Wednesday, December 8, 2010

அவ அப்படி பன்ன மாட்டா

ஆபீஸ்ல ISO ஆடிட்டிங் அது இதுன்னு ஏகபட்ட வேலை எல்லாம் ஒரு வழியா முடிஞ்சு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகாலம்னு நான் அப்புறம் என்னோட சீனியர்ஸ் மூனு பேரும் பார்க்கு போனோம் மொத ஆளுக்கு ஒரு பீர் ஆர்டர் பன்னிட்டு வெயிட் பண்ணிடிருக்கும்போது எனக்கு ஒரு யோசனை வந்துச்சு நம்ம  ப்ளாக்ல எழுத சரக்கு இல்லாம கஷ்டபடறோம் , இந்த மாதிரி குடிமகன்கள் இருக்குற எடத்துல கண்டிப்பா நமக்கு நிறைய மேட்டர் கடைக்கும் அவனவன் குடிச்சுட்டு போதைல உண்மைய பேசுவாங்க அத அப்படியே பதிவுல எழுதி ஹிட்ஸ்ச அள்ளிடனும்னு முடிவுபன்னேன் . சரக்கு அடிக்குற இடத்திலையும் பதிவுக்கு சரக்கு சேர்கிற என்னோட ஆர்வத்த நீங்க பாராட்டியே ஆகனும் (என்ன பண்றது கேட்டு வாங்க வேண்டியதா இருக்கு ) . அப்படியே ஒரு பீர லைட்டா குடிச்சிட்டே பக்கத்து கேபின்ல என்ன பேசுராங்கனு கேட்க ஆரம்பிச்சேன் , அங்கே .... மச்சி நீ என்ன நம்புறியா இல்லையா ?., என்னடா மச்சி இப்படி கேட்குற சத்தியமா நம்புறேண்டா .. அப்படினா கேளு அவ அப்படி பன்னிருக்க மாட்டா ... ஆஹா ஒரு பொன்ன பத்தி பேசுறாய்ங்கா அப்படினா நாம பதிவுபோட கண்டிப்பா ஒரு மேட்டர் சிக்கிருச்சு ( இது நான் )..


அவன் : இல்ல மச்சி நான் அவளோட எத்தன வருசமா பழகிருக்கேன் எனக்கு தெரியும்டா அவ பன்னிருப்பா


இவன் : எனக்கு நம்பிக்கை இல்லடா அவ பன்னிருக்க மாட்டா ..


அவன் : என்னடா என்ன நம்ப மாட்டியா ? அவ பன்னிருபாடா


இவன் : அவ போய் சே சே இருக்காது


அவன் : அவதாண்டா பன்னா எவ்வளவு வேணாலும் பெட் கட்டுவேன்


நான் ( மனதிற்குள் ) டேய் என்னதாண்ட அவ பன்னா சொல்லி தொலைங்கடா சீக்கிரம் இன்னும் எனக்கு பதிவு போட மேட்டர் கடைக்கலடா.


இவன் : மச்சி நீ எனக்கு ஒரு பீர் வாங்கிகொடுதேனு நான் எது சொன்னாலும் நம்புவேணு பார்த்தியா போடா


அவன் : அப்படிலாம் இல்ல மச்சி அவதாண்டா பன்னா , என்ன நம்பு .


இவன் : அவ பன்னிருக்க மாட்டா  


நான் ( மனதிற்குள் ) டேய் அவ என்னத்த பன்னாலோ இல்லையோ இனிநான் ஒன்னு பன்ன மாட்டேன்டா, இனி எவன் குடிச்சுட்டு பேசுனாலும் நான் ஒட்டு கேட்க மாட்டேன்டா ..ஒரு பீர் குடிக்கலாம்னு வந்தவன ரெண்டு பீர் குடிக்க வைச்சுட்டாங்க பாவிங்க .. கடைசியா கிளம்பும்போது ஒரு வழியா மேட்டர்க்கு வந்துட்டாய்ங்களானு பார்த்தேன் ...


அவன் : மச்சி உன் தல மேல சத்தியம் அவதாண்டா பன்னா 


இவன் : மச்சி உன் தளபதி மேல சத்தியம் அவ பண்ணிருக்க மாட்டா 


அட பாவிங்களா அவ பன்னதுக்கு இவுங்க ரெண்டு பேரும் என்னடா பாவம் பன்னாயிங்க .. சத்தியமா இந்த பாருக்கு இனிமேல் குடிக்க வர மாட்டேன்டா .. 


நண்பர்களே நானும் ஒழுங்கா ஒரு பதிவு எழுதனும்னு ஆசைதான் என்னத்த பன்ன ???

8 comments:

 1. //என்னோட ஆர்வத்த நீங்க பாராட்டியே ஆகனும் //
  பாராட்டுறோம்! பாராட்டுறோம்!

  ReplyDelete
 2. //நண்பர்களே நானும் ஒழுங்கா ஒரு பதிவு எழுதனும்னு ஆசைதான் என்னத்த பன்ன//

  இதுதான் ஒழுங்கான பதிவா? சூப்பருங்க இப்படியே கண்டினியூ பண்ணுங்க, :-)

  ReplyDelete
 3. கடைசிவரை விஷயம் தெரியவேயில்லையா! so sad!

  ReplyDelete
 4. என்ன கைய புடிச்சி இழுத்தியா ? வடிவேல் காமெடிதான் போங்க

  ReplyDelete
 5. பாராட்டுக்கு நன்றி எஸ் கே சார் , கடைசிவரைக்கும் பதில் தெரியலைனாலும் பைத்தியம்மாகம இருக்கேனே அதுவரைக்கும் சந்தோசம்

  ReplyDelete
 6. நான் என்ன பண்றது இரவு வானம் , நான் நல்லா பதிவு எழுத கூடாதுன்னு யாரோ சூனியம் வச்சுட்டாங்க போல :(

  ReplyDelete
 7. நண்பர்களே நானும் ஒழுங்கா ஒரு பதிவு எழுதனும்னு ஆசைதான் என்னத்த பன்ன ???


  .....நல்ல முயற்சி..... அதை பாராட்டியே ஆகணும்! தொடர்ந்து எழுதுங்க. :-)

  ReplyDelete
 8. அன்பின் வெங்கட்'

  இப்படித்தாம்பா எழுதணும் - சீக்கிரமே பார்க்குப் போயி சரக்கடிச்சு மட்டயாகாம - இதப்படிச்சே மட்டையாக்லாம். ஆமா அவ அப்படி என்ன தான் பண்ணி இருப்பா ? கண்டு பிடிக்கச் சொல்லி ஒரு தொடர் பதிவு 100 பேருக்கு அனுப்பலாமா

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete