drivers Association அவன் நடிக்கற லட்சணத்துக்கு கண்டிப்பா கொஞ்ச நாள்ல சினிமாவ விட்டே துரத்திடுவாங்க , அப்புறம் அவன் லாரி ஓட்டி தான் பொழப்பு நடத்தனும் ...


அவன் : சரி அத விடு கண்டிப்பா நாம இந்தியன் பார்லிமெண்ட்ல இடம் புடிச்சே ஆகனும்.


நான் : கண்டிப்பா நமக்காகவே ரெண்டு சீட்டு எப்பவும் பார்லிமெண்ட்ல காத்திருக்கும் 


அவன் : ok thats good   , நாம ரெண்டு பேரும் சேர்ந்து கரூர் மக்களுக்காக பார்லில குரல் கொடுப்போம் .


நான் : நமக்கு கொடுக்கறது Audience சீட் அங்க இருந்து குரல் கொடுத்தா போலீஸ்ச விட்டு வெளிய துரத்திடுவாங்க ... சரி உங்க தளபதி MLA மேட்டர்க்கு வா..

அவன் : யோ அப்படிலாம் யாரையும் கேவலமா பேசாதையா , தளபதிக்காக உயிரையே கொடுக்குற கூட்டம் எங்களுது பா..


நான் : நீ உயிரைலாம் கொடுக்க வேண்டாம் just உங்க தளபதியோட சுறா படத்த continue வா ரெண்டு show பாரு போதும் , உயிர நீ கொடுக்க வேண்டாம் அதுவா போய்டும் .


அவன் : ரெண்டு தடவ என்ன ஆயிரம் தடவ பார்போம் ..


நான் : மூணாவது தடவ நீ பார்க்கும்போதே செத்துடுவ அப்புறம் எங்க ஆயிரம் தடவ பார்க்குறது ?


அவன் : மனதில் உறுதி வேண்டும் 


நான் : அதுக்கு மொத உயிர் வேண்டும்


அவன் : அந்த படத்துக்கு என்னையா ? நாங்கலாம் ஏகனேயே ரெண்டு தடவ பார்த்துட்டு உயிரோட இருக்கோம் ..


நான் : தல படத்த தப்பா பேசாத அந்த ஏகன் படத்த 16 மொழிகள்ள டப் பன்ன பேச்சிவார்த்தை நடந்துட்டு இருக்கு தெரியுமா ?


அவன் : தமிழ் நாட்டு மக்கள கொன்னது பத்தாதா ? எனது ஆழ்ந்த அனுதாபங்கள் அந்த நாட்டு மக்களுக்கு ..


நான் : தலய ஓட்ட ஆரம்பிச்சுட்டானே என்ன பண்ணலாம் ........?


venkat saran is offline 
இந்த வருடம் ஊழல் வருடம்

இந்த வருடம் ஊழல்களின் வருடம் போல இருக்கு , எனக்கு விவரம் தெரிஞ்சு இதனை ஊழல் ஒரே ஆண்டுல வெளிவருவது ( சினிமாவாட இது  வெளிவரதுக்கு ) இதுதான் முதல் முறை , ஆனா எனக்கு ஒன்னுதான் புரியல எல்லாமே பன்னது பெரிய பெரிய ஊழல்தான் ஆனா பெருசா ஏதும் நடவடிக்கை எடுத்தமாதிரி தெரியல , யாராவது ஒருத்தர ஊழல்ல பிடிக்குறாங்க உடனே ஒரு வாரத்துக்கு அவரை பத்தின மேட்டர் இல்லாம எந்த பேப்பரும் , எந்த சேனலும் நியூஸ் போடுறதில்ல , உடனே சம்மந்தபட்டவர் அவரோட பதவிய ராஜினாமா பண்ணிடுவாரு இல்லேன்னா அவர பதவி நீக்கம் செஞ்சுடுவாங்க அதோட அவ்வளவுதான் , சில பெற மட்டும் கைதும் செஞ்சுருகாங்க , எனக்கு தெரிஞ்சு முதன்முதலா அம்பலம் ஆன பெரிய ஊழல் கேத்தன் தேசாய்வோட ஊழல்தான் அம்மாடி எவ்வளவு சொத்து அந்த ஆளுக்கு ,
அடுத்து மாட்டுனது நம்ம ஐபில் தலைவர் லலித் மோடி , அதுலயும் ஏகபட்ட முறைகேடு, விளையாட்டு மேட்டர்ல  விளையாடிட்டார், அடுத்து விளையாடினது நம்ம சுரேஷ் களவானி சாரி சுரேஷ் கள்மாடி, cnbc tv 18 ல அவர Beautiful peoplenu ஒரு ப்ரோக்ராம்ல பேட்டி எடுத்தாங்க common wealth gamesa பத்தி  என்னா அழகா கதை அளந்தான் , மேட்டர் வெளிய வந்ததுக்கு பின்னாடிதான் தெரிஞ்சது அவரு building plana வச்சுதான் அவ்வளவு பேசுனாருன்னு .
அடுத்து மாட்டினது மகராஷ்டிரா சிஎம் அசோக் சவான் , கார்கில் போர்ல நாட்டுக்காக உயிர விட்டவங்க குடும்பத்துக்கு ஒரே ஒரு வீடு அதுலயும் பிராடு ,

