Tuesday, February 14, 2012

நண்பனின் துரோகம்

இந்த பதிவில் வரும் தகவல்கள் அனைத்தும் நம்பத்தகுந்த ஒரு சினிமா விநியோகஸ்தர் நமக்கு அளித்தவை என்பதை சிரிக்காமல் தெரிவித்துகொள்கிறோம் .

அன்று பொங்கல் தினம் நேரம் காலை 5 மணி , அதிகாலை மூன்று மணி முதலே திரைஅரங்கின் முன் ரசிகர்கள் கூட்டம், ஒரு புறம் தலைவரின் கட் அவுட் க்கு பாலாபிசேகம் செய்துகொண்டிருந்தனர் அவரது உயிர் ரசிகர்கள் , மறு புறம் எப்பொழுது படப்பெட்டி வரும் என்று ஆவலுடன் காத்துகொண்டிருந்தது மற்றொரு கூட்டம் , 1000 வாலா வெடிக்க , ரசிகர்களின் விசில் காதை கிழிக்க வந்தது முதல் நாள் இரவு முதலே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருந்த படப்பெட்டி ..

இவ்வளவு வரவேற்பு பொங்கல் தினத்தன்று எந்த படத்திற்கு கிடைத்திருக்கும் என்று நீங்கள் யுகித்திருபிர்கள் ஆம் உங்கள் யூகம் சரிதான் அது இரண்டாம் எம் ஜி ஆர் , ரசிகர்களின் இதய தெய்வம் , கிராமத்து நாயகன் , இளைஞர்களின் விடி வெள்ளி , எங்கள் அண்ணன் ராமராஜன் அவர்கள் நடித்த மேதை படம்தான் .




ரசிகர்களின் இவ்வளவு வரவேற்பும் , ஹாலிவுட் படங்களுக்கு இணையான இல்லை இல்லை ஹாலிவுட் படங்களையே மிஞ்சும் அளவிற்கு இருந்த காட்சி அமைப்பும் திரைபடத்தின் வெற்றியை உறுதி செய்தது , இதை கண்ட தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ். ஏ. சந்திரசேகர் மற்றும் அவரது மகன் விஜய்யும் எங்கே மேதை படத்தால் தனது நண்பன் படத்தின் வெற்றி பாதிக்கபடுமோ என்று அச்சம் கொண்டனர் . அவர்கள் பயத்திற்கும் ஒரு காரணம் இருந்தது , இதோ சில உதாரணங்கள் ..




சேலத்தில் ஒரு பிரபல மல்டி ப்ளெக்ஸ் திரைஅரங்கில் பொங்கல் அன்று காலை 11 மணி காட்சியில் மேதை படத்தை திரையிட்ட திரைஅரங்கு  ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிய சிலர் அமர இடமின்றி நின்றுகொண்டே படத்தை கண்டு மகிழ்ந்தனர் , ஆனால் நண்பன் படத்தை திரையிட்ட திரை அரங்கமோ வெறும் 10 பேரை வைத்து கொண்டு படத்தை ஓட்டினர். இதுபோன்ற பல நிகழ்வுகள் தமிழகம் முழுதும் நடந்தது .



இதையெல்லாம் கண்டு பொறுக்க முடியாத சந்திரசேகர் மற்றும் விஜய் மேதை திரைபடத்தை திரையிட்ட திரை அரங்குகள் மற்றும் வெளியிட்ட விநியோகஸ்தர்களை மிரட்டியும் பணத்தை கொடுத்ததும் மூன்றாவது நாளே படத்தை மாற்ற செய்தனர் , உதாரனமாக எங்கள் ஊரில் மேதை படத்தை எடுத்துவிட்டு மயூரி நடித்த மயக்கும் மங்கை என்ற பிட் படத்தை திரையிட்டனர் , கவர்ச்சி நடிகை மயூரிக்கு முன்பே ட்ரவுசர் போட்டது எங்கள் தலைவர்தான் அப்படி இருக்க எப்படி எங்கள் தலைவர் படத்தை தூக்கலாம் என்று ரசிகர்கள் போராட்டத்தில் இறங்கினர் .




போராட்டம் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது , நாளை விஜய் நடிக்கும் துப்பாக்கி மற்றும் பவர் ஸ்டார் டாக்டர் ஸ்ரீனிவாசனின் ஆனந்த தொல்லை படங்கள் ஒன்றாக வெளியானால் , விஜய் போன்ற மூத்த நடிகர்களின் இந்த வெறி , பவர் ஸ்டார் டாக்டர் ஸ்ரீனிவாசன் போன்ற இளம் நடிகர்களின் வளர்ச்சியை பாதிக்கும், அப்படி ஏதும் நடக்காமல் இருக்க இதுபோன்ற போரட்டங்கள் தொடர வேண்டும்.

Sunday, February 12, 2012

மின்சாரமே கனவு


அடிச்சும் கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதிங்க மாதிரி, 8 மணிநேரம் கரண்ட்ட கட் செஞ்சும் கேட்பாங்க அப்பவும் ஒத்துக்காதிங்கனு உதயகுமார் சொல்லிட்டார் போல , கூடங்குளம் அணுமின் நிலையம் திறந்தா மட்டும்தான் கரண்ட் பிரச்சன தீரும் னு மக்களும் பேச ஆரம்பிச்சுட்டாங்க ( என்னது எந்த மக்களா?? எங்க வீட்டு பக்கத்துல மூனு பேர் நேத்து பேசிட்டு இருந்தாங்க அவங்கதான் ) 



காஸ் சிலின்டர் வர 30 நாள் ஆகுதுன்னு கரண்ட் அடுப்பு வாங்குனா கரெக்ட்டா காலைல 6 to 9 கரண்ட் கட் ஆகுது , அதனால முதல் நாள் நைட்டே சமைச்சு மறுநாள் சாப்பிட வேண்டியதா இருக்கு, இப்படி கரண்ட் கட் பத்தி புலம்பும் போதெல்லாம் என் பக்கத்துல நின்னு ஆற்காடு வீராசாமி சிரிக்கிறமாதிரியே  இருக்கு , என்ன எப்படி திட்டுனிங்க இப்ப அனுபவிங்கடா னு சொல்ற மாதிரி இருக்கு , அரவிந்த்சாமி னா மின்சாரகனவு ஆற்காடு வீராசாமி னா மின்சாரமே கனவு னு sms  லாம் அனுப்பி அவர ஒட்டிட்டு இருந்தோம் அப்பகூட 4 மணிநேரம்தான் கரண்ட் போச்சு அதுலயும் எங்க ஏரியால ஞாயிற்று கிழமையும் , பண்டிகை நாள் அப்பவும் கரண்ட் கட் ஆகாது ஆன இப்போ 8 மணிநேரம் கரெக்ட் டா புடுங்குறாங்க .




ஏய் ஆபிஸருங்களா உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா ?? மின்சார துறை அதிகாரிங்க யாரும் அடிக்கடி வெளிய வராதிங்க யாராவது ஒன்பதாவது படிக்கிற பசங்க கடுப்புல கத்தி எடுத்து சொரிவிட போறாங்க !

Friday, January 28, 2011

சாருவும் நாங்களும்









நான் தமிழில் வெளிவரும் வலைமனைகள் எதையும் படிப்பதில்லை என்பதால் இதுவரை அது என் கவனத்துக்கு வரவில்லை.  அதில் நான் கண்ட பல விஷயங்கள் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின; மன உளைச்சலைக் கொடுத்தன.....


மேற்கண்டவற்றை சாரு தனது இணைய தளத்தில் ஒரு பதிவில் கூறியது 



படித்ததில் பிடித்தது


http://www.karundhel.com/2010/11/1.ஹ்த்ம்ல்
http://parthichezhian.blogspot.com/2010/07/blog-post_15.ஹ்த்ம்ல்

மேற்கண்ட இந்த லிஸ்டும் சாரு அவர்கள் அறிமுக படுத்தியதுதான் , மேலே உள்ள இந்த வலைமனைகள் மட்டும் என்ன சைனிஸ் மொழியிலைய இருக்கு , இது போன்று நிறைய முரண்பாடுகள் அவருடைய எழுத்தில் உண்டு அதை அவரது இனைய தளத்தை தொடர்ந்து படிபவர்களுக்கு தெரியும் ... ஒன்ன யாரு இதெல்லாம் படிக்க சொன்னது பிடிக்கலேன்னா மூடிட்டு ( லேப் டாப்பை) போக வேண்டியதுதானேனு நீங்க கேட்கலாம் , அதுக்கும் ஒரு காரனம் இருக்கு , இதுவும் அவர் சொன்னதுதான் படிங்க ..

   கிடைத்த gap-இல் உள்ளே நுழைந்திருந்தால் நான் இன்று மணிரத்னம் அளவுக்குப் புகழ்பெற்ற இயக்குனராக இருந்திருப்பேன்."

அப்போது எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் நான் இப்போது மத்திய மந்திரியாக இருந்திருப்பேன். 

அவ்வளவு எதற்கு?  25 ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன்.  ஜக்மோகன் தில்லி மாநிலத்தின் கவர்னராக இருந்த போது சில காலம் நான் அவரது ஸ்டெனோவாக இருந்தேன்.  அப்போது இந்திரா காந்திக்கு ஒரு மதராஸி ஸ்டெனோ தேவைப்படுவதாக ஜக்மோகன் என்னிடம் சொன்னார்.  என்னுடைய தகுதி, ஒரு தவறு கூட இல்லாமல் டைப் செய்வேன். அப்போது நான் இந்திரா காந்தியிடம் சென்றிருந்தால் இந்நேரம் ப. சிதம்பரத்தின் இடத்தில் இருந்திருப்பேன்.  

மேலே உள்ள இந்த விஷயம்லாம் சாரு ஒரு பதிவில் கூறியது , அவளவுதான் இந்த பதிவை வெளியிட்ட அன்னைக்கு ட்விட்டர் முழுதும் இந்த புராணம்தான் , கிழே இருக்குற சில ட்விடுகளை படிங்க கண்டிப்பா சிரிப்பீங்க ...

,
சின்ன‌ வ‌ய‌தில் யார் அடித்தாலும் சுவ‌ர் மாதிரி நிற்பேன். தொட‌ர்ந்திருந்தால் திராவிட் ஆகியிருக்க‌லாம்

7 வ‌ய‌தில் த‌மிழ் தேர்வில் யாருக்கும் புரியாத‌ மாதிரி எழுதிய‌வ‌ன் நான்.தொட்ர‌ந்திருந்தால் கோண‌ங்கி ஆகியிருப்பேன்

எல்.கே.ஜி ப‌டிக்கும்போதே அடுத்த‌வ‌னை ஏமாற்றி மிட்டாய் வாங்கிய‌வ‌ன் நான் . தொட‌ர்ந்திருந்தால் சாரு ஆகியிருப்பேன்

3 வயதில் மொக்கை போட்டவன் நான், தொடர்ந்திருந்தால் கார்க்கி ஆகியிருப்பேன்

12 வ‌ய‌தில் ப‌க்க‌த்து வீட்டு அங்கிளின் க‌ம்ப்யூட்ட‌ரை துடைத்த‌வ‌ன் நான். தொட‌ர்ந்திருந்தால் நாராய‌ண‌மூர்த்தி ஆகியிருப்பேன் 

 4வ‌ய‌திலே அம்மாஅப்பா விளையாட்டு விளையாடிய‌வ‌ன் நான்.அதை தொட‌ர்ந்திருந்தால் இந்நேர‌ம் த‌ச‌ர‌த‌னையே மிஞ்சியிருப்பேன் 

  இதெல்லாம் கார்கியின் ட்விட்டர் ட்விட்டுகள் தான் இன்னும் இதுபோல் பலர்  
ட்விட்டி ( திட்டி ) இருக்கிறார்கள் , பதிவின் நீளம் கருதி அதை நான் இங்கு வெளியிடவில்லை , இதற்காகவேனும் இவரது இணையதளத்தை படிக்க தோனுகிறது . 



