Monday, December 6, 2010

என்னை அழ வைத்த டிவி நிகழ்ச்சி

எச்சரிக்கை : தப்பி தவறி கூட பெண்கள் இந்த பதிவை படிக்க வேண்டாம் ..
பல பேர் சேர்ந்து பொது மாத்து போட்டாலும் அசால்டா அழுகாம போற ஆள் நான் ஆனா என்னையே ஒரு டிவி நிகழ்ச்சி அழுக வச்சுடுச்சு ... ஆனா இது நடந்தது நான் பத்தாவது படிக்கும்போது.. பொதுவா ஆண்கள் எல்லாத்துக்கும்  சுய இன்ப பழக்கம் இருக்கத்தான் செய்யும் . நான் பத்தாவது படிச்சுட்டு இருக்கும்போது வயசுக்கு வந்தேன் , யாரும் தப்பா நனைச்சுகாதிங்க that means எனக்கு அப்போதான் அந்த மேட்டர்லாம் கொஞ்ச கொஞ்சமா தெரிஞ்சுச்சு ..சரி என்னதான் அதுல இருக்குனு தெரிஞ்சிக்கலாம்னு ஆரம்பிச்சு ஒரு ஒன்னற மாசம் அதுபாட்டுக்கு நடந்துட்டு இருந்துச்சு அப்போ ஒருநாள் நான் டிவி பார்த்துட்டு இருந்தேன் , ஒவ்வொரு சேனலா மாத்திட்டு இருக்கும்போது ஒரு சேனல்ல ஒருத்தர் சட்டை போடாம உட்கார்ந்து ஏதோ உரல்ல வச்சு இடிச்சுட்டு இருந்தார் , என்னடா இதுன்னு ஆர்வமா பார்த்தேன் கொஞ்ச நேரத்துல அதே மாதிரி நிறைய போட்டோ மாறி மாறி வந்துச்சு .. அப்புறமா ஒருத்தர் வந்து பேச அரம்பிசாரு அவர் முடிலாம் கருப்பா இருக்க கிர்தா மட்டும் வெள்ளையா இருந்துச்சு , ஆளு வித்தியாசமா இருக்காரே அப்படி என்னதான் சொல்ல போறார்னு பார்க்கலாமேன்னு பார்த்தேன் .. இனி அவர் , ஏன் எதுக்கு ஏன்டா ? இந்த வயசுலேயே இந்த _______ பழக்கத்த பழகிட்டு நியும் கெட்டு பின்னாடி உன்ன நம்பி வரபோற பொண்ணோட வாழ்க்கையையும் சேர்த்து கேடுகீறிங்க ? தயவுசெஞ்சு சொல்றேன் நீங்கலாம் கல்யாணமே பண்ணிக்காதீங்க சே... இத பார்த்த உடனே என் கன்னு ஆட்டோமேட்டிக்கா கலங்கிடிச்சு.. அய்யய்யோ இது இவ்வளவு பெரிய தப்பா இது தெரியாம ஒன்னற மாசமா பன்னிட்டு இருக்கோமே ... அப்போ அவருக்கு ஒரு போன் வருது .. ம் சொல்லு என்னது அடுத்த மாசம் கல்யாணமா ? நீயெல்லாம் ஏன்டா கல்யாணம் பண்ணிக்க போற , உனக்கு அறிவு இருக்கா இல்லையா அந்த பொண்ணு என்ன பாவம் பன்னா அவள கல்யாணம்பன்னி உன்னால என்ன சுகத்த கொடுக்க முடியும் மொத நி போன்ன வை ... நான் அழுதே விட்டேன் ஏன்னா நான் அப்போதான் அனிதானு ஒரு பொன்ன கரெக்ட் பன்னிட்டு இருந்தேன் .. அப்படியே அவர் அவரோட டென்ஷன்ன கட்டுபடுத்திகிற மாதிரி என்என்னமோ பன்னி திரும்பவும் பேச அரம்பிசாரு .. நான் சொல்லறதே