       

என்னடா தமிழ் நாட்டுல எதுவுமே நடக்கலைன்னு பார்த்த நடந்துருச்சு நடத்திட்டார் நம்ம மந்திரி ராஜா , ஒரு லட்சத்து எழுபதஞ்சாயிரம் கோடியாம் யாராவது அதுக்கு எத்தன சைபர்னு எனக்கு சொல்லுங்களேன் , அடுத்து latest எல் ஐ சி வீட்டு கடன் வழங்குறதுல முறைகேடுனு பல பெரிய வங்கி அதிகாரிகள கைது பன்னிருகாங்க ... சரி அடுத்த வாரம் என்ன ஊழல்னு பார்போம் .

Monday, November 29, 2010

ஆஸ்திரேலியாவின் விளையாட்டு வெற்றிகளுக்கு காரனம்

கிரிக்கெட்டிலும் சரி காமன் வெல்த் விளையாட்டு போட்டிகள் மற்றும் இன்னும் பல பல விளையாட்டு போட்டிகளிலும் இந்தியாவை விட ஆஸ்திரேலியா அதிக வெற்றிகளை குவிப்பதற்கு என்ன காரனம் என்று எனக்கு ரொம்ப நாளா பெரிய சந்தேகம் இருந்துச்சு, அதுக்கான விடை நேற்றுதான் தெரிஞ்சுச்சு .


அதுக்கு காரனம் இதுதான் , என்ன ஒரு கண்டுபிடிப்பு !Sunday, November 28, 2010

சர்வம் – போலிகள் மயம்


வணக்கம் நண்பர்களே அதிக வேலை பளு(?) அதனால எனக்கு மெயில்ல வந்த ஒரு காமெடிய இங்க post பண்ணிருக்கேன் படிங்க சிரிங்க

போலி மார்க் சான்றிதழ்களை வழங்கிபொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற முயன்ற மாணவர்கள் சிலர் பிடிபட்டுள்ளதையடுத்துகுற்றவாளிகளைப் பிடிக்ககாவல்துறை தனிப் படைகளை அமைத்துள்ளது. நாடு போய்க் கொண்டிருக்கிற நிலையில்அப்படியே முக்கிய குற்றவாளிகள் சிக்கினாலும்போலீஸ் விசாரணையில் அவர்கள் இப்படி பதில் அளித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உங்க தொழிலே போலி மார்க் சான்றிதழ்கள் தயாரிக்கிறதுதானா?”

இல்லைங்க. பல தொழில்களிலே அதுவும் ஒண்ணு. எந்த சர்டிஃபிகேட் வேணும்னாலும் எங்க கிட்டே கிடைக்கும். போலி பாஸ்போர்ட்போலி விசாபோலி பத்திரம்போலி முத்திரைத் தாள்னு நாங்க தயாரிக்காத டாக்குமென்டே இல்லை. பாக்கறதுக்கு ஒரிஜினலை விட நல்லாவே இருக்கும்

அடப் பாவிங்களா! உங்களுக்கு வேறே தொழிலே தெரியாதா?”

ஏன் தெரியாதுஒரு காலத்திலே கள்ள நோட்டே அடிச்சவங்க ஸார் நாங்க. அங்கே எங்களை விட சீனியர்கள் இருந்தாங்க. அதான் போலி சர்டிஃபிகேட்கள் தயாரிக்கிற வேலையிலே இறங்கினோம்

கவர்மென்ட் செய்ய வேண்டிய வேலையை எல்லாம் நீங்க எப்படிய்யா செய்யலாம்?அது சட்ட விரோதம்னு தெரியாதா?”

என்ன ஸார் பேசறீங்க நீங்கஉங்க கவர்மென்ட்லே எந்த சர்டிஃபிகேட்டையாவது காலா காலத்துலே வாங்க முடியுமாமைல் கணக்கிலே க்யூவிலே நின்னுமாசக் கணக்கிலே இழுத்தடிச்சுகண்டவங்களுக்கெல்லாம் லஞ்சம் கொடுத்துத்தானே எதையும் வாங்க வேண்டியிருக்குதுஎங்க கிட்டே அப்படியில்லை. எந்த சர்டிஃபிகேட்டும் கேட்டவுடனே கிடைக்கும். ஃபிக்ஸட் ரேட். மேற்கொண்டு பைசா தர வேண்டியதில்லை. மக்களுக்கு நீங்களும் நல்லது செய்ய மாட்டீங்கநாங்களும் செய்யக் கூடாதுன்னா எப்படி?”
இதுக்கெல்லாம் உங்களுக்கு பணம் எங்கேயிருந்து கிடைச்சுது?”

போலி செக் கொடுத்துபேங்க்லேர்ந்து பணம் வாங்கித்தான் முதல் போட்டேன்.

எப்படி ஒரிஜினல் மாதிரியே உங்களாலே போலிச் சான்றிதழ்களைத் தயாரிக்க முடியுது?”

