Monday, August 30, 2010
கவிதை பிடிக்குமா ?
இந்த பதிவு என் நண்பர் ஒருவருக்காக நான் எழுதுவது , எனது நண்பர் பெயர் கோபி எனக்கு கல்லூரியில் சீனியர் அலுவலகத்திலும் . தற்போது ஒரு வங்கியில் வேலை கடைத்து மேட்டுபாளையத்தில் உள்ளார் , கவிதையின் மீது தீராத காதல் கொண்டவர் குறிப்பாக காதல் கவிதைகளில் ... கிட்டதட்ட இரண்டு நோட்டுகள் முழுதிலும் உள்ள அவரது கவிதைகளை படித்து ரசித்திருக்கிறேன் . தற்போது எனது கல்லூரியின் தமிழ் பேராசிரியர் ஒருவர் உதவியுடன் அவரது கவிதைகளை புத்தகமாக்க முயற்சி செய்து வருகிறார். எனக்கு பதிவுகளை ஒழுங்காக எழுத தெரியாத போதும் , மற்றவர்களின் பதிவுகளை படிப்பது மிக பிடிக்கும் அந்த வகையில் எனக்கு இந்த பதிவுலகம் நல்ல பரிட்ச்சியம் . ஆகையால் பதிவுலகம் பற்றியும் வலைத்தளம் பற்றியும் அவருக்கு அறிமுகம் செய்துவைத்து , நீங்கள் உங்கள் ப்ளோகில் உங்கள் கவிதையை பதிவிடுங்கள் கண்டிப்பாக சக பதிவர்களின் நல்லாதரவு கிடைக்கும் என நம்பிகையளித்து அவரும் அவரது ப்ளோகில் சில கவிதைகளை post செய்திருக்கிறார் , ஆனா வக்கனையா இதெலாம் சொல்ல தெரிஞ்ச எனக்கு ஒரு பதிவ எப்படி மத்த பதிவர்கள்கிட்ட கொண்டு போனும்னு தெரில, எனக்கு தெரிஞ்ச ஒரே தளம் தமிலிஷ் தான் (indli) அவரோடைய ஒவ்வொரு பதிவையும் அதுல publish பன்னிட்டு comments காக wait பண்ணுவோம் ஆனா எதுவும் வராது, ஆனா படிச்சுட்டு மட்டும் போயிருப்பாங்க , இப்படி எந்த கமெண்ட்ஸ் ம் வராதனால அவரு நொந்து போய் இப்ப பதிவே போடறதில , இத ஏன் சொல்றேனா என்ன மாதிரி மொக்க பதிவர்களுக்கு comments போடலைனாலும் பரவாயில்ல , ஆனா இவர மாதிரி ஆட்களுக்கு பின்னூட்டம் போட்டு ஊகுவிச்சா அது தப்பே இல்ல , முடிஞ்சா போய் பாருங்களேன் gopispages.blogspot.com..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment