Wednesday, September 8, 2010

எல்லாரும் கேட்டுகோங்க - நானும் யோக்கியன்தான், நானும் யோக்கியன்தான்.












நீங்கள் இதற்கு முன்பு ஒரு ISI  முத்திரை குத்திய, ISO certificate வாங்கிய ஒரு நல்லவனை பார்த்துள்ளிர்களா ? பார்க்கவில்லையென்றால் எனக்கு மெயில் அனுப்புங்கள் எனது போட்டோவை அனுப்பி வைக்கிறேன் பார்த்துகொள்ளுங்கள் .


நீங்கள் இதற்கு முன் பால் வழியும் முகத்தை பார்த்துள்ளிர்களா ? இல்லையென்றால் எனது முகத்தை பார்த்துகொள்ளுங்கள் ( முகத்தை close up ல் பார்த்து பயந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல )


இதற்கு முன் நீங்கள் குழந்தையின் சிரிப்பை கேட்டுள்ளிர்களா? இல்லையென்றால் எனக்கு போன் செய்யுங்கள் சிரித்து காட்டுகிறேன் ... (கேட்டதுக்கு பின் வேப்பிலை அடிக்க வேண்டிய அவசியம் வந்தாலும் வரலாம் )







எதற்கு இந்த தன்னிலை விளக்கம் என்றால் , என்னோடு பணியாற்றும் இரண்டு பெண்கள் எனது முந்தய இரண்டு பதிவுகளை படித்த பிறகு ... என்னை ஒரு பொறுக்கி ரேஞ்சுக்கு ( இதுக்கெல்லாம் ஒரு ரேஞ்சா ) பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் அதோடு சேர்த்து திட்டும் வேறு , நான் முந்தய பதிவுகளில் எழுதிய அனைத்தும் என் கல்லூரி காலத்தில் நடந்தவை , இப்பொழுது நான் முற்றிலும் மாறிவிட்டேன் , நான் இப்போல்லாம் சைட் கூட அடிபதில்லை , நான் என் நண்பர்களுக்கு சொல்வதெல்லாம் கீழ்க்கண்ட மூன்றுதான் ,


                      " சைட் அடிப்பது ஒரு பாவ செயல் 
                       சைட் அடிப்பது ஒரு பெருங்குற்றம்
                       சைட் அடிப்பது ஒரு மனித தன்மையற்ற செயல்" .







ஆகையால் யாரும் தயவுசெய்து சைட் அடிக்காதீங்க, ஒரு உதாரணத்துக்கு நான் அலுவலகத்துக்கு வரும் வழியில் ஒரு பெண் scooty ல் எனை கிராஸ் செய்தாள், அவ்வளவு அழகு , அந்த பெண்னின் வயது 20 + இருக்கும் , உயரம் ஒரு 5.8 இருக்கும் , எடை ஒரு 47 kg இருக்கும் , அந்த pink கலர் sleeve less சுடிதார் அந்த பெண்ணுக்கு perfect match ,   ஒரு முன்று கிலோ மீட்டர் வரை அந்த பெண்ணை பின் தொடர்ந்து பார்த்துக்கொண்டே தான் வந்தேன் ஆனாலும் நான் அவளை சைட் அடிக்கவில்லை, இப்பொழுதாவது நம்புங்கள் நான் யோக்கியன் ..




( அடுத்த முறையாவது கண்டிப்பாக ஒரு நல்ல பதிவாக எழுத முயற்சி பண்றேன் )  

6 comments:

  1. பெண் scooty ல் எனை கிராஸ் செய்தாள், அவ்வளவு அழகு , அந்த பெண்னின் வயது 20 + இருக்கும் , உயரம் ஒரு 5.8 இருக்கும் , எடை ஒரு 47 kg இருக்கும் , அந்த pink கலர் sleeve less சுடிதார் அந்த பெண்ணுக்கு perfect match ,

    ///

    அடப்பாவி.. இவ்வளவு ரசிச்சிட்டு சைட் அடிக்கலன்னு சொல்றியே இது உனக்கே நல்லாயிருக்கா...(அந்த பொண்ணு கொவிசுக்கும்பா)

    ReplyDelete
  2. ( அடுத்த முறையாவது கண்டிப்பாக ஒரு நல்ல பதிவாக எழுத முயற்சி பண்றேன் )

    //

    இப்படி சொல்லி சொல்லியே கலைத்த ஒட்டிகிட்டிருக்கியே... அடுத்த பதிவிலாவது நம்பலாமா...

    ReplyDelete
  3. வெறும் பய அவர்களே நம்புங்க வாழ்க்கைங்குற சக்கரமே நம்பிக்கைங்குற ஆட்சாணில தான் சுழலுது .

    ReplyDelete
  4. //எல்லாரும் கேட்டுகோங்க - நானும் யோக்கியன்தான், நானும் யோக்கியன்தான்.
    //

    சரிங்க புரிஞ்சுதுங்க

    ReplyDelete
  5. //சைட் அடிப்பது ஒரு பாவ செயல்
    சைட் அடிப்பது ஒரு பெருங்குற்றம்
    சைட் அடிப்பது ஒரு மனித தன்மையற்ற செயல்///


    இன்னமுமாடா இந்த ஊர் நம்பள நம்புது??????
    காசா....... பணமா.....
    பொய்தானே......
    ம்ம் நடக்கட்டும்........

    ReplyDelete