நாங்க உங்களை மாதிரி சம்பளத்துக்கு வேலை செய்யறவங்க இல்லை ஸார். தொழில்லே அக்கறை இருக்கிறவங்க. அதனாலேதான் எங்களை ஒழிக்க அரசாங்கத்தாலே முடியலை. போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கிறேன்னு புறப்பட்டீங்க. என்ன ஆச்சுஒரிஜினலையெல்லாம் ரத்து பண்ணிட்டு நிக்கறீங்க. தேவையா உங்களுக்கு இந்த வேலை?”

இப்ப நான் எந்த சர்டிஃபிகேட்டைக் கேட்டாலும் உடனே தர முடியுமா?”

என்ன ஸார் அப்படிச் சந்தேகப்படறீங்கஇப்பவே உங்களுக்கு போலி ப்ரமோஷன் ஆர்டர் போட்டுத் தரவாயாரும் கண்டுபிடிக்க முடியாது. கோர்ட்டுக்குப் போனாக் கூடக் கவலையில்லை. அங்கேயும் எங்க ஆளுங்க இருக்காங்க. தேவைப்பட்டா போலி ஜட்ஜ்மென்டே வாங்கிக் காட்டறேன்

ஐயையோ... அதெல்லாம் வேண்டாம்” 
பயப்படறீங்க போல இருக்குது. சரிபேங்க் லோன் எத்தனை லட்சம் வேணும்பத்தே நிமிஷத்திலே எல்லா டாக்குமென்டையும் ரெடி பண்ணிசேங்ஷனும் வாங்கிக் கொடுத்துடறேன்

யோவ்... கேக்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுய்யா! எப்படி உங்களாலே இதெல்லாம் செய்ய முடியுது?”

தனியா முடியுமா ஸார்அததுக்குன்னு ஆள் வெச்சிருக்கோம். பேப்பர் வாங்கணும். ஸ்டாம்ப் செய்யணும். கையெழுத்துப் போடணும். பிரிண்ட் பண்ணனும். ஏஜென்டுங்க வெக்கணும். டிஸ்ட்ரிப்யூஷன் செய்யணும். டைப்பிஸ்ட்க்ளார்க்கம்ப்யூட்டர் ஆபரேட்டர்பி.ஆர்.ஓ.ன்னு ஏராளமான பேருக்கு சம்பளம் கொடுக்கறோம். பாதி வருமானம் அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுக்கறதிலேயே போயிடுது. ஒரு தொழிலதிபர் ஆகறதுன்னா சும்மாவா?”

ஒரு சட்ட விரோத செயல்லே இத்தனை பேரையா ஈடுபடுத்தறீங்க?”

அதை ஏன் அப்படிப் பாக்கறீங்கஇந்தத் தொழில் மூலமா எத்தனை குடும்பங்களைக் காப்பாத்தறோம்னு பாருங்க. உங்க கவர்மென்டாலே இவங்களுக்கெல்லாம் வேலை கொடுக்க முடியுமாஆனா எங்களுக்கு இன்னும் ஆள் தேவைப்படுது. யாராவது இருந்தா சொல்லுங்க

உங்களாலே கவர்மென்ட்டுக்கு எவ்வளவு கெட்ட பேரு தெரியுமா?”

என்ன கெட்ட பேருசொல்லப் போனாகவர்மென்ட் வேலையை நாங்க குறைச்சிருக்கோம். நான் கட்டற அளவுக்கு வருமான வரி நீங்க கட்டறீங்களா?அரசாங்கத்துக்கு உங்களாலே லாபமாஎன்னாலே லாபமாமனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க
மாட்டிக்குவோம்ன்ற பயமே இல்லையாய்யா உங்களுக்கு?”

நல்ல கேள்வி. இப்படித்தான் என் ஃப்ரண்ட் ஒருத்தன் பத்தாவதே பாஸ் பண்ண முடியாம கஷ்டப்பட்டுக்கிட்டிருந்தான். நான்தான் பரிதாபப்பட்டு டாக்டர் சர்டிஃபிகேட் வாங்கிக் கொடுத்து அவனை போலி டாக்டராக்கினேன். மாட்டிக்கிற மாதிரி சூழ்நிலை வந்ததும்டக்குன்னு அவனை போலி ஸி.பி.ஐ. அதிகாரியா மாத்திட்டேன்

நீ எப்படிய்யா இந்தத் தொழிலுக்கு வந்தே?”

அது பெரிய கதைங்க. எங்கப்பா பெரிய லட்சாதிபதியா இருந்தவருங்க. ஒருநாள் வருமான வரித் துறை அதிகாரிகள் நாலஞ்சு பேர் வந்துவீட்டை சோதனை போட்டு எல்லாத்தையும் அள்ளிக்கிட்டுப் போயிட்டாங்க. அப்புறம்தான் அவங்க போலி வருமான வரித்துறை அதிகாரிகள்னு தெரிஞ்சது

போலீஸ்லே புகார் கொடுத்தீங்களா?”

