Tuesday, February 14, 2012

நண்பனின் துரோகம்

இந்த பதிவில் வரும் தகவல்கள் அனைத்தும் நம்பத்தகுந்த ஒரு சினிமா விநியோகஸ்தர் நமக்கு அளித்தவை என்பதை சிரிக்காமல் தெரிவித்துகொள்கிறோம் .

அன்று பொங்கல் தினம் நேரம் காலை 5 மணி , அதிகாலை மூன்று மணி முதலே திரைஅரங்கின் முன் ரசிகர்கள் கூட்டம், ஒரு புறம் தலைவரின் கட் அவுட் க்கு பாலாபிசேகம் செய்துகொண்டிருந்தனர் அவரது உயிர் ரசிகர்கள் , மறு புறம் எப்பொழுது படப்பெட்டி வரும் என்று ஆவலுடன் காத்துகொண்டிருந்தது மற்றொரு கூட்டம் , 1000 வாலா வெடிக்க , ரசிகர்களின் விசில் காதை கிழிக்க வந்தது முதல் நாள் இரவு முதலே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருந்த படப்பெட்டி ..

இவ்வளவு வரவேற்பு பொங்கல் தினத்தன்று எந்த படத்திற்கு கிடைத்திருக்கும் என்று நீங்கள் யுகித்திருபிர்கள் ஆம் உங்கள் யூகம் சரிதான் அது இரண்டாம் எம் ஜி ஆர் , ரசிகர்களின் இதய தெய்வம் , கிராமத்து நாயகன் , இளைஞர்களின் விடி வெள்ளி , எங்கள் அண்ணன் ராமராஜன் அவர்கள் நடித்த மேதை படம்தான் .




ரசிகர்களின் இவ்வளவு வரவேற்பும் , ஹாலிவுட் படங்களுக்கு இணையான இல்லை இல்லை ஹாலிவுட் படங்களையே மிஞ்சும் அளவிற்கு இருந்த காட்சி அமைப்பும் திரைபடத்தின் வெற்றியை உறுதி செய்தது , இதை கண்ட தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ். ஏ. சந்திரசேகர் மற்றும் அவரது மகன் விஜய்யும் எங்கே மேதை படத்தால் தனது நண்பன் படத்தின் வெற்றி பாதிக்கபடுமோ என்று அச்சம் கொண்டனர் . அவர்கள் பயத்திற்கும் ஒரு காரணம் இருந்தது , இதோ சில உதாரணங்கள் ..




சேலத்தில் ஒரு பிரபல மல்டி ப்ளெக்ஸ் திரைஅரங்கில் பொங்கல் அன்று காலை 11 மணி காட்சியில் மேதை படத்தை திரையிட்ட திரைஅரங்கு  ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிய சிலர் அமர இடமின்றி நின்றுகொண்டே படத்தை கண்டு மகிழ்ந்தனர் , ஆனால் நண்பன் படத்தை திரையிட்ட திரை அரங்கமோ வெறும் 10 பேரை வைத்து கொண்டு படத்தை ஓட்டினர். இதுபோன்ற பல நிகழ்வுகள் தமிழகம் முழுதும் நடந்தது .



இதையெல்லாம் கண்டு பொறுக்க முடியாத சந்திரசேகர் மற்றும் விஜய் மேதை திரைபடத்தை திரையிட்ட திரை அரங்குகள் மற்றும் வெளியிட்ட விநியோகஸ்தர்களை மிரட்டியும் பணத்தை கொடுத்ததும் மூன்றாவது நாளே படத்தை மாற்ற செய்தனர் , உதாரனமாக எங்கள் ஊரில் மேதை படத்தை எடுத்துவிட்டு மயூரி நடித்த மயக்கும் மங்கை என்ற பிட் படத்தை திரையிட்டனர் , கவர்ச்சி நடிகை மயூரிக்கு முன்பே ட்ரவுசர் போட்டது எங்கள் தலைவர்தான் அப்படி இருக்க எப்படி எங்கள் தலைவர் படத்தை தூக்கலாம் என்று ரசிகர்கள் போராட்டத்தில் இறங்கினர் .




