Wednesday, September 8, 2010

எல்லாரும் கேட்டுகோங்க - நானும் யோக்கியன்தான், நானும் யோக்கியன்தான்.












நீங்கள் இதற்கு முன்பு ஒரு ISI  முத்திரை குத்திய, ISO certificate வாங்கிய ஒரு நல்லவனை பார்த்துள்ளிர்களா ? பார்க்கவில்லையென்றால் எனக்கு மெயில் அனுப்புங்கள் எனது போட்டோவை அனுப்பி வைக்கிறேன் பார்த்துகொள்ளுங்கள் .


நீங்கள் இதற்கு முன் பால் வழியும் முகத்தை பார்த்துள்ளிர்களா ? இல்லையென்றால் எனது முகத்தை பார்த்துகொள்ளுங்கள் ( முகத்தை close up ல் பார்த்து பயந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல )


இதற்கு முன் நீங்கள் குழந்தையின் சிரிப்பை கேட்டுள்ளிர்களா? இல்லையென்றால் எனக்கு போன் செய்யுங்கள் சிரித்து காட்டுகிறேன் ... (கேட்டதுக்கு பின் வேப்பிலை அடிக்க வேண்டிய அவசியம் வந்தாலும் வரலாம் )







எதற்கு இந்த தன்னிலை விளக்கம் என்றால் , என்னோடு பணியாற்றும் இரண்டு பெண்கள் எனது முந்தய இரண்டு பதிவுகளை படித்த பிறகு ... என்னை ஒரு பொறுக்கி ரேஞ்சுக்கு ( இதுக்கெல்லாம் ஒரு ரேஞ்சா ) பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் அதோடு சேர்த்து திட்டும் வேறு , நான் முந்தய பதிவுகளில் எழுதிய அனைத்தும் என் கல்லூரி காலத்தில் நடந்தவை , இப்பொழுது நான் முற்றிலும் மாறிவிட்டேன் , நான் இப்போல்லாம் சைட் கூட அடிபதில்லை , நான் என் நண்பர்களுக்கு சொல்வதெல்லாம் கீழ்க்கண்ட மூன்றுதான் ,


                      " சைட் அடிப்பது ஒரு பாவ செயல் 
                       சைட் அடிப்பது ஒரு பெருங்குற்றம்
                       சைட் அடிப்பது ஒரு மனித தன்மையற்ற செயல்" .







ஆகையால் யாரும் தயவுசெய்து சைட் அடிக்காதீங்க, ஒரு உதாரணத்துக்கு நான் அலுவலகத்துக்கு வரும் வழியில் ஒரு பெண் scooty ல் எனை கிராஸ் செய்தாள், அவ்வளவு அழகு , அந்த பெண்னின் வயது 20 + இருக்கும் , உயரம் ஒரு 5.8 இருக்கும் , எடை ஒரு 47 kg இருக்கும் , அந்த pink கலர் sleeve less சுடிதார் அந்த பெண்ணுக்கு perfect match ,   ஒரு முன்று கிலோ மீட்டர் வரை அந்த பெண்ணை பின் தொடர்ந்து பார்த்துக்கொண்டே தான் வந்தேன் ஆனாலும் நான் அவளை சைட் அடிக்கவில்லை, இப்பொழுதாவது நம்புங்கள் நான் யோக்கியன் ..




( அடுத்த முறையாவது கண்டிப்பாக ஒரு நல்ல பதிவாக எழுத முயற்சி பண்றேன் )  

Monday, September 6, 2010

மங்கையரால் மறுக்கபட்டோர் சங்கம்

வணக்கம் நண்பர்களே , நான் போன பதிவுல சொன்ன மாதிரி நானும் என் நண்பர்களும் , பொன்னுங்கலால அடிவாங்குனோம் , அசிங்கபட்டோம் , ஆனா அதுக்காக நாங்க வெட்க்கபடமட்டோம், வேதனபடமட்டோம், துக்கபடமாட்டோம் , துயரபடமாட்டோம் , கஷ்டபடமாட்டோம், கவலைப்படமாட்டோம்.
எப்படியாவது காதல் கல்யாணம் பண்ணிக்கணும் என்பதுதான் எங்கள் வாழ்வின் உயர்ந்த லட்சியம் ... அதுக்காக நாங்க எவ்வளவு வேணாலும் போராடுவோம் .
இருந்தாலும் எங்களுடைய இந்த போராட்டத்துக்கு பக்க பலமா இருக்க சில சங்கங்கள் தேவப்பட்டது அதுக்காக தான் எங்கள் கல்லூரி காலத்துல நாங்க மூனு சங்கங்கள தொடங்கி வெற்றிகரமா இப்ப வரைக்கும் நடத்திட்டு வரோம் , அத பற்றிய சிறுகுறிப்பு ...