கொடுத்தோம். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க எங்கப்பா போலீஸுக்கு எக்கச்சக்கமா லஞ்சமும் கொடுத்தார். அப்புறம்தான் அவங்க போலி போலீஸ் அதிகாரிகள்னு தெரிஞ்சது.

ஐயையோ!” 
கவலையிலே எங்கப்பா சாராயம் குடிக்க ஆரம்பிச்சாரு. பாவம்அது கள்ளச் சாராயம்னு அப்ப அவருக்குத் தெரியலை

அப்புறம்?”

கள்ளச் சாராயம் குடிச்சதிலே உடம்பு கெட்டுபலவிதமான வியாதிகள் வந்தது. டாக்டர் கிட்டே போனோம். வியாதி முத்தின பிறகுதான் அவர் போலி டாக்டர்னு புரிஞ்சுகிட்டோம்.

அடடா! நல்ல டாக்டர்கிட்டே போயிருக்கக் கூடாதா?”

நல்ல டாக்டரைத் தேடிக் கண்டுபிடிச்சுப் போனோம். அவர் எழுதி கொடுத்த மருந்தைத்தான் எங்கப்பா சாப்பிட்டார். ஆனாஅதெல்லாம் போலி மருந்துகள்னு எங்களுக்கு முதல்லேயே தெரியாமப் போச்சு...

அட கஷ்ட காலமே!

சாகறதுக்கு முன்னாலே எங்கப்பா என்னைக் கூப்பிட்டு, ‘மகனே... போலிகளாலே என் வாழ்க்கையே சீரழிஞ்சிடுச்சு. அதுக்கு நீ பழி வாங்கணும். போலிகள் மூலமாவே வாழ்க்கையிலே நீ ஜெயிச்சுக் காட்டணும்னு சத்தியம் வாங்கிக்கிட்டாரு
நீ என்ன பண்ணே?”

ஆரம்பத்திலே போலி பாக்கெட் தண்ணிபோலி மினரல் வாட்டர் தயாரிச்சு வித்தேன். வருமானம் போதலை. போலி லாட்டரிச் சீட்டு அச்சடிச்சேன். அரசாங்கம் தடை பண்ணிடுச்சு. திருட்டு வி.சி.டி. போட்டேன். போலீஸுக்கு கமிஷன் குடுத்து கட்டுப்படியாகலை. ரியல் எஸ்டேட் தொழில்லே இறங்கிபோலி மனைகளை வித்தேன். அதுலே எக்கச்சக்க போட்டி. சமாளிக்க முடியலை.

உனக்கு நல்ல சிந்தனையே வராதா?”

வந்ததுங்க. அதனாலேதான் எனக்குப் பதிலா இன்னொருத்தனை பரீட்சை எழுத வெச்சு,ப்ளஸ் டூ பாஸ் பண்ணேன். போலி அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் மூலம் தாசில்தார் ஆஃபீஸ்லே க்ளார்க்கா சேர்ந்தேன். ஆறே மாசத்திலே நானே போலி ப்ரமோஷன் ஆர்டர் போட்டுக்கிட்டு தாசில்தாராவே ஆயிட்டேன்...

அடப்பாவி!

இப்படி படிப்படியா முன்னேறும்போதுதான் மக்களுக்கு சேவை செய்யணும்ங்கற ஆசை வந்தது. அங்கேயே தொழில் நுணுக்கம் கத்துக்கிட்டுபோலி டிரைவிங் லைசென்ஸ்,போலி ஜாதி சான்றிதழ்போலி இருப்பிடச் சான்றிதழ்னு மக்களுக்கு வேண்டிய சான்றிதழ்களை தயாரிக்க ஆரம்பிச்சேன். நல்ல வருமானம் வந்தது. தாசில்தார் வேலையை ராஜினாமா பண்ணி தொழிலதிபர் ஆயிட்டேன்.

உன்னை மாதிரி இந்தத் தொழில்லே இருக்கிற எல்லோருமே லட்சாதிபதிகள்தானா?” 
அப்படிச் சொல்ல முடியாதுங்க. போலி பஸ் டிக்கெட் அச்சடிச்சு கஷ்டப்படறவங்களும் எங்க தொழில்லே இருக்காங்க

போலிச் சான்றிதழ்களைத் தயாரிக்கிறது தப்புன்னு உங்களுக்குத் தோணவே இல்லையா?”

எதுங்க தப்புஎங்க வளர்ச்சியைப் பார்த்துத்தான் இன்னைக்கு அரசாங்கமே க்ளோனிங் முறையிலே போலி ஆடுமாடுகளைக் கூட உருவாக்க ஆரம்பிச்சிருக்குது. நியாயமா காபிரைட் சட்டப்படி அரசாங்கம் எங்களுக்கு நஷ்டஈடே கொடுக்கணும். போனாப் போகுதுன்னு நாங்க அதைக் கேக்கலை

யோவ் எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போடறே?”