போராட்டம் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது , நாளை விஜய் நடிக்கும் துப்பாக்கி மற்றும் பவர் ஸ்டார் டாக்டர் ஸ்ரீனிவாசனின் ஆனந்த தொல்லை படங்கள் ஒன்றாக வெளியானால் , விஜய் போன்ற மூத்த நடிகர்களின் இந்த வெறி , பவர் ஸ்டார் டாக்டர் ஸ்ரீனிவாசன் போன்ற இளம் நடிகர்களின் வளர்ச்சியை பாதிக்கும், அப்படி ஏதும் நடக்காமல் இருக்க இதுபோன்ற போரட்டங்கள் தொடர வேண்டும்.

Sunday, February 12, 2012

மின்சாரமே கனவு


அடிச்சும் கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதிங்க மாதிரி, 8 மணிநேரம் கரண்ட்ட கட் செஞ்சும் கேட்பாங்க அப்பவும் ஒத்துக்காதிங்கனு உதயகுமார் சொல்லிட்டார் போல , கூடங்குளம் அணுமின் நிலையம் திறந்தா மட்டும்தான் கரண்ட் பிரச்சன தீரும் னு மக்களும் பேச ஆரம்பிச்சுட்டாங்க ( என்னது எந்த மக்களா?? எங்க வீட்டு பக்கத்துல மூனு பேர் நேத்து பேசிட்டு இருந்தாங்க அவங்கதான் ) 



காஸ் சிலின்டர் வர 30 நாள் ஆகுதுன்னு கரண்ட் அடுப்பு வாங்குனா கரெக்ட்டா காலைல 6 to 9 கரண்ட் கட் ஆகுது , அதனால முதல் நாள் நைட்டே சமைச்சு மறுநாள் சாப்பிட வேண்டியதா இருக்கு, இப்படி கரண்ட் கட் பத்தி புலம்பும் போதெல்லாம் என் பக்கத்துல நின்னு ஆற்காடு வீராசாமி சிரிக்கிறமாதிரியே  இருக்கு , என்ன எப்படி திட்டுனிங்க இப்ப அனுபவிங்கடா னு சொல்ற மாதிரி இருக்கு , அரவிந்த்சாமி னா மின்சாரகனவு ஆற்காடு வீராசாமி னா மின்சாரமே கனவு னு sms  லாம் அனுப்பி அவர ஒட்டிட்டு இருந்தோம் அப்பகூட 4 மணிநேரம்தான் கரண்ட் போச்சு அதுலயும் எங்க ஏரியால ஞாயிற்று கிழமையும் , பண்டிகை நாள் அப்பவும் கரண்ட் கட் ஆகாது ஆன இப்போ 8 மணிநேரம் கரெக்ட் டா புடுங்குறாங்க .




ஏய் ஆபிஸருங்களா உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா ?? மின்சார துறை அதிகாரிங்க யாரும் அடிக்கடி வெளிய வராதிங்க யாராவது ஒன்பதாவது படிக்கிற பசங்க கடுப்புல கத்தி எடுத்து சொரிவிட போறாங்க !

Friday, January 28, 2011

சாருவும் நாங்களும்









நான் தமிழில் வெளிவரும் வலைமனைகள் எதையும் படிப்பதில்லை என்பதால் இதுவரை அது என் கவனத்துக்கு வரவில்லை.  அதில் நான் கண்ட பல விஷயங்கள் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின; மன உளைச்சலைக் கொடுத்தன.....