1. கன்னிகளால் கைவிடப்பட்டோர் சங்கம் : இந்த சங்கம் எதுக்குனா நல்லா லவ் பன்னிட்டு இடைல ( வேற இடைய நினைசுக்காதிங்க ) ஏற்பட்ட பிரச்சனையால் பிரிஞ்ச பசங்க, மற்றும் பொன்னுங்கலலா ஏமாற்ற பட்ட பசங்களுக்காக தொடங்கப்பட்டது .  நான் இதுல எப்படி சேர்ந்தேனா நான் ஒரு பொண்ண ரொம்ப sincera லவ் பண்ணேன் , அவளும் என்ன பார்த்த சிரிப்பா , பயங்கரமா லுக் விடுவா, சரி நம்ம வண்டிலையும் ஒரு passanger ஏற போகுதேன்னு சந்தோசப்பட்டேன் , ஒருநாள் என் friends என்ன படத்துக்கு கூப்பிட்டாங்க , படத்துக்கு போன காலேஜ் லீவ் போடணும் லீவ் போட்டா அவள பார்க்க முடியாதுன்னு நான் வரலைன்னு சொல்லிட்டு காலேஜ் போனா அவள காணோம் என்னனு விசாரிச்சா அவ அவளோட ஆளோட சினிமாக்கு போயிட்டா , அன்னைக்கு இந்த சங்கத்துல சேர்ந்தவன்தான் இன்னும் வெளிய வரல .











2. மங்கையரால் மறுக்கபட்டோர் சங்கம் : இந்த சங்கம்  one side lovers க்காக உருவாக்கப்பட்டது , figures செட் ஆகாத பசங்களும் , பொண்ணுகிட்ட போய் லவ்வ சொல்லி பல்பு வாங்குன பசங்களுக்கான சங்கம் இது .









3. மானம் கேட்டோர் மறுவாழ்வு சங்கம் : இந்த சங்கத்தோட முக்கியமான நோக்கமே , பொன்னுன்களால் மானம் கெட்ட பசங்க எக்காரணம் கொண்டும் மனசு விட்டு தங்கள் முயற்சியை கைவிட்ற கூடாது என்ற நல்ல நோக்கத்துக்காக ... சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தி அவர்களை வழி நடத்துற ஒரு பொறுப்பான பணியை இந்த சங்கம் செஞ்சுட்டு வருது  .


எங்க சங்கத்துல எல்லோர்க்கும் பிடித்த dialougue திரிஷா இல்லேன்னா திவ்யா, பிடிக்காத வசனம் சாரி நான் உன்ன frienda தான் நினைச்சேன் ...... மேற்கண்ட சங்கத்துல சேர உங்களுக்கும் விருப்பம் இருந்தா எனக்கு  மெயில் அனுப்புங்க , எனக்கு இப்போ ரயிலுக்கு நேரமாச்சு ...

Friday, September 3, 2010

பொண்ணுங்க பலவிதம்





இங்க பொண்ணுங்கன்னு நான் சொல்லறது , பொதுவான பொண்ணுங்க இல்ல என் வாழ்க்கைல கிராஸ் ஆனா சில பொண்ணுங்க, 


இந்த பொண்ணு பின்னாடியே சுத்துரத பார்த்தா தக்காளி நீ பத்தான் கிளாஸ் பாஸ் பன்னமாட்ட போலன்னு என் நண்பர்கள் எல்லாம் சொல்லுவாங்க , அந்த அளவுக்கு அனிதான்னு ஒரு பொண்ணு பின்னாடி நாய சுத்துனேன் ( ஒரு வேல மனுஷனா சுத்தி இருந்தா லவ் பன்னிருபலோ) நல்லா அழகான பொண்ணு , அவகிட்ட இருக்குற ஒரே கெட்ட பழக்கம் என்னன்னா எதா இருந்தாலும் அவ பாசமலர் அண்ணன் உமதுரைகிட்ட சொல்லிடுவா , அப்படித்தான் நான் அவகிட்ட போய் i love u சொன்னதையும் அவ அண்ணன்கிட்ட போய் சொல்லிட்டா , உமதுரை குத்துனான் பாருங்க உம குத்தா நனைச்சு பார்க்கும்போதே இன்னமும் வலிக்குது.