அதை விடுங்க ஸார். இப்ப தலைவர்களா இருக்கிற எல்லோருமே ஒரிஜினல்தானா?மக்களையும் தேர்தல் கமிஷனையும் ஏமாத்திட்டுஎத்தனை போலிகள் தலைவர்கள் ஆகியிருக்காங்கஅதைத் தடுக்க உங்களாலே முடியுதாநாங்க ஏமாந்தவங்கன்னுதானே எங்களைப் பிடிக்கிறீங்கஎங்க விஷயத்திலே தலையிட்டா உங்களுக்குத்தான் பிரச்சனை

உன்னை மாதிரி ஆளுங்களை விட்டா இந்த சமுதாயத்துக்கே ஆபத்து. உங்களை எல்லாம் உள்ளே தள்ளாம விட மாட்டோம்

ஓஹோ! அவ்வளவு தூரத்துக்கு துணிஞ்சுட்டீங்களாஅப்ப பிடிங்கஉங்க சஸ்பென்ஷன் ஆர்டர். முடிஞ்சாஇதை போலின்னு நிரூபிங்க.

Thursday, November 25, 2010

நானும் அரசியல் பேசுவேன்

முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா ஒரு லட்சத்து எழுபதஞ்சயாயிரம் கோடி ஊழல் பண்ணாருன்னு சொல்றாங்க ... ஆனா எனக்கு அதுக்கு எத்தன ௦0 போடனும்னும் கூட தெரியாது :(
Best of Billa

Wednesday, September 8, 2010

எல்லாரும் கேட்டுகோங்க - நானும் யோக்கியன்தான், நானும் யோக்கியன்தான்.
நீங்கள் இதற்கு முன்பு ஒரு ISI  முத்திரை குத்திய, ISO certificate வாங்கிய ஒரு நல்லவனை பார்த்துள்ளிர்களா ? பார்க்கவில்லையென்றால் எனக்கு மெயில் அனுப்புங்கள் எனது போட்டோவை அனுப்பி வைக்கிறேன் பார்த்துகொள்ளுங்கள் .


நீங்கள் இதற்கு முன் பால் வழியும் முகத்தை பார்த்துள்ளிர்களா ? இல்லையென்றால் எனது முகத்தை பார்த்துகொள்ளுங்கள் ( முகத்தை close up ல் பார்த்து பயந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல )


இதற்கு முன் நீங்கள் குழந்தையின் சிரிப்பை கேட்டுள்ளிர்களா? இல்லையென்றால் எனக்கு போன் செய்யுங்கள் சிரித்து காட்டுகிறேன் ... (கேட்டதுக்கு பின் வேப்பிலை அடிக்க வேண்டிய அவசியம் வந்தாலும் வரலாம் )எதற்கு இந்த தன்னிலை விளக்கம் என்றால் , என்னோடு பணியாற்றும் இரண்டு பெண்கள் எனது முந்தய இரண்டு பதிவுகளை படித்த பிறகு ... என்னை ஒரு பொறுக்கி ரேஞ்சுக்கு ( இதுக்கெல்லாம் ஒரு ரேஞ்சா ) பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் அதோடு சேர்த்து திட்டும் வேறு , நான் முந்தய பதிவுகளில் எழுதிய அனைத்தும் என் கல்லூரி காலத்தில் நடந்தவை , இப்பொழுது நான் முற்றிலும் மாறிவிட்டேன் , நான் இப்போல்லாம் சைட் கூட அடிபதில்லை , நான் என் நண்பர்களுக்கு சொல்வதெல்லாம் கீழ்க்கண்ட மூன்றுதான் ,


                      " சைட் அடிப்பது ஒரு பாவ செயல் 
                       சைட் அடிப்பது ஒரு பெருங்குற்றம்
                       சைட் அடிப்பது ஒரு மனித தன்மையற்ற செயல்" .ஆகையால் யாரும் தயவுசெய்து சைட் அடிக்காதீங்க, ஒரு உதாரணத்துக்கு நான் அலுவலகத்துக்கு வரும் வழியில் ஒரு பெண் scooty ல் எனை கிராஸ் செய்தாள், அவ்வளவு அழகு , அந்த பெண்னின் வயது 20 + இருக்கும் , உயரம் ஒரு 5.8 இருக்கும் , எடை ஒரு 47 kg இருக்கும் , அந்த pink கலர் sleeve less சுடிதார் அந்த பெண்ணுக்கு perfect match ,   ஒரு முன்று கிலோ மீட்டர் வரை அந்த பெண்ணை பின் தொடர்ந்து பார்த்துக்கொண்டே தான் வந்தேன் ஆனாலும் நான் அவளை சைட் அடிக்கவில்லை, இப்பொழுதாவது நம்புங்கள் நான் யோக்கியன் ..
( அடுத்த முறையாவது கண்டிப்பாக ஒரு நல்ல பதிவாக எழுத முயற்சி பண்றேன் )  

Monday, September 6, 2010

மங்கையரால் மறுக்கபட்டோர் சங்கம்

வணக்கம் நண்பர்களே , நான் போன பதிவுல சொன்ன மாதிரி நானும் என் நண்பர்களும் , பொன்னுங்கலால அடிவாங்குனோம் , அசிங்கபட்டோம் , ஆனா அதுக்காக நாங்க வெட்க்கபடமட்டோம், வேதனபடமட்டோம், துக்கபடமாட்டோம் , துயரபடமாட்டோம் , கஷ்டபடமாட்டோம், கவலைப்படமாட்டோம்.
எப்படியாவது காதல் கல்யாணம் பண்ணிக்கணும் என்பதுதான் எங்கள் வாழ்வின் உயர்ந்த லட்சியம் ... அதுக்காக நாங்க எவ்வளவு வேணாலும் போராடுவோம் .
இருந்தாலும் எங்களுடைய இந்த போராட்டத்துக்கு பக்க பலமா இருக்க சில சங்கங்கள் தேவப்பட்டது அதுக்காக தான் எங்கள் கல்லூரி காலத்துல நாங்க மூனு சங்கங்கள தொடங்கி வெற்றிகரமா இப்ப வரைக்கும் நடத்திட்டு வரோம் , அத பற்றிய சிறுகுறிப்பு ...

1. கன்னிகளால் கைவிடப்பட்டோர் சங்கம் : இந்த சங்கம் எதுக்குனா நல்லா லவ் பன்னிட்டு இடைல ( வேற இடைய நினைசுக்காதிங்க ) ஏற்பட்ட பிரச்சனையால் பிரிஞ்ச பசங்க, மற்றும் பொன்னுங்கலலா ஏமாற்ற பட்ட பசங்களுக்காக தொடங்கப்பட்டது .  நான் இதுல எப்படி சேர்ந்தேனா நான் ஒரு பொண்ண ரொம்ப sincera லவ் பண்ணேன் , அவளும் என்ன பார்த்த சிரிப்பா , பயங்கரமா லுக் விடுவா, சரி நம்ம வண்டிலையும் ஒரு passanger ஏற போகுதேன்னு சந்தோசப்பட்டேன் , ஒருநாள் என் friends என்ன படத்துக்கு கூப்பிட்டாங்க , படத்துக்கு போன காலேஜ் லீவ் போடணும் லீவ் போட்டா அவள பார்க்க முடியாதுன்னு நான் வரலைன்னு சொல்லிட்டு காலேஜ் போனா அவள காணோம் என்னனு விசாரிச்சா அவ அவளோட ஆளோட சினிமாக்கு போயிட்டா , அன்னைக்கு இந்த சங்கத்துல சேர்ந்தவன்தான் இன்னும் வெளிய வரல .2. மங்கையரால் மறுக்கபட்டோர் சங்கம் : இந்த சங்கம்  one side lovers க்காக உருவாக்கப்பட்டது , figures செட் ஆகாத பசங்களும் , பொண்ணுகிட்ட போய் லவ்வ சொல்லி பல்பு வாங்குன பசங்களுக்கான சங்கம் இது .

3. மானம் கேட்டோர் மறுவாழ்வு சங்கம் : இந்த சங்கத்தோட முக்கியமான நோக்கமே , பொன்னுன்களால் மானம் கெட்ட பசங்க எக்காரணம் கொண்டும் மனசு விட்டு தங்கள் முயற்சியை கைவிட்ற கூடாது என்ற நல்ல நோக்கத்துக்காக ... சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தி அவர்களை வழி நடத்துற ஒரு பொறுப்பான பணியை இந்த சங்கம் செஞ்சுட்டு வருது  .


எங்க சங்கத்துல எல்லோர்க்கும் பிடித்த dialougue திரிஷா இல்லேன்னா திவ்யா, பிடிக்காத வசனம் சாரி நான் உன்ன frienda தான் நினைச்சேன் ...... மேற்கண்ட சங்கத்துல சேர உங்களுக்கும் விருப்பம் இருந்தா எனக்கு  மெயில் அனுப்புங்க , எனக்கு இப்போ ரயிலுக்கு நேரமாச்சு ...

Friday, September 3, 2010

பொண்ணுங்க பலவிதம்

இங்க பொண்ணுங்கன்னு நான் சொல்லறது , பொதுவான பொண்ணுங்க இல்ல என் வாழ்க்கைல கிராஸ் ஆனா சில பொண்ணுங்க, 


இந்த பொண்ணு பின்னாடியே சுத்துரத பார்த்தா தக்காளி நீ பத்தான் கிளாஸ் பாஸ் பன்னமாட்ட போலன்னு என் நண்பர்கள் எல்லாம் சொல்லுவாங்க , அந்த அளவுக்கு அனிதான்னு ஒரு பொண்ணு பின்னாடி நாய சுத்துனேன் ( ஒரு வேல மனுஷனா சுத்தி இருந்தா லவ் பன்னிருபலோ) நல்லா அழகான பொண்ணு , அவகிட்ட இருக்குற ஒரே கெட்ட பழக்கம் என்னன்னா எதா இருந்தாலும் அவ பாசமலர் அண்ணன் உமதுரைகிட்ட சொல்லிடுவா , அப்படித்தான் நான் அவகிட்ட போய் i love u சொன்னதையும் அவ அண்ணன்கிட்ட போய் சொல்லிட்டா , உமதுரை குத்துனான் பாருங்க உம குத்தா நனைச்சு பார்க்கும்போதே இன்னமும் வலிக்குது.