மேற்கண்டவற்றை சாரு தனது இணைய தளத்தில் ஒரு பதிவில் கூறியது 



படித்ததில் பிடித்தது


http://www.karundhel.com/2010/11/1.ஹ்த்ம்ல்
http://parthichezhian.blogspot.com/2010/07/blog-post_15.ஹ்த்ம்ல்

மேற்கண்ட இந்த லிஸ்டும் சாரு அவர்கள் அறிமுக படுத்தியதுதான் , மேலே உள்ள இந்த வலைமனைகள் மட்டும் என்ன சைனிஸ் மொழியிலைய இருக்கு , இது போன்று நிறைய முரண்பாடுகள் அவருடைய எழுத்தில் உண்டு அதை அவரது இனைய தளத்தை தொடர்ந்து படிபவர்களுக்கு தெரியும் ... ஒன்ன யாரு இதெல்லாம் படிக்க சொன்னது பிடிக்கலேன்னா மூடிட்டு ( லேப் டாப்பை) போக வேண்டியதுதானேனு நீங்க கேட்கலாம் , அதுக்கும் ஒரு காரனம் இருக்கு , இதுவும் அவர் சொன்னதுதான் படிங்க ..

   கிடைத்த gap-இல் உள்ளே நுழைந்திருந்தால் நான் இன்று மணிரத்னம் அளவுக்குப் புகழ்பெற்ற இயக்குனராக இருந்திருப்பேன்."

அப்போது எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் நான் இப்போது மத்திய மந்திரியாக இருந்திருப்பேன். 

அவ்வளவு எதற்கு?  25 ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன்.  ஜக்மோகன் தில்லி மாநிலத்தின் கவர்னராக இருந்த போது சில காலம் நான் அவரது ஸ்டெனோவாக இருந்தேன்.  அப்போது இந்திரா காந்திக்கு ஒரு மதராஸி ஸ்டெனோ தேவைப்படுவதாக ஜக்மோகன் என்னிடம் சொன்னார்.  என்னுடைய தகுதி, ஒரு தவறு கூட இல்லாமல் டைப் செய்வேன். அப்போது நான் இந்திரா காந்தியிடம் சென்றிருந்தால் இந்நேரம் ப. சிதம்பரத்தின் இடத்தில் இருந்திருப்பேன்.  

மேலே உள்ள இந்த விஷயம்லாம் சாரு ஒரு பதிவில் கூறியது , அவளவுதான் இந்த பதிவை வெளியிட்ட அன்னைக்கு ட்விட்டர் முழுதும் இந்த புராணம்தான் , கிழே இருக்குற சில ட்விடுகளை படிங்க கண்டிப்பா சிரிப்பீங்க ...

,
சின்ன‌ வ‌ய‌தில் யார் அடித்தாலும் சுவ‌ர் மாதிரி நிற்பேன். தொட‌ர்ந்திருந்தால் திராவிட் ஆகியிருக்க‌லாம்

7 வ‌ய‌தில் த‌மிழ் தேர்வில் யாருக்கும் புரியாத‌ மாதிரி எழுதிய‌வ‌ன் நான்.தொட்ர‌ந்திருந்தால் கோண‌ங்கி ஆகியிருப்பேன்

எல்.கே.ஜி ப‌டிக்கும்போதே அடுத்த‌வ‌னை ஏமாற்றி மிட்டாய் வாங்கிய‌வ‌ன் நான் . தொட‌ர்ந்திருந்தால் சாரு ஆகியிருப்பேன்

3 வயதில் மொக்கை போட்டவன் நான், தொடர்ந்திருந்தால் கார்க்கி ஆகியிருப்பேன்

12 வ‌ய‌தில் ப‌க்க‌த்து வீட்டு அங்கிளின் க‌ம்ப்யூட்ட‌ரை துடைத்த‌வ‌ன் நான். தொட‌ர்ந்திருந்தால் நாராய‌ண‌மூர்த்தி ஆகியிருப்பேன் 

 4வ‌ய‌திலே அம்மாஅப்பா விளையாட்டு விளையாடிய‌வ‌ன் நான்.அதை தொட‌ர்ந்திருந்தால் இந்நேர‌ம் த‌ச‌ர‌த‌னையே மிஞ்சியிருப்பேன் 

  இதெல்லாம் கார்கியின் ட்விட்டர் ட்விட்டுகள் தான் இன்னும் இதுபோல் பலர்  
ட்விட்டி ( திட்டி ) இருக்கிறார்கள் , பதிவின் நீளம் கருதி அதை நான் இங்கு வெளியிடவில்லை , இதற்காகவேனும் இவரது இணையதளத்தை படிக்க தோனுகிறது . 



