Friday, January 28, 2011

சாருவும் நாங்களும்

நான் தமிழில் வெளிவரும் வலைமனைகள் எதையும் படிப்பதில்லை என்பதால் இதுவரை அது என் கவனத்துக்கு வரவில்லை.  அதில் நான் கண்ட பல விஷயங்கள் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின; மன உளைச்சலைக் கொடுத்தன.....


மேற்கண்டவற்றை சாரு தனது இணைய தளத்தில் ஒரு பதிவில் கூறியது படித்ததில் பிடித்தது


http://www.karundhel.com/2010/11/1.ஹ்த்ம்ல்
http://parthichezhian.blogspot.com/2010/07/blog-post_15.ஹ்த்ம்ல்

மேற்கண்ட இந்த லிஸ்டும் சாரு அவர்கள் அறிமுக படுத்தியதுதான் , மேலே உள்ள இந்த வலைமனைகள் மட்டும் என்ன சைனிஸ் மொழியிலைய இருக்கு , இது போன்று நிறைய முரண்பாடுகள் அவருடைய எழுத்தில் உண்டு அதை அவரது இனைய தளத்தை தொடர்ந்து படிபவர்களுக்கு தெரியும் ... ஒன்ன யாரு இதெல்லாம் படிக்க சொன்னது பிடிக்கலேன்னா மூடிட்டு ( லேப் டாப்பை) போக வேண்டியதுதானேனு நீங்க கேட்கலாம் , அதுக்கும் ஒரு காரனம் இருக்கு , இதுவும் அவர் சொன்னதுதான் படிங்க ..

   கிடைத்த gap-இல் உள்ளே நுழைந்திருந்தால் நான் இன்று மணிரத்னம் அளவுக்குப் புகழ்பெற்ற இயக்குனராக இருந்திருப்பேன்."

அப்போது எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் நான் இப்போது மத்திய மந்திரியாக இருந்திருப்பேன். 

அவ்வளவு எதற்கு?  25 ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன்.  ஜக்மோகன் தில்லி மாநிலத்தின் கவர்னராக இருந்த போது சில காலம் நான் அவரது ஸ்டெனோவாக இருந்தேன்.  அப்போது இந்திரா காந்திக்கு ஒரு மதராஸி ஸ்டெனோ தேவைப்படுவதாக ஜக்மோகன் என்னிடம் சொன்னார்.  என்னுடைய தகுதி, ஒரு தவறு கூட இல்லாமல் டைப் செய்வேன். அப்போது நான் இந்திரா காந்தியிடம் சென்றிருந்தால் இந்நேரம் ப. சிதம்பரத்தின் இடத்தில் இருந்திருப்பேன்.  

மேலே உள்ள இந்த விஷயம்லாம் சாரு ஒரு பதிவில் கூறியது , அவளவுதான் இந்த பதிவை வெளியிட்ட அன்னைக்கு ட்விட்டர் முழுதும் இந்த புராணம்தான் , கிழே இருக்குற சில ட்விடுகளை படிங்க கண்டிப்பா சிரிப்பீங்க ...

,
சின்ன‌ வ‌ய‌தில் யார் அடித்தாலும் சுவ‌ர் மாதிரி நிற்பேன். தொட‌ர்ந்திருந்தால் திராவிட் ஆகியிருக்க‌லாம்

7 வ‌ய‌தில் த‌மிழ் தேர்வில் யாருக்கும் புரியாத‌ மாதிரி எழுதிய‌வ‌ன் நான்.தொட்ர‌ந்திருந்தால் கோண‌ங்கி ஆகியிருப்பேன்

எல்.கே.ஜி ப‌டிக்கும்போதே அடுத்த‌வ‌னை ஏமாற்றி மிட்டாய் வாங்கிய‌வ‌ன் நான் . தொட‌ர்ந்திருந்தால் சாரு ஆகியிருப்பேன்

3 வயதில் மொக்கை போட்டவன் நான், தொடர்ந்திருந்தால் கார்க்கி ஆகியிருப்பேன்

12 வ‌ய‌தில் ப‌க்க‌த்து வீட்டு அங்கிளின் க‌ம்ப்யூட்ட‌ரை துடைத்த‌வ‌ன் நான். தொட‌ர்ந்திருந்தால் நாராய‌ண‌மூர்த்தி ஆகியிருப்பேன் 

 4வ‌ய‌திலே அம்மாஅப்பா விளையாட்டு விளையாடிய‌வ‌ன் நான்.அதை தொட‌ர்ந்திருந்தால் இந்நேர‌ம் த‌ச‌ர‌த‌னையே மிஞ்சியிருப்பேன் 

  இதெல்லாம் கார்கியின் ட்விட்டர் ட்விட்டுகள் தான் இன்னும் இதுபோல் பலர்  
ட்விட்டி ( திட்டி ) இருக்கிறார்கள் , பதிவின் நீளம் கருதி அதை நான் இங்கு வெளியிடவில்லை , இதற்காகவேனும் இவரது இணையதளத்தை படிக்க தோனுகிறது . Tuesday, January 25, 2011

அன்புள்ள கருணாநிதிக்கு கண்ணீருடன் எழுதுவது

என்னடா இவன் வழக்கமா மொக்கதான் போடுவான் இன்னிக்கு கருணாநிதி பெயரல்லாம் தலைப்புல இருக்கே ஒரு வேள அரசியல் மேட்டர்தான் எழுத போறானோனு  தப்பா நெனச்சிறாதிங்க, ஆபீஸ் அரசியலே தாங்க முடியாம ராமதாஸ் அய்யா மாதிரி மாறி மாறி கட்சி தாவுர ஆளு நான் , இதுல எங்க தமிழ்நாட்டு அரசியல் பத்தி எழுதுறது , சரி விஷயத்துக்கு வரேன் . 

வீட்ல போர் அடிக்குதுன்னு டிவிய ஆன் பன்னா ஒன்னு இளைஞன்னு ஒரு கிழ... சாரி சாரி நம்ம கலைஞன் வரறாரு சரி வேற சேனல் பார்க்கலாமேன்னு மாத்துனா கலாநிதி மாறன் வழங்கும்னு ஜூம்ல காண்பிச்சு அடிக்கடி கடுபேத்துறாங்க, டிவியே வேணாம்னு சினிமாக்கு போனேன் , தெரியா தனமா பேச்சு துணைக்குகூட ஆள் இல்லாம தனியா போயிட்டேன்,படம் என்னமோ நல்லாத்தான் இருந்துச்சு ஆனா படம் போடுறதுக்கு முன்னாடி ஒரு விளம்பரம் போட்டாங்க பாருங்க அன்புள்ள கலைஞருக்கு ஆனந்தி எழுதுவதுன்னு,ஆரம்பிச்சி அஞ்சு நிமிசத்துக்கு மேல ஓடுது , விளம்பரத்துல கொடுக்குற பில்ட் அப்பும் தாங்கல பக்கத்துல பேச்சு துணைக்கும் ஆளில்ல மொத்ததுல வடிவேல் ஸ்டைல்ல சொல்லனும்னா முடியல...இதுல அந்த விளம்பரத்த இடைவேளைல வேற மறுபடியும் போட்டாங்க .. அய்யா கலைஞர் அவர்களே இதே மாதிரி விளம்பரத்த எப்ப பார்த்தாலும் டிவி , தியேட்டர்னு எல்லா எடத்துலயும் போட்டு என்ன மாதிரி அப்பாவி ரசிகர்கள் எல்லாம் மனம் நொந்து செத்துடோம்னா  அப்புறம் நீங்க கதை வசனம் எழுதுற படத்த பார்க்ககூட ஆள் இருக்க மாட்டோம் ( இப்ப மட்டும் யார் இருக்கா ? ) ஏற்கனவே புதுக்கோட்டை , வேதாரண்யம் பக்கத்துல இலங்கை காரேன் சுட்ரதால உங்க படம் பார்க்க ஆளுங்க குறைஞ்சுகிட்டே வராங்க ( அந்த ஒரு காரணதுக்காகவாது இலங்கை கடற்படை மேல நடவடிக்கை எடுக்க சொல்லுங்க தலைவரே )  நீங்ககூட பாராட்டு விழா , பட்டிமன்றம் , மானாட மயிலாடனு லைவ்வா நடிகர் , நடிகைகள பார்த்துகிறீங்க ஆனா நாங்க ஏதோ டிவி , தியேட்டர்னு தான் பார்க்க வேண்டியது இருக்கு இதுல அங்கயும் நீங்களே வந்தா நாங்க என்ன பண்றது?  சுத்தி சுத்தி உங்களையே பார்க்குறதுக்கு நீங்க என்ன தஞ்சாவூர் பெரிய கோவிலா ? அதனால எதாவது யோசிச்சு செய்ங்க ..