அடுத்ததா சிந்து இவள பத்தி பெருசா சொல்ல முடியாது சுமாரான பிகர்தான் , ஆனா இந்த சிந்து பின்னாடி சுத்துனதுகே சந்துக்குள்ள வச்சு பின்னிடாய்ங்க ( என்னது மூத்தர சந்தாவ? அதெல்லாம் இல்ல சாதா சந்துதான் )
அடுத்து ரேணுகா நல்லவேளை இவ பின்னாடி என் நண்பன்தான் சுத்துனான், அழகான பொண்ணு அதோட boy friends, brothers இந்த பிரச்சனைலாம் எதுவும் கடையாது, அவன் அவகிட்ட லவ்வ சொல்ல போகும்போது கூட அவளோட friend  சக்தி மட்டும்தான் இருந்தா, பவுடர் போட்ட பன்னி மாதிரி இருக்கா இவளால என்ன பிரச்சனை வரபோதுன்னு நம்பி போய் ரேனுகாகிட்ட லவ்வ சொன்னான் , சக்தி க்கு இவளவு சக்தி இருக்கும்னு தெரியாம போச்சு அவன தள்ளிவிட்டு படுக்க போட்டு சங்குல மிதிச்சுட்டா .. ஒரு வாரம் ஒழுங்கா அவனால பேசக்கூட  முடியல..

இந்த மாதிரி இன்னும் பல கதை இருக்கு , என் வாழ்க்கைல நானும் என் நண்பர்களும் பொண்ணுங்களுக்காக பல தியாகங்கள் செஞ்சும் இன்னும் நாங்க மொட்ட பசங்களத்தான் சுத்திட்டு இருக்கோம் ...  ஆனா மேல சொன்ன பொண்ணுங்க எல்லாம் கல்யாணம் ஆகி குடியும் குடித்தனமா இருகாங்க ... இப்போ ஏன் நான் இங்க இந்த பதிவ போட்டேன்னா அப்படி நாங்க சைட் அடிச்ச ஒரு பொண்ணுக்கு அடுத்தவாரம் கல்யாணம் , நேற்றுதான் பத்திரிகை வந்துச்சு ...இதுல என்ன கொடுமைனா அழகான பல பசங்க அவ பின்னாடி சுத்தியும் அவ மடங்கல, கடைசியா இப்போ ஒரு wall clock வாயன கல்யாணம் பண்ணிக்க போறா ...இந்த பொண்ணுங்கள புரிஞ்சிக்கவே முடியல .. எப்படியோ அந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் ...  

Thursday, September 2, 2010

10000 ஹிட்ஸ் வர மாதிரி எனக்கும் பதிவெழுத தெரியும்

பதிவுலகத்துக்கு வந்த இந்த ஒரு வாரத்துல நான் கேட்க வேண்டியது நிறைய உள்ளது ஆனால் சிறு பாலகன் நான் கேட்டால் அதற்கு உரிய பதில் கிடைக்காது என்பதற்காக , எனது சார்பாக வட்ட  செயலாளர் வண்டு  முருகனை பேச அழைக்கிறேன்.நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல எதிர் வலைதளகாரண பார்த்து கேட்குறேன் , நீங்க வைச்சுருகறது மட்டும்தான் ப்ளாக்கா? அப்ப வெங்கட் சரண் வைச்சுருகுறது ? என்னையா பண்ணிட்டான் என் கட்சிகறேன் ஏதோ கேபிள் சங்கர் , பரிசல் மற்ற எல்லாத்தையும் பார்த்து அவனும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சான் , அப்படி ஆரம்பிச்சா என்ன பண்ணனும் அத படிச்சு பார்த்து கமெண்ட் போடணும் , அது தானேய உலக வழக்கம் , ஆனா நி ஒரு கமெண்ட் கூட போடாம கடுபெத்திருக்க , அதோட விட்டியா anonymous பசங்ககிட்ட இவனுக்கு கெட்ட வார்த்தைல மெயில் அனுப்பி பழகுங்கடானு சொல்லிருக்க , பழகுறதுக்கு இது ப்ளாக்கா இல்ல பள்ளிகூடமா ? எவ்வளவு கெட்ட வார்த்தை ச்சே , அட இதேமாதிரி சம்பவம் ஏற்கனவே ஒன்னு நடந்துச்சு இதே பையன் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு மொக்க போட்டான், but  அப்ப யாரும் இவ்வளவு step எடுகல, நீ இங்க எவ்வளவு பதிவு போட்டாலும் உன் மொக்கைக்கு கமெண்ட்ஸ் வராது ஒட்டும் போட மாட்டங்க so தயவு செஞ்சு எழுதுறத நிறுத்திடுனு பின்னோட்டம் போட்டான்யா அந்த நாகரிகம் தெரியாது உனக்கு?  ஒன்னு மட்டும் நல்லா சொல்லிக்குறேன் எங்களுக்கும் 10000 பேர் வந்து படிக்குற மாதிரி பதிவெழுத தெரியும் , ஆனா நாங்க எழுத மாட்டோம் , எழுத தெரியாது . கடைசியா எச்சரிக்கிறேன் என் கட்சிக்காரன் வெங்கட் சரண் பதிவுக்கு கமெண்ட் வரைலேன்னா எதிரணி பதிவர்களின் ப்ளோக்குக்கு தயவு செஞ்சு எனக்கும் கமெண்ட் போடுங்கனு வேண்டுகோளோட நூற்றுகணக்கான கமெண்ட்ஸ் வெங்கட் சரன்கிட்ட இருந்து வரும்னு சொல்லி எச்சரிச்சு  விடை பெறுகிறேன் நன்றி வணக்கம் .