Tuesday, January 25, 2011

அன்புள்ள கருணாநிதிக்கு கண்ணீருடன் எழுதுவது

என்னடா இவன் வழக்கமா மொக்கதான் போடுவான் இன்னிக்கு கருணாநிதி பெயரல்லாம் தலைப்புல இருக்கே ஒரு வேள அரசியல் மேட்டர்தான் எழுத போறானோனு  தப்பா நெனச்சிறாதிங்க, ஆபீஸ் அரசியலே தாங்க முடியாம ராமதாஸ் அய்யா மாதிரி மாறி மாறி கட்சி தாவுர ஆளு நான் , இதுல எங்க தமிழ்நாட்டு அரசியல் பத்தி எழுதுறது , சரி விஷயத்துக்கு வரேன் . 













வீட்ல போர் அடிக்குதுன்னு டிவிய ஆன் பன்னா ஒன்னு இளைஞன்னு ஒரு கிழ... சாரி சாரி நம்ம கலைஞன் வரறாரு சரி வேற சேனல் பார்க்கலாமேன்னு மாத்துனா கலாநிதி மாறன் வழங்கும்னு ஜூம்ல காண்பிச்சு அடிக்கடி கடுபேத்துறாங்க, டிவியே வேணாம்னு சினிமாக்கு போனேன் , தெரியா தனமா பேச்சு துணைக்குகூட ஆள் இல்லாம தனியா போயிட்டேன்,படம் என்னமோ நல்லாத்தான் இருந்துச்சு ஆனா படம் போடுறதுக்கு முன்னாடி ஒரு விளம்பரம் போட்டாங்க பாருங்க அன்புள்ள கலைஞருக்கு ஆனந்தி எழுதுவதுன்னு,ஆரம்பிச்சி அஞ்சு நிமிசத்துக்கு மேல ஓடுது , விளம்பரத்துல கொடுக்குற பில்ட் அப்பும் தாங்கல பக்கத்துல பேச்சு துணைக்கும் ஆளில்ல மொத்ததுல வடிவேல் ஸ்டைல்ல சொல்லனும்னா முடியல...







இதுல அந்த விளம்பரத்த இடைவேளைல வேற மறுபடியும் போட்டாங்க .. அய்யா கலைஞர் அவர்களே இதே மாதிரி விளம்பரத்த எப்ப பார்த்தாலும் டிவி , தியேட்டர்னு எல்லா எடத்துலயும் போட்டு என்ன மாதிரி அப்பாவி ரசிகர்கள் எல்லாம் மனம் நொந்து செத்துடோம்னா  அப்புறம் நீங்க கதை வசனம் எழுதுற படத்த பார்க்ககூட ஆள் இருக்க மாட்டோம் ( இப்ப மட்டும் யார் இருக்கா ? ) ஏற்கனவே புதுக்கோட்டை , வேதாரண்யம் பக்கத்துல இலங்கை காரேன் சுட்ரதால உங்க படம் பார்க்க ஆளுங்க குறைஞ்சுகிட்டே வராங்க ( அந்த ஒரு காரணதுக்காகவாது இலங்கை கடற்படை மேல நடவடிக்கை எடுக்க சொல்லுங்க தலைவரே )  நீங்ககூட பாராட்டு விழா , பட்டிமன்றம் , மானாட மயிலாடனு லைவ்வா நடிகர் , நடிகைகள பார்த்துகிறீங்க ஆனா நாங்க ஏதோ டிவி , தியேட்டர்னு தான் பார்க்க வேண்டியது இருக்கு இதுல அங்கயும் நீங்களே வந்தா நாங்க என்ன பண்றது?  சுத்தி சுத்தி உங்களையே பார்க்குறதுக்கு நீங்க என்ன தஞ்சாவூர் பெரிய கோவிலா ? அதனால எதாவது யோசிச்சு செய்ங்க .. 

Friday, December 10, 2010

அவன் அவள் அல்வா

எனக்கு கதையும் எழுத வரல , கவிதையும் எழுத வரல அதான் ரெண்டையும் கலந்துகட்டி எழுதலாம்னு ஒரு சிறுமுயற்சி ,


கதை இதுதான் ஒரு பையன் ஒரு பொண்ண சின்சியரா காதலிக்கிறான் , ஆனா அந்த பொண்ணு அவன ஜஸ்ட் ஒரு டைம் பாஸ்காகவும் , அவன் காசுல என்ஜாய் பண்றதுக்காகவும் காதலிக்குற மாதிரி நடிகுறா, இதுதான் கதை ( ஐ கதை எழுதிட்டேன் ) இப்ப அந்த காதலன் அவள் காதலியை பார்த்து கவிதை நடைல (?) வர்ணிக்க , அதற்கு அந்த காதலியும் மனதிற்குள் கவிதை (?) நடைலயே பதில் சொல்றாங்க .. இதில் காதலி சொல்லும் அனைத்தும் அவள் மனதிற்குள் சொல்லி கொள்வது ..


அவன் : 
அன்பே , எப்பொழுதும் உன்முகம் மட்டும் 
எவ்வாறு பிரகாசமாக உள்ளது ?
காலையில் சூரியனும் 
மாலையில் சந்திரனும் 
உன்முகத்தை மட்டும் பார்பதாலா ?


அவள் ( மனதிற்குள் ) :

அன்பே , எப்பொழுதும் உன்முகம் மட்டும் 
எவ்வாறு பிரகாசமாக உள்ளது ?
நீ ஒரு டுயுப் லைட் என்பதாலா ?

அவன் :
அன்பே , நீ நடக்கும் சாலையெங்கும் 
மலர்களை தூவி வைப்பேன் 
உன் பாதத்திற்கு வலிக்காமல் இருக்க!

அவள் ( மனதிற்குள் ):
சாலையெங்கும் மலர்கள் வேண்டாம் 
அன்பே , தினம் ஒரு முழம் போதும் 
எனக்கு பத்துருபாய் மிச்சம் 

அவன் :
அன்பே , உன் சிரிப்பில் இருந்து 
சில்லறையாய் சிதறுகிறதே 
அது எப்படி ?

அவள் :
உன் பாக்கெட்லிருந்து பணம் சிதறும்வரை 
என் சிரிப்பிலிருந்தும் சில்லறை சிதறும் 

அவன் :
நான் எப்போதும் உன்னை நினைத்துக்கொண்டிருக்கிறனே
உனக்கு எப்போதும் விக்கல் வருகிறதா ?

