Thursday, December 2, 2010

Wikileaks தெரியும் அது என்ன venkileaks? - அதிர்ச்சி தகவல்

பதிவுக்கு போறதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான விஷயம் :
நீங்கள் படித்து கொண்டிருக்கும் இந்த வலைத்தளம் உலகிலேயே நம்பர் ஒன் தமிழ் வலைத்தளம் என IRDCAF ஆல் அங்கீகரிக்க பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன் ( IRDCAF னா என்னான்னு கேட்றாதீங்க ஏனா எனக்கே தெரியாது ) எல்லாம் ஒரு விளம்பரத்துக்குத்தான்.


உலக நாடுகளின் குறிப்பா அமெரிக்காவின் ரகசியங்களை அம்பலபடுத்தி பரபரப்பை ஏற்படுத்தி வருது wikileaks என்ற இணையத்தளம்.அதே மாதிரி பல பதிவர்களோட வெளிவராத ரகசியங்களை விரைவில் வெளியிட்டு பரபரப்பை பதிவுலகில் ஏற்படுத்த வருகிறது venkyleaks என்ற இணையத்தளம் . அதை பற்றிய ஒரு சிறு பார்வை .


அந்த தளம் முதல் கட்டமாக வெளியிட போகும் சில பதிவர்களின் ரகசியங்கள் நமது காதுக்கு எட்டின, அவை ...1. Wikileaks இணையத்தளம் அமெரிக்காவின் பல கேபிள்களை வெளியிட்டு கொண்டிருகின்றன அதேபோல் விரைவில் இந்தியாவின் பல கேபிள்களை வெளியிட போகிறதாம், இந்த இணையதளத்திற்கு இதுபோன்ற கேபிள்களை சப்ளே செய்வது வெறும் யாரும் அல்ல , சொன்னால் நம்ப மாட்டிர்கள் அது பிரபல பதிவர் அண்ணன் கேபிள் சங்கர்தான்...அப்போ இவர்தான் weapon suppliernu சொல்லுங்க .. 


Cable சங்கர்


2. கணக்கில் வராத பல கோடி சொத்துகளுக்கு சொந்தகாரர் இந்த பதிவர் , எங்கே விஷயம் வெளிய தெரிஞ்சா பிரச்சனை ஆயிடுமோன்னு இவரு இவருக்கு வச்சுகிட்ட பேரு வெறும்பய ... அட கொடுமையே ...
3. இந்த பதிவர் மேல Google கொலைவெறில இருக்காம் , காரனம் இதனாம் இவரு தன்னோட வலைதளத்துக்கு வச்சுருக்குற பேரு பாலாவின் பக்கங்கள் ... ஆன இவரு எழுதுறதெல்லாம் Google ஓட blogger.com பக்கங்கள் .. விரைவில் Google இவர் மேல கேஸ் போடலாம்னு எதிர்பார்க்கபடுகிறது ... அப்போ முன் ஜாமீன் வாங்கிடுங்க ...


4. புது வீடு கட்டிருகேன்னு தன்னோட வலைதளத்தை அறிவிப்பு செஞ்ச பதிவர் வென் புரவிக்கு திருப்பூர்ல ஒரு சின்ன வீடு இருக்காம் .... இப்பலாம் யாரையும் நம்ப முடியல .. 
5. இவர் ரொம்ப தைரியமான பதிவர் அவர் பெயர முழுசா சொல்ல மாட்டாரு அவர சுருக்கமா SK னு கூப்பிடுவாங்க அதோட உண்மையான அர்த்தம் S for சந்தனம் K for கடத்தல் .... எவ்வளவு தைரியம் .
6. அடுத்து எங்க ஊரு காரரு அறியாமையே ஆனந்தம்னு சொல்லி தன் பெயரை கரூர் கிறுக்கன்னு  வட்சிகிட்டவர் இவர்மேல ஆள் கடத்தல் கற்பழிப்புனு பல கேஸ் இருக்குனா நீங்க நம்புவீங்களா ஆன அதான் உண்மை ... 
அப்ப பதிவுலகில் யாருமே ஒழுங்கா இல்லையா ? அப்படினு ஒரு சந்தேகம் இந்நேரம் உங்களுக்கு வந்திருக்கும் இதே சந்தேகம்தான் Scotland Yard போலீஸ்களுக்கும் வந்துச்சு உடனடியா அவங்க உலகம் முழுவதும் தேடி கடைசியா தமிழ்நாட்டு போலீஸ்கிட்ட கலந்து ஆலோசிச்சு எடுத்த முடிவு .... இந்த வெங்கட் சரண்தான் அந்த நல்லவன்கிறதுதான் ... இத படிச்ச உடனே சிலர் டென்ஷன் ஆகலாம் ஆனா சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும் ..


ok friends மேல சொன்ன எல்லாம் மேட்டரும் கற்பனைதான் யாரும் அந்த பதிவர்கள்கிட்ட போட்டு கொடுதுராதீங்க நான் ஏன் சொல்லறேனா ஏற்கனவே நமக்கும் அந்த பதிவர்களுக்கும் வாய்கால் தகறாரு இருக்கு இதுல இது வேறையா...3 comments:

 1. நல்லவேளை silent killerனு சொல்லாம விட்டீங்களே!:-)

  ReplyDelete
 2. பல உண்மைகள் வெளிவருது!
  (பார்க்கலாம் உங்களை தேடி என்ன வருதுன்னு!:-))

  ReplyDelete
 3. thank u sk sir, neenga silent killer illa soft kind person... :)

  ReplyDelete