கேளுங்க ஏதோ நடந்தது நடந்துபோச்சு என்ன உங்க தாத்தாவா நனைச்சிகுங்க சேலத்துக்கு வாங்க என்ன வந்து பாருங்க நாங்க பழங்காலத்து ஓலை சுவடிகளை வச்சு பல மருந்து தயாரிச்சிருக்கோம் வாங்க நாங்க இருக்கோம்னு வாசன் ஐ கேர் மாதிரி சொன்னாரு, இத கேட்ட உடனேதான் எனக்கு உயிரே வந்துச்சு அப்போ நான் நினைச்சிகிட்டேன் உண்டியல ஒரு 120 ருபா இருக்கு எப்படியோ இன்னும் ஒரு 30 ருபா சேர்த்து யாருக்கும் தெரியாம சேலத்துக்குபோய் இந்த டாக்டர் தாத்தாவ பார்த்துடணும்னு முடிவு பண்ணேன் .. அப்பறம் அந்த பழகத்தா அதோட விட்டாச்சு .. அப்பறம் காலேஜ் சேர்ந்து விவரம் தெரிஞ்ச அப்புறம்தான் தெரிஞ்சிச்சு அவர் சொன்னதெல்லாம்  பொய்னு.   இப்படித்தான் சின்ன வயசுல டிவிய பார்த்து misunderstand ஆல குழப்பம் ஆயிடுச்சு. நான் பரவாயில்லை என் நண்பர் ஒருத்தர் சின்ன வயசா இரும்போது டிவி பார்த்துட்டு இருந்துருக்காரு அப்போ நம்ம அஜித் நடிச்ச உயிரோடு உயிராக னு ஒரு படம் ஓடிட்டு இருந்துருக்கு அதுல அஜித் ஹீரோயின் கன்னத்துல முத்தம் கொடுத்துருக்காரு அத இவர் பார்த்துட்டு இருக்கும்போது இவர் பக்கத்து வீட்டு பசங்க இவர விளையாட கூப்டாங்கனு இவர் போயிட்டாரு போனவர் கரெக்டா படத்தோட கிளைமாக்ஸ்லதான் வந்துருகாரு அப்போ ஹீரோயின் பிரசவ வழில துடிச்சுருகாங்க பக்கத்துல அஜித் பதறிட்டு இருக்காரு இத பார்த்த உடனே நம்ம நண்பர் என்ன நனைச்சிட்டாரு பொண்ணுங்களுக்கு கன்னத்துல முத்தம் கொடுத்துட்டா அவங்களுக்கு குழந்தை பிறந்துடும்னு நினைச்சிட்டார், அப்பவே அந்த பிஞ்சு மனசுல இது நஞ்சா விழுந்துடிச்சு, அதுக்கு அப்புறம் அவரு 9  வது படிக்கும்போது ஒரு பொன்ன லவ் பன்னாரு ஆனா அந்த மேட்டர மனசுல வட்சிட்டு அந்த பொண்ணுக்கு ஒரு முத்தம்கூட கொடுக்கல, என்னடா இவன் இப்படி நம்மள காய விடறானேன்னு அந்த பொண்ணு இவர divorce பண்ணிடுச்சு இல்ல இல்ல கட் பண்ணிடுச்சு , இப்படியே இவருக்கு அஞ்சாறு லவ் போனதுக்குப்புறம்தான் உண்மையே தெரிஞ்சிச்சாம்... அது அப்படி இல்லைன்னு .

2 comments:

  1. சூப்பருங்க, இந்த சேலம் சித்த வைத்தியருங்க தொல்லை தாங்க முடியலிங்க, மொதல்ல இவனுங்களுக்கு யாராவது மருந்த குடுத்து கொல்லணும்.

    ReplyDelete
  2. இரவு வானம் என் இனம் நீங்க.. என் feelingsa நல்லா புரிஞ்சிருரிகீங்க

    ReplyDelete