அவள் :
நீ சென்றவுடன் கணேஷ் வந்து விடுவதால் 
உன் ஞாபகம்கூட வருவதில்லை அன்பே !

அவன் :
எப்போதும் நீ எனக்கு மட்டும் அழகாக தெரிகிறாயே    
எப்படி ?

அவள் : 
என் மேக் அப் கலையும்வரை எல்லோர்க்கும் அழகாத்தான் தெரிவேன் 
அப்படி !


அவன் : 
அன்பே உனக்காக நான் உயிரையும் தருவேன் 
எனக்காக நீ என்ன தருவாய் ?


அவள் :
உன்னிடம் தருவதற்கு அல்வாவை தவிர 
வேறொன்றும் இல்லை அன்பே ..


அவன் :
அன்பே , நமது  திருமணம் எப்போது நடக்கும் ?


அவள் :
எப்போதும் போல்  இரவில் உன் கனவில் மட்டும்தான் அன்பே ...


Moral of the Story : அவன் போன்ற காதலனும் , அவள் போன்ற காதலியும் இருக்கும்வரை , அல்வா கடைகளுக்கு அழிவில்லை .






            

போஸ்டர் குறும்பட விமர்சனம்

நான் வலைத்தளம் ஆரம்பிக்க காரணமே அண்ணன் கேபிள் சங்கர் அவர்கள்தான் , அது எப்படி என்பது பல தடவை பல பேரிடம் சொல்லிருப்பதால் அதை அப்படியே விட்டுவிடுவோம் . 


அவரை பற்றி தெரிந்த அனைவருக்கும் கண்டிப்பாக தெரியும் அவருடைய திரைப்பட ஆர்வம் , ஒரு திரைப்பட இயக்குனராக தீவிரமாக முயற்சி செய்து வரும் அவர் தற்பொழுது ஒரு எழுத்தாளராகவும் வெற்றி கண்டுள்ளார். ஒரு காலத்தில் அவரது விமர்சனத்தை படித்துவிட்டு அதற்குபிறகுதான் படம் பார்க்கவே செல்வேன், ஆனால் பலதடவை அவர் நன்றாக பாராட்டிய படம் எனக்கு பிடிக்காது அல்லது எனக்கு மிகவும் பிடித்த படம் அவருக்கு பிடிக்காது விமர்சித்திருப்பார் , ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை ... 


நான் இரண்டு காரணங்களுகாக  சங்கர் அண்ணனின் படத்தை மிகவும் எதிர்பார்கிறேன் , ஒன்று, மூன்று வருடங்களாக அண்ணனின் ப்ளாக் படித்து கொண்டிருக்கிறேன் ஆகையால் அவரது இயக்குனர் கனவை பற்றி நன்றாக தெரியும், அது நிறைவேற வேண்டும் என்ற ஆசை, மற்றொன்று எல்லாருடைய படத்தையும் விமர்சிக்கும் இவரது படம் எப்படி இருக்கும் என்பதை காணும் ஆவல்.. 


அண்ணன் ஏற்கனவே குறும்படத்தை இயக்கி இருந்தாலும் அதை நான் கண்டதில்லை , அவரது வலைத்தளத்தில் அவர் கதை , திரைகதை அமைத்த போஸ்டர் குறும்படம் கலைஞர் தொலைகாட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பு  ஆக இருப்பதாக   அறிவித்திருந்தார் , ஏற்கனவே அந்த நிகழ்ச்சியின் போலீஸ் சுற்றை கண்டிருந்ததால் , அண்ணனின் கைவண்ணத்தை காணும் ஆவல் ஏற்படிருந்தது .. ஆனால் ஆடிட்டிங் வேலை அதிகமாக இருந்ததால் சென்ற ஞாயிற்று கிழமை அலுவலகமே கெதியாக இருந்தேன் ஆகையால் அதை காண முடியவில்லை , நேற்று இரவு அதே நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்தார்கள் , நான் பாதியில் இருந்துதான் நிகழ்ச்சியை பார்த்தேன் ஆகையால் கடைசி மூன்று படங்களைத்தான் பார்க்க முடிந்தது அதில் ஒன்று போஸ்டர்.


படத்தை பலரும் பார்த்திருப்பீர்கள் ஆனாலும் யாரேனும் பார்க்காமல் இருந்தால் அவர்களுக்காக.. படத்தின் கதை இதுதான் ஒரு விபச்சாரம் செய்யும் சாந்தி என்ற பெண்ணை பற்றி ஒரு தெருவில் போஸ்டர் ஓட்ட பட்டிருகிறது , எங்கே விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கமாகி விடுமோ என்று இரவோடு இரவாக அந்த ஏரியா காவல்துறையினர் அந்த போஸ்டரை கிழித்து எறிகின்றனர், அந்த சாந்தியை உடனடியாக பிடிக்க சொல்லி அந்த ஏரியா இன்ஸ்பெக்டர்க்கு அவரது மேலதிகாரிகள் நெருக்கடி அளிக்கின்றனர், மறுநாள் காலை சாந்தி என்ற விபச்சாரம் செய்யும் பெண் அவளது கையாளிடம் புதுசா ரெண்டு பசங்க (பொண்ணுங்க ) வந்துருகாங்க வழக்கமா வர அந்த எக்ஸ்போர்ட் பார்ட்டியிடம் சொல்லு ராசியான ஆளுங்கன்னு சொல்கிறாள் , அவனும் அந்த எக்ஸ்போர்ட் ஆளுக்கு போன் செய்ய நம்பரை தேடி போன் செய்கிறான் அந்த நம்பர் 76 என முடிகிறது ஆனால் அவனோ தவறுதலாக 70 என கால் செய்து விடுகிறான், அது அந்த ஏரியா போலிசின் நம்பர் , போன் செய்தவன் அவர்களது அட்ரசையும் போலீசிடம் சொல்ல போலீஸ் அந்த சாந்தியை பிடிக்கிறது. இரவு போஸ்டர் ஒட்டிருந்த இடத்திற்கு இருவர் வந்து அந்த போஸ்டர்களை தேடுகின்றனர் , அதில் ஒருவன் போன் செய்து சொல்கிறான் , அண்ணே நேத்து சீரியலுக்காக ஒட்டிருந்த போஸ்டர் ஷூட்டிங் நின்னதால அப்படியே விட்டு போனோம்ல அத காணோம்னே எவனோ கிழிச்சிட்டாய்ங்கனே னு சொல்றான்.. ஆக ஷூடிங்க்காக ஒட்டபட்ட போஸ்டர தவறா புஞ்சிகிட்ட போலீஸ் உண்மையிலே சாந்திங்கிற விபசாரியையும் பிடிச்சிட்டாங்க .. 