அடுத்ததா சிந்து இவள பத்தி பெருசா சொல்ல முடியாது சுமாரான பிகர்தான் , ஆனா இந்த சிந்து பின்னாடி சுத்துனதுகே சந்துக்குள்ள வச்சு பின்னிடாய்ங்க ( என்னது மூத்தர சந்தாவ? அதெல்லாம் இல்ல சாதா சந்துதான் )




அடுத்து ரேணுகா நல்லவேளை இவ பின்னாடி என் நண்பன்தான் சுத்துனான், அழகான பொண்ணு அதோட boy friends, brothers இந்த பிரச்சனைலாம் எதுவும் கடையாது, அவன் அவகிட்ட லவ்வ சொல்ல போகும்போது கூட அவளோட friend  சக்தி மட்டும்தான் இருந்தா, பவுடர் போட்ட பன்னி மாதிரி இருக்கா இவளால என்ன பிரச்சனை வரபோதுன்னு நம்பி போய் ரேனுகாகிட்ட லவ்வ சொன்னான் , சக்தி க்கு இவளவு சக்தி இருக்கும்னு தெரியாம போச்சு அவன தள்ளிவிட்டு படுக்க போட்டு சங்குல மிதிச்சுட்டா .. ஒரு வாரம் ஒழுங்கா அவனால பேசக்கூட  முடியல..

இந்த மாதிரி இன்னும் பல கதை இருக்கு , என் வாழ்க்கைல நானும் என் நண்பர்களும் பொண்ணுங்களுக்காக பல தியாகங்கள் செஞ்சும் இன்னும் நாங்க மொட்ட பசங்களத்தான் சுத்திட்டு இருக்கோம் ...  ஆனா மேல சொன்ன பொண்ணுங்க எல்லாம் கல்யாணம் ஆகி குடியும் குடித்தனமா இருகாங்க ... இப்போ ஏன் நான் இங்க இந்த பதிவ போட்டேன்னா அப்படி நாங்க சைட் அடிச்ச ஒரு பொண்ணுக்கு அடுத்தவாரம் கல்யாணம் , நேற்றுதான் பத்திரிகை வந்துச்சு ...இதுல என்ன கொடுமைனா அழகான பல பசங்க அவ பின்னாடி சுத்தியும் அவ மடங்கல, கடைசியா இப்போ ஒரு wall clock வாயன கல்யாணம் பண்ணிக்க போறா ...இந்த பொண்ணுங்கள புரிஞ்சிக்கவே முடியல .. எப்படியோ அந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் ...  

Thursday, September 2, 2010

10000 ஹிட்ஸ் வர மாதிரி எனக்கும் பதிவெழுத தெரியும்





பதிவுலகத்துக்கு வந்த இந்த ஒரு வாரத்துல நான் கேட்க வேண்டியது நிறைய உள்ளது ஆனால் சிறு பாலகன் நான் கேட்டால் அதற்கு உரிய பதில் கிடைக்காது என்பதற்காக , எனது சார்பாக வட்ட  செயலாளர் வண்டு  முருகனை பேச அழைக்கிறேன்.







நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல எதிர் வலைதளகாரண பார்த்து கேட்குறேன் , நீங்க வைச்சுருகறது மட்டும்தான் ப்ளாக்கா? அப்ப வெங்கட் சரண் வைச்சுருகுறது ? என்னையா பண்ணிட்டான் என் கட்சிகறேன் ஏதோ கேபிள் சங்கர் , பரிசல் மற்ற எல்லாத்தையும் பார்த்து அவனும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சான் , அப்படி ஆரம்பிச்சா என்ன பண்ணனும் அத படிச்சு பார்த்து கமெண்ட் போடணும் , அது தானேய உலக வழக்கம் , ஆனா நி ஒரு கமெண்ட் கூட போடாம கடுபெத்திருக்க , அதோட விட்டியா anonymous பசங்ககிட்ட இவனுக்கு கெட்ட வார்த்தைல மெயில் அனுப்பி பழகுங்கடானு சொல்லிருக்க , பழகுறதுக்கு இது ப்ளாக்கா இல்ல பள்ளிகூடமா ? எவ்வளவு கெட்ட வார்த்தை ச்சே , 



அட இதேமாதிரி சம்பவம் ஏற்கனவே ஒன்னு நடந்துச்சு இதே பையன் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு மொக்க போட்டான், but  அப்ப யாரும் இவ்வளவு step எடுகல, நீ இங்க எவ்வளவு பதிவு போட்டாலும் உன் மொக்கைக்கு கமெண்ட்ஸ் வராது ஒட்டும் போட மாட்டங்க so தயவு செஞ்சு எழுதுறத நிறுத்திடுனு பின்னோட்டம் போட்டான்யா அந்த நாகரிகம் தெரியாது உனக்கு?  



ஒன்னு மட்டும் நல்லா சொல்லிக்குறேன் எங்களுக்கும் 10000 பேர் வந்து படிக்குற மாதிரி பதிவெழுத தெரியும் , ஆனா நாங்க எழுத மாட்டோம் , எழுத தெரியாது . கடைசியா எச்சரிக்கிறேன் என் கட்சிக்காரன் வெங்கட் சரண் பதிவுக்கு கமெண்ட் வரைலேன்னா எதிரணி பதிவர்களின் ப்ளோக்குக்கு தயவு செஞ்சு எனக்கும் கமெண்ட் போடுங்கனு வேண்டுகோளோட நூற்றுகணக்கான கமெண்ட்ஸ் வெங்கட் சரன்கிட்ட இருந்து வரும்னு சொல்லி எச்சரிச்சு  விடை பெறுகிறேன் நன்றி வணக்கம் .

மாபெரும் பதிவர் சந்திப்பு கூட்டம்




கடந்த செவ்வாய் அன்று காலை 11 மணி அளவில் பதிவர் சந்திப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது , காலை ஒன்பதரை மணிக்கே பதிவர்கள் வர தொடங்கிருந்தார்கள் , நான் சரியாக 10.15 க்கு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றேன் , எனக்கு முன்பே பதிவர்கள் ராஜா , விஸ்வநாதன் , பிரபாகரன் மற்றும் பலர் வந்து வெட்டியாக பேசியபடியே தம் அடித்து கொண்டிருந்தனர் , நேரம் ஆக ஆக பதிவர்களின் கூட்டம் அதிகமாகிய படியே இருந்தது , கிட்டத்தட்ட 100 க்கும் அதிகமான பதிவர்கள் வந்திருந்தனர் ஆனால் ரொம்ப நேரம் ஆகியும் பதிவர்களின் தலைவன் , எழுச்சி நாயகன் சிவசுப்ரமணியத்தை காணவில்லை , 









தலைவரின் வருகை தாமதத்தால் யாருக்கு லாபமோ இல்லையோ , நம்ம டீ கடை பழனிசாமிக்கு நல்ல வருமானம் , காத்திருந்த நேரத்தில் பதிவர்கள் டீ , பஜ்ஜி , வடை , தம் என வாங்கியபடியே இருந்தனர் , ஒரு வழியாக 11.15 மணியளவில் தலைவர் சிவசுப்ரமணியம் வந்தார் .. ஆள் பார்க்க ஓம குச்சி நரசிம்மனுக்கு முடி இருந்தா எப்படி இருந்துருப்பரோ அந்த மாதிரி சுருக்கமா சொல்லனும்னா கார சேவுக்கு காக்கி சட்டை போட்ட மாதிரி இருந்தார் .... பின்பு கூட்டம் தொடங்கியது அணைத்து பதிவர்களும் வரிசையாக நின்று பதிந்தோம் எங்கள் கல்வி தகுதிகளை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ....


படங்கள் : எங்கிருந்தோ சுட்டது .

Wednesday, September 1, 2010

இது திரை விமர்சனம் அல்ல












நாமலும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சாச்சு so அதனால எதாவது எழுதுனாதான் மரியாதையா இருக்கும் , என்ன எழுதுறதுன்னு மல்லாக்க படுத்து விட்டத்த பார்த்து யோசிச்சதுல எதாவது படத்துக்கு போய் அத பத்தி நம்ம கேபிள் அண்ணே மாதிரி விமர்சனம் எழுதலாம்னு friends வோட படத்துக்கு போனேன் , ஒரு 275 கிட்ட காலி , இதெல்லாம் ஒரு மேட்டரா? னு கேட்பீங்க , 




அப்ப நான் பத்தாவது படிச்சுட்டுருந்தேன் ( இப்ப வரைக்கும் நீ அதானே படிசுருக்கனு யாரும் உண்மைய சொல்லிற கூடாது ) அப்ப படத்துக்கு போறது எங்க வீட்ல ஒரு தேசத்துரோக செயல் , இருந்தாலும் திருட்டு தனமா போயிட்டுதான் இருந்தேன் .. காசுக்கு என்ன பண்றது, சில சமயம் ராத்திரி டிப்பனுக்கு பரோட்டா வேணும் , பாணி பூரி வேணும்னு காச வாங்கிட்டு சாப்பிட போறமாதிரி போயிட்டு சாப்பிடம வீட்டுக்கு வந்து தூங்கிடுவேன் , மறுநாள் அந்த காச வச்சு படம் பார்பேன் , இப்படி தமிழ் சினிமா துறைக்காக என்னையே வருத்திகிட்ட எனக்கு அவுங்க சிலை வைக்க வேணாம் ( வைக்கவும் மாட்டாங்க ) ஆனா ஒரு நல்ல படமாவது கொடுக்கலாம்ல ,







 நான் போன படம் மாஸ்கோவின் காவேரி , இதுக்குமேல நான் ஏதும் சொல்ல வேணாம்னு நெனைக்கிறேன் , போஸ்டரையும், டிரைலரையும் பார்த்து இதுவரைக்கும் பிட்டு படத்துக்கு போய்தான் ஏமாந்துருக்கேன்....but this first time.... என்னமோ போங்க .... மொத்தத்தில் மாஸ்கோவின் காவேரி - Iam sorry...