Tuesday, January 25, 2011

அன்புள்ள கருணாநிதிக்கு கண்ணீருடன் எழுதுவது

என்னடா இவன் வழக்கமா மொக்கதான் போடுவான் இன்னிக்கு கருணாநிதி பெயரல்லாம் தலைப்புல இருக்கே ஒரு வேள அரசியல் மேட்டர்தான் எழுத போறானோனு  தப்பா நெனச்சிறாதிங்க, ஆபீஸ் அரசியலே தாங்க முடியாம ராமதாஸ் அய்யா மாதிரி மாறி மாறி கட்சி தாவுர ஆளு நான் , இதுல எங்க தமிழ்நாட்டு அரசியல் பத்தி எழுதுறது , சரி விஷயத்துக்கு வரேன் . 













வீட்ல போர் அடிக்குதுன்னு டிவிய ஆன் பன்னா ஒன்னு இளைஞன்னு ஒரு கிழ... சாரி சாரி நம்ம கலைஞன் வரறாரு சரி வேற சேனல் பார்க்கலாமேன்னு மாத்துனா கலாநிதி மாறன் வழங்கும்னு ஜூம்ல காண்பிச்சு அடிக்கடி கடுபேத்துறாங்க, டிவியே வேணாம்னு சினிமாக்கு போனேன் , தெரியா தனமா பேச்சு துணைக்குகூட ஆள் இல்லாம தனியா போயிட்டேன்,படம் என்னமோ நல்லாத்தான் இருந்துச்சு ஆனா படம் போடுறதுக்கு முன்னாடி ஒரு விளம்பரம் போட்டாங்க பாருங்க அன்புள்ள கலைஞருக்கு ஆனந்தி எழுதுவதுன்னு,ஆரம்பிச்சி அஞ்சு நிமிசத்துக்கு மேல ஓடுது , விளம்பரத்துல கொடுக்குற பில்ட் அப்பும் தாங்கல பக்கத்துல பேச்சு துணைக்கும் ஆளில்ல மொத்ததுல வடிவேல் ஸ்டைல்ல சொல்லனும்னா முடியல...







இதுல அந்த விளம்பரத்த இடைவேளைல வேற மறுபடியும் போட்டாங்க .. அய்யா கலைஞர் அவர்களே இதே மாதிரி விளம்பரத்த எப்ப பார்த்தாலும் டிவி , தியேட்டர்னு எல்லா எடத்துலயும் போட்டு என்ன மாதிரி அப்பாவி ரசிகர்கள் எல்லாம் மனம் நொந்து செத்துடோம்னா  அப்புறம் நீங்க கதை வசனம் எழுதுற படத்த பார்க்ககூட ஆள் இருக்க மாட்டோம் ( இப்ப மட்டும் யார் இருக்கா ? ) ஏற்கனவே புதுக்கோட்டை , வேதாரண்யம் பக்கத்துல இலங்கை காரேன் சுட்ரதால உங்க படம் பார்க்க ஆளுங்க குறைஞ்சுகிட்டே வராங்க ( அந்த ஒரு காரணதுக்காகவாது இலங்கை கடற்படை மேல நடவடிக்கை எடுக்க சொல்லுங்க தலைவரே )  நீங்ககூட பாராட்டு விழா , பட்டிமன்றம் , மானாட மயிலாடனு லைவ்வா நடிகர் , நடிகைகள பார்த்துகிறீங்க ஆனா நாங்க ஏதோ டிவி , தியேட்டர்னு தான் பார்க்க வேண்டியது இருக்கு இதுல அங்கயும் நீங்களே வந்தா நாங்க என்ன பண்றது?  சுத்தி சுத்தி உங்களையே பார்க்குறதுக்கு நீங்க என்ன தஞ்சாவூர் பெரிய கோவிலா ? அதனால எதாவது யோசிச்சு செய்ங்க .. 

