நான் இங்கே ஆறாம் விரல் என குறிபிட்டது எனது சிகெரட்டை, கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்துகொண்டிருந்த போது என் நண்பனிடம் ஒரு நாள்
ஏன்டா டெய்லி சிகெரட் புடிச்சு உடம்ப கெடுத்துகுறேனு advice பண்ணேன் , அதுக்கு அவன் இல்லடா மாப்ள பழகிடுச்சு விட முடியலன்னு சொன்னான் , நீ சும்மா அளந்து விடாத மனுஷன் நனச்சா எதுவும் முடியும் ( அன்னைக்கு நான் பார்த்த எதோ ஒரு படத்தோட சீன்ல எவனோ சொன்னது ) னு சொன்னேன் , உனக்கு என்ன தெரியும் நி ஒருதடவ அடிச்சு பாரு அப்புறம் நீ மட்டும் விட்டுட்டேனா நானும் விட்டுறேனு அவன் சாவல் விட நானும் அன்னைக்கு சாயங்காலம் எங்க ஊரு பஸ் ஸ்டான்ட்க்கு எதிர்த்தாப்ல இருக்குற டீ கடைக்கு போனேன் , அவன் ஒன்னு வாங்கிட்டு எனக்கும் பத்த வச்சான் , ஒரு வழியா இருமிகிட்டே ஒரு சிகெரட்ட அடிச்சேன் , மறுநாள் காலை என்னமோ சவால் விட்ட நேத்து நான் தம் அடிச்சேன் ஆனா இனிமேல் அடிக்க மாட்டேன் என்னால விட முடிஞ்சுச்சு நியும் விட்ருனு சொன்னேன் , அதுக்கு அவன் நீ நேத்து அடிச்சதுக்கு பேரு தம்மா? புகையே உள்ள போகல அப்படி அடிச்சுட்டு நீ விட்ரு நானும் விட்டுறேனு சொன்னான் , ok இந்த சவாலையும் எத்துகுவோம்னு அன்னைக்கு சாயங்காலம் மறுபடியும் அவனோட போய் அவன் சொன்ன மாதிரி உள்ள இழுத்து முக்கு வழியா புகையை விட்டேன் ...... ஒரு மாதம் கழித்து எங்க HOD advice பண்ணாருன்னு அவன் திருந்திட்டான் but அவன திருத்த போன நான் பழகிட்டேன் .... இப்படிதான் சிகெரட் புடிக்க பழகினேன் ... சிகெரட் பிடிப்பது ஒரு ஜாலியான விஷயம்தான் ஆனால் அது தொடர தொடர தான் அதன் கோர முகம் வெளிப்படும் .. அளவுக்கு அதிகமாக சிகெரட் பிடித்து TB நோயால் பாதிகப்பட்டான் என் நண்பனின் அண்ணன், அவனுக்கு சிகிச்சை அளிக்க சென்னயில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம் ( புகை இலையால் பதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான மருத்துவமனை ) அங்குதான் நேரடியாக தெரிந்து கொண்டேன் புகையிலை நமக்கு பகையிலை என்று .. அன்று முதல் சிகெரட்டை கையில் எடுத்தால் ஒரு நோயாளியின் புண்கள் நிறைந்த ரத்தம் வழியும் வாயும் , எலும்புகள் தெரியும் மெலிந்த உடலும்தன் ஞாபகம் வரும் ... பிறகு எப்படி சிகெரட் பிடிப்பது ? சரி இதை ஏன் இப்போ எழுதுறேன்னு கேட்கிறீங்களா?? ஒண்ணுமில்ல இன்னியோட நான் சிகெரட் பிடிப்பதை நிறுத்தி 8 மாதம் ஆகுது அதான் சும்மா ஒரு வெற்றி விழா பதிவு .
( வந்ததும் வந்துடீங்க நொந்ததும் நொந்துடீங்க கையோட கழுதைய comment போட்டுட்டு போங்க)
good venkatsaran..
ReplyDeletenalla varuvinga thambi
ReplyDelete