இதுதான் நான் படத்த பார்த்து புரிஞ்சிகிட்ட அளவில் படத்தோட கதை . படத்தோட கதையிலேயே ஹுயுமர் இருந்தாலும் அதை சொன்ன விதம் அருமை .. பொதுவா போலீஸ் ஸ்டோரினு எடுத்துகிட்டா ரௌடிசம், என்கவுன்டர் இதுதான் பிரதானமா இருக்கும் அதையேதான் நான் பார்த்த அடுத்த ரெண்டு படத்திலையும் கொடுதிருதாங்க ஆனா இந்த படம் அந்த எந்த விஷயத்திலும் சிக்காம அழகா ரசிக்கிற மாதிரி இருக்கு .. 


படத்துல நடிச்ச எல்லோரும் ரொம்ப இயல்பான நடிப்ப வெளிபடுதிருந்தாங்க எனக்கு அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் , போன்ன அட்டென்ட் பண்ணற அந்த காண்ஸ்டேபிள் அப்புறம் அந்த சாந்தியின் கையாள் ( போன் செய்பவர் ) இவர்களின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது , படத்தின் மைனஸ்னா நான் இதற்கு அடுத்து பார்த்த ரெண்டு படம் கரனம் தப்பினால், அச்சம் தவிர் இந்த ரெண்டு படத்தோட ஒப்பிடும்போது making style, edititing, music இதெல்லாம் நம்ம படத்துல கொஞ்சம் low தான் ஆனாலும் நம்ம படத்தின் கதைக்கு செய்ய முடிந்த அளவிற்கு சிறப்பாகவே செய்துள்ளார்கள் , என்னதான் பெரிய நட்சத்திர அந்தஸ்து , பெரிய டெக்னிசியன்ஸ் இருந்தாலும் அசல் , சுறா , இப்போ உத்தமபுத்திரன் போன்ற படங்களை விட களவானி , மைனா போன்ற படங்கள் மனதை கவருதோ அந்த மாதிரி இந்த ரெண்டு படங்களை விட நம்ம படம் தூள் .. 


அடுத்த சின்ன மைனஸ் அந்த சாந்தி சொல்றாங்க அந்த எக்ஸ்போர்ட் பார்ட்டிய வர சொல்லு ராசியான ஆளுங்கனு, ஏற்கனவே வந்துட்டு போயிட்டு இருகிறவங்களுக்கு எதுக்கு மறுபடியும் அவர் அட்ரெஸ் தரனும் ( ஒரு வேள வீடு மாத்திடான்களோ )  எது எப்படியோ எனக்கு படம் ரொம்ப புடிச்சிருந்துச்சு , நடுவர்களுக்கும் புடிச்சிருந்துச்சு சிறந்த படம்னு பெயரும்  கிடைச்சாச்சு, போஸ்டர் பட டீம்க்கு வாழ்த்துக்கள் .. மொத்தத்தில் Poster - Blaster.

Wednesday, December 8, 2010

திரை நட்சத்திரங்களின் கலக்கல் கவிதைகள்

நம்ம திரையுலக பிரபலங்கள் திரைபடத்தில் சொன்ன கவிதைகளின் சிறு தொகுப்பு உங்களுக்காக...


ஜனங்களின் கலைஞன் விவேக் ...





காதல் 
காதல் ஒரு கழட்டி போட்ட செருப்பு 
சைஸ் சரியா இருந்தா 
யாரு வேணாலும் மாட்டிக்கலாம்!


ஆட்டோ 

ஆட்டோவே நீ எப்போது வருவாய் 
உன்னிடம் தரும் அளவிற்கு 
எங்களிடம் இல்லை வருவாய் ! 

அடுத்து நம்ம மிர்ச்சி சிவா





காதல் நாய் 

மரத்துல இருக்குது காயி
மரத்துல இருக்குது காயி
தூங்க தேவை பாயி  
தூங்க தேவை பாயி
நீ ம் னு சொன்னா இந்த சிவா 
உன் காலடி நாயி செல்வி நாயி!

இன்னொரு கவிதை(?)

மவுன் ரோட்டுல அன்னா சாலை 
ரஜினிகாந்த்  முரட்டு காளை......

நம்ம பார்த்திபன் ...


ஒரு அழகான பொண்ணு ஸ்வீட் சாப்பிடுற அழக (அது அழகு ??) நம்ம பார்த்திபன் கவிதையாய் சொல்லறார் .

ஒரு, ஸ்வீட் ஸ்டால்லே 
ஸ்வீட் சாப்பிடுகிறதே ...!

டேய் டேய் இதல்லாம் நோட் பண்ணுங்கடா நோட் பண்ணுங்கடா 

கடைசியா நம்ம கவுண்டமணி அண்ணே , ரெண்டே வரில அவரோட அக்கா மகளுக்காக எழுதின கவிதை ..





அடி அக்கா மகளே இந்து ,
யே வக்கா மகளே இந்து ...

நான் காலேஜ் படிக்கும்போது ஒரு பொண்ண சின்சியரா லவ் பண்ணேன், அவ என்ன பார்க்க நான் அவள பார்க்கனு நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு , ஒருநாள் அவளபத்தி ஒரு கவிதை எழுதி அவ கிளாஸ் பையன்கிட்ட கொடுத்து அனுப்புனேன் , அதுல இருந்து அவ என்ன பாக்குறதையே நிறுத்திட்டா , அப்புறம் என்னோட 34 லவ் மாதிரியே இதுவும் பெயிலா போச்சு ( இது என்னடா பரிட்சையா பெயிலா போறதுக்கு ) அந்த கவிதை இதுதான் , அவ பெயர் பாரதி ..