Friday, December 10, 2010

அவன் அவள் அல்வா

எனக்கு கதையும் எழுத வரல , கவிதையும் எழுத வரல அதான் ரெண்டையும் கலந்துகட்டி எழுதலாம்னு ஒரு சிறுமுயற்சி ,


கதை இதுதான் ஒரு பையன் ஒரு பொண்ண சின்சியரா காதலிக்கிறான் , ஆனா அந்த பொண்ணு அவன ஜஸ்ட் ஒரு டைம் பாஸ்காகவும் , அவன் காசுல என்ஜாய் பண்றதுக்காகவும் காதலிக்குற மாதிரி நடிகுறா, இதுதான் கதை ( ஐ கதை எழுதிட்டேன் ) இப்ப அந்த காதலன் அவள் காதலியை பார்த்து கவிதை நடைல (?) வர்ணிக்க , அதற்கு அந்த காதலியும் மனதிற்குள் கவிதை (?) நடைலயே பதில் சொல்றாங்க .. இதில் காதலி சொல்லும் அனைத்தும் அவள் மனதிற்குள் சொல்லி கொள்வது ..


அவன் : 
அன்பே , எப்பொழுதும் உன்முகம் மட்டும் 
எவ்வாறு பிரகாசமாக உள்ளது ?
காலையில் சூரியனும் 
மாலையில் சந்திரனும் 
உன்முகத்தை மட்டும் பார்பதாலா ?


அவள் ( மனதிற்குள் ) :

அன்பே , எப்பொழுதும் உன்முகம் மட்டும் 
எவ்வாறு பிரகாசமாக உள்ளது ?
நீ ஒரு டுயுப் லைட் என்பதாலா ?

அவன் :
அன்பே , நீ நடக்கும் சாலையெங்கும் 
மலர்களை தூவி வைப்பேன் 
உன் பாதத்திற்கு வலிக்காமல் இருக்க!

அவள் ( மனதிற்குள் ):
சாலையெங்கும் மலர்கள் வேண்டாம் 
அன்பே , தினம் ஒரு முழம் போதும் 
எனக்கு பத்துருபாய் மிச்சம் 

அவன் :
அன்பே , உன் சிரிப்பில் இருந்து 
சில்லறையாய் சிதறுகிறதே 
அது எப்படி ?

அவள் :
உன் பாக்கெட்லிருந்து பணம் சிதறும்வரை 
என் சிரிப்பிலிருந்தும் சில்லறை சிதறும் 

அவன் :
நான் எப்போதும் உன்னை நினைத்துக்கொண்டிருக்கிறனே
உனக்கு எப்போதும் விக்கல் வருகிறதா ?

அவள் :
நீ சென்றவுடன் கணேஷ் வந்து விடுவதால் 
உன் ஞாபகம்கூட வருவதில்லை அன்பே !

அவன் :
எப்போதும் நீ எனக்கு மட்டும் அழகாக தெரிகிறாயே    
எப்படி ?

அவள் : 
என் மேக் அப் கலையும்வரை எல்லோர்க்கும் அழகாத்தான் தெரிவேன் 
அப்படி !


அவன் : 
அன்பே உனக்காக நான் உயிரையும் தருவேன் 
எனக்காக நீ என்ன தருவாய் ?


அவள் :
உன்னிடம் தருவதற்கு அல்வாவை தவிர 
வேறொன்றும் இல்லை அன்பே ..


அவன் :
அன்பே , நமது  திருமணம் எப்போது நடக்கும் ?


அவள் :
எப்போதும் போல்  இரவில் உன் கனவில் மட்டும்தான் அன்பே ...


