Wednesday, December 1, 2010

ஏகன் vs சுறா - ஒரு மொக்க chatting

எனக்கு பிடித்த பொழுதுபோக்கு நண்பர்களுடன் chat செய்வது அதிலும் சில நண்பர்களுடன் chat செய்யும்போது பயங்கரமாக கலாய்த்துகொள்வோம் , அப்படிப்பட்ட நண்பர்களுள் ஒருவன்தான் ரங்கபிரபு, நேற்று அவனோடு chat செய்தேன் , அவன் ஒரு விஜய் ரசிகன், அதுவே போதுமே கலாய்க்க....

venkat saran is online


அவன் : இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் my dear friend. My best wishes for all of ur movements


நான் : வாஞ்சிநாதன் நகர் நற்பணி மன்றம் சார்பாக என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் , மிக்க நன்றி .


அவன் : வாஞ்சி நற்பணி மன்ற தலைவரே நீங்கதானே தளபதி 


நான் : நீ இப்படிலாம் சொன்னா மட்டும் நான் அரசியலுக்கு வந்துடுவேன்னு நனைச்சியா , நான் இமய மலைக்கு  போனும் .


அவன் : நான் எப்போ அப்படி சொனேன் ? நீயா imagine பண்ணிக்காத , நான் விஜயவச்சு சொன்னா நீ தலைவர் ரேஞ்சுக்கு போய்டியா ?


நான் : விடுடா சும்மா chat லயாவது சொல்லிக்கலாம்னு பார்த்தா....


அவன் : ஆசைய பாரு, போங்க தம்பி அப்புறம் நாங்கலாம் எங்க போறது ?


நான் : என்ன பா தளபதி மட்டும் என்ன சாதாரண ஆளா? ஜெயலலிதா, விஜயகாந்த் , விஜய் மூனு பேரும் கூட்டணி வச்சு வரபோற தேர்தல சந்திக்க போறங்களாம் , இப்போதான் பஸ் ஸ்டாண்ட்ல நக்கீரன் விளம்பரத்துல பார்த்தேன் .


அவன் : அப்போ எங்க தளபதி கண்டிப்பா அடுத்த MLA ஆகபோரார்னு சொல்லுங்க , Dr. Ilayathalapathi Vijay MLA va ?


நான் : அமாம் MLA தான் Member Of Lorry Drivers Association அவன் நடிக்கற லட்சணத்துக்கு கண்டிப்பா கொஞ்ச நாள்ல சினிமாவ விட்டே துரத்திடுவாங்க , அப்புறம் அவன் லாரி ஓட்டி தான் பொழப்பு நடத்தனும் ...


அவன் : சரி அத விடு கண்டிப்பா நாம இந்தியன் பார்லிமெண்ட்ல இடம் புடிச்சே ஆகனும்.


நான் : கண்டிப்பா நமக்காகவே ரெண்டு சீட்டு எப்பவும் பார்லிமெண்ட்ல காத்திருக்கும் 


அவன் : ok thats good   , நாம ரெண்டு பேரும் சேர்ந்து கரூர் மக்களுக்காக பார்லில குரல் கொடுப்போம் .


நான் : நமக்கு கொடுக்கறது Audience சீட் அங்க இருந்து குரல் கொடுத்தா போலீஸ்ச விட்டு வெளிய துரத்திடுவாங்க ... சரி உங்க தளபதி MLA மேட்டர்க்கு வா..

அவன் : யோ அப்படிலாம் யாரையும் கேவலமா பேசாதையா , தளபதிக்காக உயிரையே கொடுக்குற கூட்டம் எங்களுது பா..


நான் : நீ உயிரைலாம் கொடுக்க வேண்டாம் just உங்க தளபதியோட சுறா படத்த continue வா ரெண்டு show பாரு போதும் , உயிர நீ கொடுக்க வேண்டாம் அதுவா போய்டும் .


அவன் : ரெண்டு தடவ என்ன ஆயிரம் தடவ பார்போம் ..


நான் : மூணாவது தடவ நீ பார்க்கும்போதே செத்துடுவ அப்புறம் எங்க ஆயிரம் தடவ பார்க்குறது ?


அவன் : மனதில் உறுதி வேண்டும் 


நான் : அதுக்கு மொத உயிர் வேண்டும்


அவன் : அந்த படத்துக்கு என்னையா ? நாங்கலாம் ஏகனேயே ரெண்டு தடவ பார்த்துட்டு உயிரோட இருக்கோம் ..


நான் : தல படத்த தப்பா பேசாத அந்த ஏகன் படத்த 16 மொழிகள்ள டப் பன்ன பேச்சிவார்த்தை நடந்துட்டு இருக்கு தெரியுமா ?


அவன் : தமிழ் நாட்டு மக்கள கொன்னது பத்தாதா ? எனது ஆழ்ந்த அனுதாபங்கள் அந்த நாட்டு மக்களுக்கு ..


நான் : தலய ஓட்ட ஆரம்பிச்சுட்டானே என்ன பண்ணலாம் ........?


venkat saran is offline 
4 comments:

  1. ஹா ஹா ஹா நல்ல காமெடி, சூப்பரா இருக்குங்க

    ReplyDelete
  2. ரொம்ப நன்றி இரவு வானம், தொடர்ந்து வாங்க .

    ReplyDelete
  3. நன்றி எஸ் . கே சார் எல்லாம் உங்க ஆசிர்வாதம்

    ReplyDelete