பாரதி , அழகான பெயர் ,
நீ ஏன் இவ்வளவு ஒல்லியாக இருகிறாய் ?
பேரு வைத்த உன் வீட்டில் யாரும் 
உனக்கு சோறு வைக்கவில்லையா ?

இவ்வளவு அழகான கவிதைய (?) அவளுக்கு பிடிக்காம போயிடிச்சே ..:( 


அவ அப்படி பன்ன மாட்டா

ஆபீஸ்ல ISO ஆடிட்டிங் அது இதுன்னு ஏகபட்ட வேலை எல்லாம் ஒரு வழியா முடிஞ்சு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகாலம்னு நான் அப்புறம் என்னோட சீனியர்ஸ் மூனு பேரும் பார்க்கு போனோம் மொத ஆளுக்கு ஒரு பீர் ஆர்டர் பன்னிட்டு வெயிட் பண்ணிடிருக்கும்போது எனக்கு ஒரு யோசனை வந்துச்சு நம்ம  ப்ளாக்ல எழுத சரக்கு இல்லாம கஷ்டபடறோம் , இந்த மாதிரி குடிமகன்கள் இருக்குற எடத்துல கண்டிப்பா நமக்கு நிறைய மேட்டர் கடைக்கும் அவனவன் குடிச்சுட்டு போதைல உண்மைய பேசுவாங்க அத அப்படியே பதிவுல எழுதி ஹிட்ஸ்ச அள்ளிடனும்னு முடிவுபன்னேன் . சரக்கு அடிக்குற இடத்திலையும் பதிவுக்கு சரக்கு சேர்கிற என்னோட ஆர்வத்த நீங்க பாராட்டியே ஆகனும் (என்ன பண்றது கேட்டு வாங்க வேண்டியதா இருக்கு ) . அப்படியே ஒரு பீர லைட்டா குடிச்சிட்டே பக்கத்து கேபின்ல என்ன பேசுராங்கனு கேட்க ஆரம்பிச்சேன் , அங்கே .... மச்சி நீ என்ன நம்புறியா இல்லையா ?., என்னடா மச்சி இப்படி கேட்குற சத்தியமா நம்புறேண்டா .. அப்படினா கேளு அவ அப்படி பன்னிருக்க மாட்டா ... ஆஹா ஒரு பொன்ன பத்தி பேசுறாய்ங்கா அப்படினா நாம பதிவுபோட கண்டிப்பா ஒரு மேட்டர் சிக்கிருச்சு ( இது நான் )..


அவன் : இல்ல மச்சி நான் அவளோட எத்தன வருசமா பழகிருக்கேன் எனக்கு தெரியும்டா அவ பன்னிருப்பா


இவன் : எனக்கு நம்பிக்கை இல்லடா அவ பன்னிருக்க மாட்டா ..


அவன் : என்னடா என்ன நம்ப மாட்டியா ? அவ பன்னிருபாடா


இவன் : அவ போய் சே சே இருக்காது


அவன் : அவதாண்டா பன்னா எவ்வளவு வேணாலும் பெட் கட்டுவேன்


நான் ( மனதிற்குள் ) டேய் என்னதாண்ட அவ பன்னா சொல்லி தொலைங்கடா சீக்கிரம் இன்னும் எனக்கு பதிவு போட மேட்டர் கடைக்கலடா.


இவன் : மச்சி நீ எனக்கு ஒரு பீர் வாங்கிகொடுதேனு நான் எது சொன்னாலும் நம்புவேணு பார்த்தியா போடா


அவன் : அப்படிலாம் இல்ல மச்சி அவதாண்டா பன்னா , என்ன நம்பு .


இவன் : அவ பன்னிருக்க மாட்டா  


நான் ( மனதிற்குள் ) டேய் அவ என்னத்த பன்னாலோ இல்லையோ இனிநான் ஒன்னு பன்ன மாட்டேன்டா, இனி எவன் குடிச்சுட்டு பேசுனாலும் நான் ஒட்டு கேட்க மாட்டேன்டா ..ஒரு பீர் குடிக்கலாம்னு வந்தவன ரெண்டு பீர் குடிக்க வைச்சுட்டாங்க பாவிங்க .. கடைசியா கிளம்பும்போது ஒரு வழியா மேட்டர்க்கு வந்துட்டாய்ங்களானு பார்த்தேன் ...


அவன் : மச்சி உன் தல மேல சத்தியம் அவதாண்டா பன்னா 


இவன் : மச்சி உன் தளபதி மேல சத்தியம் அவ பண்ணிருக்க மாட்டா 


அட பாவிங்களா அவ பன்னதுக்கு இவுங்க ரெண்டு பேரும் என்னடா பாவம் பன்னாயிங்க .. சத்தியமா இந்த பாருக்கு இனிமேல் குடிக்க வர மாட்டேன்டா .. 


நண்பர்களே நானும் ஒழுங்கா ஒரு பதிவு எழுதனும்னு ஆசைதான் என்னத்த பன்ன ???

Monday, December 6, 2010

என்னை அழ வைத்த டிவி நிகழ்ச்சி

எச்சரிக்கை : தப்பி தவறி கூட பெண்கள் இந்த பதிவை படிக்க வேண்டாம் ..