மாபெரும் பதிவர் சந்திப்பு கூட்டம்
கடந்த செவ்வாய் அன்று காலை 11 மணி அளவில் பதிவர் சந்திப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது , காலை ஒன்பதரை மணிக்கே பதிவர்கள் வர தொடங்கிருந்தார்கள் , நான் சரியாக 10.15 க்கு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றேன் , எனக்கு முன்பே பதிவர்கள் ராஜா , விஸ்வநாதன் , பிரபாகரன் மற்றும் பலர் வந்து வெட்டியாக பேசியபடியே தம் அடித்து கொண்டிருந்தனர் , நேரம் ஆக ஆக பதிவர்களின் கூட்டம் அதிகமாகிய படியே இருந்தது , கிட்டத்தட்ட 100 க்கும் அதிகமான பதிவர்கள் வந்திருந்தனர் ஆனால் ரொம்ப நேரம் ஆகியும் பதிவர்களின் தலைவன் , எழுச்சி நாயகன் சிவசுப்ரமணியத்தை காணவில்லை , 

தலைவரின் வருகை தாமதத்தால் யாருக்கு லாபமோ இல்லையோ , நம்ம டீ கடை பழனிசாமிக்கு நல்ல வருமானம் , காத்திருந்த நேரத்தில் பதிவர்கள் டீ , பஜ்ஜி , வடை , தம் என வாங்கியபடியே இருந்தனர் , ஒரு வழியாக 11.15 மணியளவில் தலைவர் சிவசுப்ரமணியம் வந்தார் .. ஆள் பார்க்க ஓம குச்சி நரசிம்மனுக்கு முடி இருந்தா எப்படி இருந்துருப்பரோ அந்த மாதிரி சுருக்கமா சொல்லனும்னா கார சேவுக்கு காக்கி சட்டை போட்ட மாதிரி இருந்தார் .... பின்பு கூட்டம் தொடங்கியது அணைத்து பதிவர்களும் வரிசையாக நின்று பதிந்தோம் எங்கள் கல்வி தகுதிகளை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ....


படங்கள் : எங்கிருந்தோ சுட்டது .

Wednesday, September 1, 2010

இது திரை விமர்சனம் அல்ல
நாமலும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சாச்சு so அதனால எதாவது எழுதுனாதான் மரியாதையா இருக்கும் , என்ன எழுதுறதுன்னு மல்லாக்க படுத்து விட்டத்த பார்த்து யோசிச்சதுல எதாவது படத்துக்கு போய் அத பத்தி நம்ம கேபிள் அண்ணே மாதிரி விமர்சனம் எழுதலாம்னு friends வோட படத்துக்கு போனேன் , ஒரு 275 கிட்ட காலி , இதெல்லாம் ஒரு மேட்டரா? னு கேட்பீங்க , 
அப்ப நான் பத்தாவது படிச்சுட்டுருந்தேன் ( இப்ப வரைக்கும் நீ அதானே படிசுருக்கனு யாரும் உண்மைய சொல்லிற கூடாது ) அப்ப படத்துக்கு போறது எங்க வீட்ல ஒரு தேசத்துரோக செயல் , இருந்தாலும் திருட்டு தனமா போயிட்டுதான் இருந்தேன் .. காசுக்கு என்ன பண்றது, சில சமயம் ராத்திரி டிப்பனுக்கு பரோட்டா வேணும் , பாணி பூரி வேணும்னு காச வாங்கிட்டு சாப்பிட போறமாதிரி போயிட்டு சாப்பிடம வீட்டுக்கு வந்து தூங்கிடுவேன் , மறுநாள் அந்த காச வச்சு படம் பார்பேன் , இப்படி தமிழ் சினிமா துறைக்காக என்னையே வருத்திகிட்ட எனக்கு அவுங்க சிலை வைக்க வேணாம் ( வைக்கவும் மாட்டாங்க ) ஆனா ஒரு நல்ல படமாவது கொடுக்கலாம்ல , நான் போன படம் மாஸ்கோவின் காவேரி , இதுக்குமேல நான் ஏதும் சொல்ல வேணாம்னு நெனைக்கிறேன் , போஸ்டரையும், டிரைலரையும் பார்த்து இதுவரைக்கும் பிட்டு படத்துக்கு போய்தான் ஏமாந்துருக்கேன்....but this first time.... என்னமோ போங்க .... மொத்தத்தில் மாஸ்கோவின் காவேரி - Iam sorry...