Monday, August 30, 2010

கவிதை பிடிக்குமா ?

இந்த பதிவு என் நண்பர் ஒருவருக்காக நான் எழுதுவது , எனது நண்பர் பெயர் கோபி எனக்கு கல்லூரியில் சீனியர் அலுவலகத்திலும் . தற்போது ஒரு வங்கியில் வேலை கடைத்து மேட்டுபாளையத்தில் உள்ளார் , கவிதையின் மீது தீராத காதல் கொண்டவர் குறிப்பாக காதல் கவிதைகளில் ... கிட்டதட்ட இரண்டு நோட்டுகள் முழுதிலும் உள்ள அவரது கவிதைகளை படித்து ரசித்திருக்கிறேன் . தற்போது எனது கல்லூரியின் தமிழ் பேராசிரியர் ஒருவர் உதவியுடன் அவரது கவிதைகளை புத்தகமாக்க முயற்சி செய்து வருகிறார். எனக்கு பதிவுகளை ஒழுங்காக எழுத தெரியாத போதும் , மற்றவர்களின் பதிவுகளை படிப்பது மிக பிடிக்கும் அந்த வகையில் எனக்கு இந்த பதிவுலகம் நல்ல பரிட்ச்சியம் . ஆகையால் பதிவுலகம் பற்றியும் வலைத்தளம் பற்றியும் அவருக்கு அறிமுகம் செய்துவைத்து , நீங்கள் உங்கள் ப்ளோகில் உங்கள் கவிதையை பதிவிடுங்கள் கண்டிப்பாக சக பதிவர்களின் நல்லாதரவு கிடைக்கும் என நம்பிகையளித்து அவரும் அவரது ப்ளோகில் சில கவிதைகளை post  செய்திருக்கிறார் , ஆனா வக்கனையா இதெலாம் சொல்ல தெரிஞ்ச எனக்கு ஒரு பதிவ எப்படி மத்த பதிவர்கள்கிட்ட கொண்டு போனும்னு தெரில, எனக்கு தெரிஞ்ச ஒரே தளம் தமிலிஷ் தான் (indli) அவரோடைய ஒவ்வொரு பதிவையும் அதுல publish பன்னிட்டு comments காக wait பண்ணுவோம் ஆனா எதுவும் வராது, ஆனா படிச்சுட்டு மட்டும் போயிருப்பாங்க , இப்படி எந்த கமெண்ட்ஸ் ம் வராதனால அவரு நொந்து போய் இப்ப பதிவே போடறதில , இத ஏன் சொல்றேனா என்ன மாதிரி மொக்க பதிவர்களுக்கு comments போடலைனாலும் பரவாயில்ல , ஆனா இவர மாதிரி ஆட்களுக்கு பின்னூட்டம் போட்டு ஊகுவிச்சா அது தப்பே இல்ல , முடிஞ்சா போய் பாருங்களேன் gopispages.blogspot.com..

நானும் எனது ஆறாம் விரலும்

      
நான் இங்கே ஆறாம் விரல் என குறிபிட்டது எனது சிகெரட்டை, கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்துகொண்டிருந்த போது என் நண்பனிடம் ஒரு நாள்

ஏன்டா டெய்லி சிகெரட் புடிச்சு உடம்ப கெடுத்துகுறேனு advice பண்ணேன் , அதுக்கு அவன் இல்லடா மாப்ள பழகிடுச்சு விட முடியலன்னு சொன்னான் , நீ சும்மா அளந்து விடாத மனுஷன் நனச்சா எதுவும் முடியும் ( அன்னைக்கு நான் பார்த்த எதோ ஒரு படத்தோட சீன்ல எவனோ சொன்னது ) னு சொன்னேன் , உனக்கு என்ன தெரியும் நி ஒருதடவ அடிச்சு பாரு அப்புறம் நீ மட்டும் விட்டுட்டேனா நானும் விட்டுறேனு அவன் சாவல் விட நானும் அன்னைக்கு சாயங்காலம் எங்க ஊரு பஸ் ஸ்டான்ட்க்கு எதிர்த்தாப்ல இருக்குற டீ கடைக்கு போனேன் , அவன் ஒன்னு வாங்கிட்டு எனக்கும் பத்த வச்சான் , ஒரு வழியா இருமிகிட்டே ஒரு சிகெரட்ட அடிச்சேன் , மறுநாள் காலை என்னமோ சவால் விட்ட நேத்து நான் தம் அடிச்சேன் ஆனா இனிமேல் அடிக்க மாட்டேன் என்னால விட முடிஞ்சுச்சு நியும் விட்ருனு சொன்னேன் , அதுக்கு அவன் நீ நேத்து அடிச்சதுக்கு பேரு தம்மா? புகையே உள்ள போகல அப்படி அடிச்சுட்டு நீ விட்ரு நானும் விட்டுறேனு சொன்னான் , ok இந்த சவாலையும் எத்துகுவோம்னு அன்னைக்கு சாயங்காலம் மறுபடியும் அவனோட போய் அவன் சொன்ன மாதிரி உள்ள இழுத்து முக்கு வழியா புகையை விட்டேன் ...... ஒரு மாதம் கழித்து எங்க HOD advice பண்ணாருன்னு அவன் திருந்திட்டான் but அவன திருத்த போன நான் பழகிட்டேன் .... இப்படிதான் சிகெரட் புடிக்க பழகினேன் ... சிகெரட் பிடிப்பது ஒரு ஜாலியான விஷயம்தான் ஆனால் அது தொடர தொடர தான் அதன் கோர முகம் வெளிப்படும் .. அளவுக்கு அதிகமாக சிகெரட் பிடித்து TB நோயால் பாதிகப்பட்டான் என் நண்பனின் அண்ணன், அவனுக்கு சிகிச்சை அளிக்க சென்னயில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம் ( புகை இலையால் பதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான மருத்துவமனை ) அங்குதான் நேரடியாக தெரிந்து கொண்டேன் புகையிலை நமக்கு பகையிலை என்று .. அன்று முதல் சிகெரட்டை கையில் எடுத்தால் ஒரு நோயாளியின் புண்கள் நிறைந்த ரத்தம் வழியும் வாயும் , எலும்புகள் தெரியும் மெலிந்த உடலும்தன் ஞாபகம் வரும் ... பிறகு எப்படி சிகெரட் பிடிப்பது ? சரி இதை ஏன் இப்போ எழுதுறேன்னு கேட்கிறீங்களா?? ஒண்ணுமில்ல இன்னியோட நான் சிகெரட் பிடிப்பதை நிறுத்தி 8 மாதம் ஆகுது அதான் சும்மா ஒரு வெற்றி விழா பதிவு .