Moral of the Story : அவன் போன்ற காதலனும் , அவள் போன்ற காதலியும் இருக்கும்வரை , அல்வா கடைகளுக்கு அழிவில்லை .






            

போஸ்டர் குறும்பட விமர்சனம்

நான் வலைத்தளம் ஆரம்பிக்க காரணமே அண்ணன் கேபிள் சங்கர் அவர்கள்தான் , அது எப்படி என்பது பல தடவை பல பேரிடம் சொல்லிருப்பதால் அதை அப்படியே விட்டுவிடுவோம் . 


அவரை பற்றி தெரிந்த அனைவருக்கும் கண்டிப்பாக தெரியும் அவருடைய திரைப்பட ஆர்வம் , ஒரு திரைப்பட இயக்குனராக தீவிரமாக முயற்சி செய்து வரும் அவர் தற்பொழுது ஒரு எழுத்தாளராகவும் வெற்றி கண்டுள்ளார். ஒரு காலத்தில் அவரது விமர்சனத்தை படித்துவிட்டு அதற்குபிறகுதான் படம் பார்க்கவே செல்வேன், ஆனால் பலதடவை அவர் நன்றாக பாராட்டிய படம் எனக்கு பிடிக்காது அல்லது எனக்கு மிகவும் பிடித்த படம் அவருக்கு பிடிக்காது விமர்சித்திருப்பார் , ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை ... 


நான் இரண்டு காரணங்களுகாக  சங்கர் அண்ணனின் படத்தை மிகவும் எதிர்பார்கிறேன் , ஒன்று, மூன்று வருடங்களாக அண்ணனின் ப்ளாக் படித்து கொண்டிருக்கிறேன் ஆகையால் அவரது இயக்குனர் கனவை பற்றி நன்றாக தெரியும், அது நிறைவேற வேண்டும் என்ற ஆசை, மற்றொன்று எல்லாருடைய படத்தையும் விமர்சிக்கும் இவரது படம் எப்படி இருக்கும் என்பதை காணும் ஆவல்.. 


அண்ணன் ஏற்கனவே குறும்படத்தை இயக்கி இருந்தாலும் அதை நான் கண்டதில்லை , அவரது வலைத்தளத்தில் அவர் கதை , திரைகதை அமைத்த போஸ்டர் குறும்படம் கலைஞர் தொலைகாட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பு  ஆக இருப்பதாக   அறிவித்திருந்தார் , ஏற்கனவே அந்த நிகழ்ச்சியின் போலீஸ் சுற்றை கண்டிருந்ததால் , அண்ணனின் கைவண்ணத்தை காணும் ஆவல் ஏற்படிருந்தது .. ஆனால் ஆடிட்டிங் வேலை அதிகமாக இருந்ததால் சென்ற ஞாயிற்று கிழமை அலுவலகமே கெதியாக இருந்தேன் ஆகையால் அதை காண முடியவில்லை , நேற்று இரவு அதே நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்தார்கள் , நான் பாதியில் இருந்துதான் நிகழ்ச்சியை பார்த்தேன் ஆகையால் கடைசி மூன்று படங்களைத்தான் பார்க்க முடிந்தது அதில் ஒன்று போஸ்டர்.


படத்தை பலரும் பார்த்திருப்பீர்கள் ஆனாலும் யாரேனும் பார்க்காமல் இருந்தால் அவர்களுக்காக.. படத்தின் கதை இதுதான் ஒரு விபச்சாரம் செய்யும் சாந்தி என்ற பெண்ணை பற்றி ஒரு தெருவில் போஸ்டர் ஓட்ட பட்டிருகிறது , எங்கே விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கமாகி விடுமோ என்று இரவோடு இரவாக அந்த ஏரியா காவல்துறையினர் அந்த போஸ்டரை கிழித்து எறிகின்றனர், அந்த சாந்தியை உடனடியாக பிடிக்க சொல்லி அந்த ஏரியா இன்ஸ்பெக்டர்க்கு அவரது மேலதிகாரிகள் நெருக்கடி அளிக்கின்றனர், மறுநாள் காலை சாந்தி என்ற விபச்சாரம் செய்யும் பெண் அவளது கையாளிடம் புதுசா ரெண்டு பசங்க (பொண்ணுங்க ) வந்துருகாங்க வழக்கமா வர அந்த எக்ஸ்போர்ட் பார்ட்டியிடம் சொல்லு ராசியான ஆளுங்கன்னு சொல்கிறாள் , அவனும் அந்த எக்ஸ்போர்ட் ஆளுக்கு போன் செய்ய நம்பரை தேடி போன் செய்கிறான் அந்த நம்பர் 76 என முடிகிறது ஆனால் அவனோ தவறுதலாக 70 என கால் செய்து விடுகிறான், அது அந்த ஏரியா போலிசின் நம்பர் , போன் செய்தவன் அவர்களது அட்ரசையும் போலீசிடம் சொல்ல போலீஸ் அந்த சாந்தியை பிடிக்கிறது. இரவு போஸ்டர் ஒட்டிருந்த இடத்திற்கு இருவர் வந்து அந்த போஸ்டர்களை தேடுகின்றனர் , அதில் ஒருவன் போன் செய்து சொல்கிறான் , அண்ணே நேத்து சீரியலுக்காக ஒட்டிருந்த போஸ்டர் ஷூட்டிங் நின்னதால அப்படியே விட்டு போனோம்ல அத காணோம்னே எவனோ கிழிச்சிட்டாய்ங்கனே னு சொல்றான்.. ஆக ஷூடிங்க்காக ஒட்டபட்ட போஸ்டர தவறா புஞ்சிகிட்ட போலீஸ் உண்மையிலே சாந்திங்கிற விபசாரியையும் பிடிச்சிட்டாங்க .. 


இதுதான் நான் படத்த பார்த்து புரிஞ்சிகிட்ட அளவில் படத்தோட கதை . படத்தோட கதையிலேயே ஹுயுமர் இருந்தாலும் அதை சொன்ன விதம் அருமை .. பொதுவா போலீஸ் ஸ்டோரினு எடுத்துகிட்டா ரௌடிசம், என்கவுன்டர் இதுதான் பிரதானமா இருக்கும் அதையேதான் நான் பார்த்த அடுத்த ரெண்டு படத்திலையும் கொடுதிருதாங்க ஆனா இந்த படம் அந்த எந்த விஷயத்திலும் சிக்காம அழகா ரசிக்கிற மாதிரி இருக்கு .. 


படத்துல நடிச்ச எல்லோரும் ரொம்ப இயல்பான நடிப்ப வெளிபடுதிருந்தாங்க எனக்கு அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் , போன்ன அட்டென்ட் பண்ணற அந்த காண்ஸ்டேபிள் அப்புறம் அந்த சாந்தியின் கையாள் ( போன் செய்பவர் ) இவர்களின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது , படத்தின் மைனஸ்னா நான் இதற்கு அடுத்து பார்த்த ரெண்டு படம் கரனம் தப்பினால், அச்சம் தவிர் இந்த ரெண்டு படத்தோட ஒப்பிடும்போது making style, edititing, music இதெல்லாம் நம்ம படத்துல கொஞ்சம் low தான் ஆனாலும் நம்ம படத்தின் கதைக்கு செய்ய முடிந்த அளவிற்கு சிறப்பாகவே செய்துள்ளார்கள் , என்னதான் பெரிய நட்சத்திர அந்தஸ்து , பெரிய டெக்னிசியன்ஸ் இருந்தாலும் அசல் , சுறா , இப்போ உத்தமபுத்திரன் போன்ற படங்களை விட களவானி , மைனா போன்ற படங்கள் மனதை கவருதோ அந்த மாதிரி இந்த ரெண்டு படங்களை விட நம்ம படம் தூள் .. 


அடுத்த சின்ன மைனஸ் அந்த சாந்தி சொல்றாங்க அந்த எக்ஸ்போர்ட் பார்ட்டிய வர சொல்லு ராசியான ஆளுங்கனு, ஏற்கனவே வந்துட்டு போயிட்டு இருகிறவங்களுக்கு எதுக்கு மறுபடியும் அவர் அட்ரெஸ் தரனும் ( ஒரு வேள வீடு மாத்திடான்களோ )  எது எப்படியோ எனக்கு படம் ரொம்ப புடிச்சிருந்துச்சு , நடுவர்களுக்கும் புடிச்சிருந்துச்சு சிறந்த படம்னு பெயரும்  கிடைச்சாச்சு, போஸ்டர் பட டீம்க்கு வாழ்த்துக்கள் .. மொத்தத்தில் Poster - Blaster.

Wednesday, December 8, 2010

திரை நட்சத்திரங்களின் கலக்கல் கவிதைகள்

நம்ம திரையுலக பிரபலங்கள் திரைபடத்தில் சொன்ன கவிதைகளின் சிறு தொகுப்பு உங்களுக்காக...


ஜனங்களின் கலைஞன் விவேக் ...





காதல் 
காதல் ஒரு கழட்டி போட்ட செருப்பு 
சைஸ் சரியா இருந்தா 
யாரு வேணாலும் மாட்டிக்கலாம்!


ஆட்டோ 

ஆட்டோவே நீ எப்போது வருவாய் 
உன்னிடம் தரும் அளவிற்கு 
எங்களிடம் இல்லை வருவாய் ! 

அடுத்து நம்ம மிர்ச்சி சிவா





காதல் நாய் 

மரத்துல இருக்குது காயி
மரத்துல இருக்குது காயி
தூங்க தேவை பாயி  
தூங்க தேவை பாயி
நீ ம் னு சொன்னா இந்த சிவா 
உன் காலடி நாயி செல்வி நாயி!

இன்னொரு கவிதை(?)

மவுன் ரோட்டுல அன்னா சாலை 
ரஜினிகாந்த்  முரட்டு காளை......

நம்ம பார்த்திபன் ...


ஒரு அழகான பொண்ணு ஸ்வீட் சாப்பிடுற அழக (அது அழகு ??) நம்ம பார்த்திபன் கவிதையாய் சொல்லறார் .

ஒரு, ஸ்வீட் ஸ்டால்லே 
ஸ்வீட் சாப்பிடுகிறதே ...!

டேய் டேய் இதல்லாம் நோட் பண்ணுங்கடா நோட் பண்ணுங்கடா 

கடைசியா நம்ம கவுண்டமணி அண்ணே , ரெண்டே வரில அவரோட அக்கா மகளுக்காக எழுதின கவிதை ..





அடி அக்கா மகளே இந்து ,
யே வக்கா மகளே இந்து ...

நான் காலேஜ் படிக்கும்போது ஒரு பொண்ண சின்சியரா லவ் பண்ணேன், அவ என்ன பார்க்க நான் அவள பார்க்கனு நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு , ஒருநாள் அவளபத்தி ஒரு கவிதை எழுதி அவ கிளாஸ் பையன்கிட்ட கொடுத்து அனுப்புனேன் , அதுல இருந்து அவ என்ன பாக்குறதையே நிறுத்திட்டா , அப்புறம் என்னோட 34 லவ் மாதிரியே இதுவும் பெயிலா போச்சு ( இது என்னடா பரிட்சையா பெயிலா போறதுக்கு ) அந்த கவிதை இதுதான் , அவ பெயர் பாரதி ..

பாரதி , அழகான பெயர் ,
நீ ஏன் இவ்வளவு ஒல்லியாக இருகிறாய் ?
பேரு வைத்த உன் வீட்டில் யாரும் 
உனக்கு சோறு வைக்கவில்லையா ?

இவ்வளவு அழகான கவிதைய (?) அவளுக்கு பிடிக்காம போயிடிச்சே ..:(