பல பேர் சேர்ந்து பொது மாத்து போட்டாலும் அசால்டா அழுகாம போற ஆள் நான் ஆனா என்னையே ஒரு டிவி நிகழ்ச்சி அழுக வச்சுடுச்சு ... ஆனா இது நடந்தது நான் பத்தாவது படிக்கும்போது.. பொதுவா ஆண்கள் எல்லாத்துக்கும்  சுய இன்ப பழக்கம் இருக்கத்தான் செய்யும் . நான் பத்தாவது படிச்சுட்டு இருக்கும்போது வயசுக்கு வந்தேன் , யாரும் தப்பா நனைச்சுகாதிங்க that means எனக்கு அப்போதான் அந்த மேட்டர்லாம் கொஞ்ச கொஞ்சமா தெரிஞ்சுச்சு ..சரி என்னதான் அதுல இருக்குனு தெரிஞ்சிக்கலாம்னு ஆரம்பிச்சு ஒரு ஒன்னற மாசம் அதுபாட்டுக்கு நடந்துட்டு இருந்துச்சு அப்போ ஒருநாள் நான் டிவி பார்த்துட்டு இருந்தேன் , ஒவ்வொரு சேனலா மாத்திட்டு இருக்கும்போது ஒரு சேனல்ல ஒருத்தர் சட்டை போடாம உட்கார்ந்து ஏதோ உரல்ல வச்சு இடிச்சுட்டு இருந்தார் , என்னடா இதுன்னு ஆர்வமா பார்த்தேன் கொஞ்ச நேரத்துல அதே மாதிரி நிறைய போட்டோ மாறி மாறி வந்துச்சு .. அப்புறமா ஒருத்தர் வந்து பேச அரம்பிசாரு அவர் முடிலாம் கருப்பா இருக்க கிர்தா மட்டும் வெள்ளையா இருந்துச்சு , ஆளு வித்தியாசமா இருக்காரே அப்படி என்னதான் சொல்ல போறார்னு பார்க்கலாமேன்னு பார்த்தேன் .. இனி அவர் , ஏன் எதுக்கு ஏன்டா ? இந்த வயசுலேயே இந்த _______ பழக்கத்த பழகிட்டு நியும் கெட்டு பின்னாடி உன்ன நம்பி வரபோற பொண்ணோட வாழ்க்கையையும் சேர்த்து கேடுகீறிங்க ? தயவுசெஞ்சு சொல்றேன் நீங்கலாம் கல்யாணமே பண்ணிக்காதீங்க சே... இத பார்த்த உடனே என் கன்னு ஆட்டோமேட்டிக்கா கலங்கிடிச்சு.. அய்யய்யோ இது இவ்வளவு பெரிய தப்பா இது தெரியாம ஒன்னற மாசமா பன்னிட்டு இருக்கோமே ... அப்போ அவருக்கு ஒரு போன் வருது .. ம் சொல்லு என்னது அடுத்த மாசம் கல்யாணமா ? நீயெல்லாம் ஏன்டா கல்யாணம் பண்ணிக்க போற , உனக்கு அறிவு இருக்கா இல்லையா அந்த பொண்ணு என்ன பாவம் பன்னா அவள கல்யாணம்பன்னி உன்னால என்ன சுகத்த கொடுக்க முடியும் மொத நி போன்ன வை ... நான் அழுதே விட்டேன் ஏன்னா நான் அப்போதான் அனிதானு ஒரு பொன்ன கரெக்ட் பன்னிட்டு இருந்தேன் .. அப்படியே அவர் அவரோட டென்ஷன்ன கட்டுபடுத்திகிற மாதிரி என்என்னமோ பன்னி திரும்பவும் பேச அரம்பிசாரு .. நான் சொல்லறதே கேளுங்க ஏதோ நடந்தது நடந்துபோச்சு என்ன உங்க தாத்தாவா நனைச்சிகுங்க சேலத்துக்கு வாங்க என்ன வந்து பாருங்க நாங்க பழங்காலத்து ஓலை சுவடிகளை வச்சு பல மருந்து தயாரிச்சிருக்கோம் வாங்க நாங்க இருக்கோம்னு வாசன் ஐ கேர் மாதிரி சொன்னாரு, இத கேட்ட உடனேதான் எனக்கு உயிரே வந்துச்சு அப்போ நான் நினைச்சிகிட்டேன் உண்டியல ஒரு 120 ருபா இருக்கு எப்படியோ இன்னும் ஒரு 30 ருபா சேர்த்து யாருக்கும் தெரியாம சேலத்துக்குபோய் இந்த டாக்டர் தாத்தாவ பார்த்துடணும்னு முடிவு பண்ணேன் .. அப்பறம் அந்த பழகத்தா அதோட விட்டாச்சு .. அப்பறம் காலேஜ் சேர்ந்து விவரம் தெரிஞ்ச அப்புறம்தான் தெரிஞ்சிச்சு அவர் சொன்னதெல்லாம்  பொய்னு.   இப்படித்தான் சின்ன வயசுல டிவிய பார்த்து misunderstand ஆல குழப்பம் ஆயிடுச்சு. நான் பரவாயில்லை என் நண்பர் ஒருத்தர் சின்ன வயசா இரும்போது டிவி பார்த்துட்டு இருந்துருக்காரு அப்போ நம்ம அஜித் நடிச்ச உயிரோடு உயிராக னு ஒரு படம் ஓடிட்டு இருந்துருக்கு அதுல அஜித் ஹீரோயின் கன்னத்துல முத்தம் கொடுத்துருக்காரு அத இவர் பார்த்துட்டு இருக்கும்போது இவர் பக்கத்து வீட்டு பசங்க இவர விளையாட கூப்டாங்கனு இவர் போயிட்டாரு போனவர் கரெக்டா படத்தோட கிளைமாக்ஸ்லதான் வந்துருகாரு அப்போ ஹீரோயின் பிரசவ வழில துடிச்சுருகாங்க பக்கத்துல அஜித் பதறிட்டு இருக்காரு இத பார்த்த உடனே நம்ம நண்பர் என்ன நனைச்சிட்டாரு பொண்ணுங்களுக்கு கன்னத்துல முத்தம் கொடுத்துட்டா அவங்களுக்கு குழந்தை பிறந்துடும்னு நினைச்சிட்டார், அப்பவே அந்த பிஞ்சு மனசுல இது நஞ்சா விழுந்துடிச்சு, அதுக்கு அப்புறம் அவரு 9  வது படிக்கும்போது ஒரு பொன்ன லவ் பன்னாரு ஆனா அந்த மேட்டர மனசுல வட்சிட்டு அந்த பொண்ணுக்கு ஒரு முத்தம்கூட கொடுக்கல, என்னடா இவன் இப்படி நம்மள காய விடறானேன்னு அந்த பொண்ணு இவர divorce பண்ணிடுச்சு இல்ல இல்ல கட் பண்ணிடுச்சு , இப்படியே இவருக்கு அஞ்சாறு லவ் போனதுக்குப்புறம்தான் உண்மையே தெரிஞ்சிச்சாம்... அது அப்படி இல்லைன்னு .