( வந்ததும் வந்துடீங்க நொந்ததும் நொந்துடீங்க கையோட கழுதைய comment போட்டுட்டு  போங்க) 

Monday, August 23, 2010

பங்கு சந்தை முதலீட்டை கற்றுக்கொள்ள வேண்டுமா ?

பங்கு சந்தை முதலீட்டை கற்றுகொள்ள என்னதான் புத்தகங்களை படித்தாலும் what is what என்ற அளவில் மட்டுமே தெரிந்துகொள்ள முடியுமே தவிர அனுபவ ரீதியாக தெரிந்துகொள்வது சிறிது கடினமே, ஆனால் நான் பங்குசந்தையில் நுழைவதற்கு முன்பே அதைப்பற்றி ஓரளவிற்கு அனுபவ ரீதியாக தெரிந்துகொள்ள உதவியது பலருக்கும் தெரிந்த share game தான் , அதாவது நாமாக சில நிறுவனகளின் பங்குகளை வாங்கியதாக நினைத்து கொண்டு அதற்கு ஒரு லாப அளவை நிர்ணயம் செய்து அந்த அளவு வரும் வரை அந்த பங்குகளை  follow செய்வதே share game ஆகும் , இதை விளையாடுவதினால் பங்கு சந்தையின் ஏற்ற இறக்கங்கள், லாபம் கிடைக்க ஆகும் கால அளவு , ரிஸ்கின் அளவு மற்றும் நாம் விலைகொடுத்து வாங்கியதாக நினைத்து கொண்ட பங்கு நிறுவனத்தின் latest updates ஆகியவற்றை நம்மை அறியாமலேயே கற்றுகொள்வோம் ... நான் பங்குசந்தையில் நுழைவதற்கு முன்னால் அதாவது கல்லூரி படிக்கும்போது இந்த விளையாட்டை பலமுறை விளையாடி அதன்மூலம் பங்குசந்தையை பற்றி ஓரளவிற்கு நன்றாகவே கற்றுக்கொண்டேன் . இதுவரை நோட்டிலும் டைரியிலும் விளையாடிய இந்த விளையாட்டை இனி இங்கு விளையாடுகிறேன் .... உதாரணமாக idea cellular பங்குகளை நான் இன்று 70.80 ரூபாய்க்கு வாங்கியதாக எடுத்து கொள்வோம் ... நான் குறுகிய கால முதலீடு செய்பவன் ஆகையால் அதற்கு நான் 15 % லாபம் எதிர் பார்கிறேன், அதாவது 70.80 * 15 % = 81.42 ருபாய் , நான் 100பங்கினை 7080 ரூபாய்க்கு வாங்கினேன் என்றால் நான் எதிர்பார்க்கும் லாபம் 8142 அதாவது 1060 ருபாய் ..இனி அந்த லாபம் வரும்வரை நான் இந்த பங்குகளை follow செய்வதால் என்னால் மேற்கண்ட பயன்களை பெற முடியும் , உங்களுக்கும் பங்குச்சந்தை முதலீட்டில் ஆர்வம் இருந்தால் இந்த முறையை நீங்களும் முயற்சிக்கலாமே ...


பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளையும் ( திட்டுகளையும் ) comment இடலாமே .
 Saturday, August 21, 2010

வணக்கம் நண்பர்களே

வணக்கம் நண்பர்களே , பங்கு சந்தையை பற்றி சொல்ல பல வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்கள் இருகின்றன அவையாவும் பங்குசந்தையிலிருந்து எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்று சொல்கின்றன , ஆனால் இந்த வலைத்தளத்தில் நீண்டகால சிறு முதலிட்டலரான நான் எவ்வாறு பணம் சம்பாதித்தேன் , என் கைவசம் தற்போதுள்ள பங்குகள் என்ன அதன் நிலைகள் என்ன போன்றவற்றோடு வணிகம் தொடர்பான விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள போகிறேன் ... இது கண்டிப்பாக படிபவர்களுக்கு பயன்படும் என நம்புகிறேன் .