Thursday, December 2, 2010

Wikileaks தெரியும் அது என்ன venkileaks? - அதிர்ச்சி தகவல்

பதிவுக்கு போறதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான விஷயம் :
நீங்கள் படித்து கொண்டிருக்கும் இந்த வலைத்தளம் உலகிலேயே நம்பர் ஒன் தமிழ் வலைத்தளம் என IRDCAF ஆல் அங்கீகரிக்க பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன் ( IRDCAF னா என்னான்னு கேட்றாதீங்க ஏனா எனக்கே தெரியாது ) எல்லாம் ஒரு விளம்பரத்துக்குத்தான்.


உலக நாடுகளின் குறிப்பா அமெரிக்காவின் ரகசியங்களை அம்பலபடுத்தி பரபரப்பை ஏற்படுத்தி வருது wikileaks என்ற இணையத்தளம்.அதே மாதிரி பல பதிவர்களோட வெளிவராத ரகசியங்களை விரைவில் வெளியிட்டு பரபரப்பை பதிவுலகில் ஏற்படுத்த வருகிறது venkyleaks என்ற இணையத்தளம் . அதை பற்றிய ஒரு சிறு பார்வை .


அந்த தளம் முதல் கட்டமாக வெளியிட போகும் சில பதிவர்களின் ரகசியங்கள் நமது காதுக்கு எட்டின, அவை ...



1. Wikileaks இணையத்தளம் அமெரிக்காவின் பல கேபிள்களை வெளியிட்டு கொண்டிருகின்றன அதேபோல் விரைவில் இந்தியாவின் பல கேபிள்களை வெளியிட போகிறதாம், இந்த இணையதளத்திற்கு இதுபோன்ற கேபிள்களை சப்ளே செய்வது வெறும் யாரும் அல்ல , சொன்னால் நம்ப மாட்டிர்கள் அது பிரபல பதிவர் அண்ணன் கேபிள் சங்கர்தான்...அப்போ இவர்தான் weapon suppliernu சொல்லுங்க .. 


Cable சங்கர்


2. கணக்கில் வராத பல கோடி சொத்துகளுக்கு சொந்தகாரர் இந்த பதிவர் , எங்கே விஷயம் வெளிய தெரிஞ்சா பிரச்சனை ஆயிடுமோன்னு இவரு இவருக்கு வச்சுகிட்ட பேரு வெறும்பய ... அட கொடுமையே ...




3. இந்த பதிவர் மேல Google கொலைவெறில இருக்காம் , காரனம் இதனாம் இவரு தன்னோட வலைதளத்துக்கு வச்சுருக்குற பேரு பாலாவின் பக்கங்கள் ... ஆன இவரு எழுதுறதெல்லாம் Google ஓட blogger.com பக்கங்கள் .. விரைவில் Google இவர் மேல கேஸ் போடலாம்னு எதிர்பார்க்கபடுகிறது ... அப்போ முன் ஜாமீன் வாங்கிடுங்க ...


4. புது வீடு கட்டிருகேன்னு தன்னோட வலைதளத்தை அறிவிப்பு செஞ்ச பதிவர் வென் புரவிக்கு திருப்பூர்ல ஒரு சின்ன வீடு இருக்காம் .... இப்பலாம் யாரையும் நம்ப முடியல .. 




5. இவர் ரொம்ப தைரியமான பதிவர் அவர் பெயர முழுசா சொல்ல மாட்டாரு அவர சுருக்கமா SK னு கூப்பிடுவாங்க அதோட உண்மையான அர்த்தம் S for சந்தனம் K for கடத்தல் .... எவ்வளவு தைரியம் .




6. அடுத்து எங்க ஊரு காரரு அறியாமையே ஆனந்தம்னு சொல்லி தன் பெயரை கரூர் கிறுக்கன்னு  வட்சிகிட்டவர் இவர்மேல ஆள் கடத்தல் கற்பழிப்புனு பல கேஸ் இருக்குனா நீங்க நம்புவீங்களா ஆன அதான் உண்மை ... 




அப்ப பதிவுலகில் யாருமே ஒழுங்கா இல்லையா ? அப்படினு ஒரு சந்தேகம் இந்நேரம் உங்களுக்கு வந்திருக்கும் இதே சந்தேகம்தான் Scotland Yard போலீஸ்களுக்கும் வந்துச்சு உடனடியா அவங்க உலகம் முழுவதும் தேடி கடைசியா தமிழ்நாட்டு போலீஸ்கிட்ட கலந்து ஆலோசிச்சு எடுத்த முடிவு .... இந்த வெங்கட் சரண்தான் அந்த நல்லவன்கிறதுதான் ... இத படிச்ச உடனே சிலர் டென்ஷன் ஆகலாம் ஆனா சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும் ..


ok friends மேல சொன்ன எல்லாம் மேட்டரும் கற்பனைதான் யாரும் அந்த பதிவர்கள்கிட்ட போட்டு கொடுதுராதீங்க நான் ஏன் சொல்லறேனா ஏற்கனவே நமக்கும் அந்த பதிவர்களுக்கும் வாய்கால் தகறாரு இருக்கு இதுல இது வேறையா...



Wednesday, December 1, 2010

ஏகன் vs சுறா - ஒரு மொக்க chatting

எனக்கு பிடித்த பொழுதுபோக்கு நண்பர்களுடன் chat செய்வது அதிலும் சில நண்பர்களுடன் chat செய்யும்போது பயங்கரமாக கலாய்த்துகொள்வோம் , அப்படிப்பட்ட நண்பர்களுள் ஒருவன்தான் ரங்கபிரபு, நேற்று அவனோடு chat செய்தேன் , அவன் ஒரு விஜய் ரசிகன், அதுவே போதுமே கலாய்க்க....









venkat saran is online


அவன் : இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் my dear friend. My best wishes for all of ur movements


நான் : வாஞ்சிநாதன் நகர் நற்பணி மன்றம் சார்பாக என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் , மிக்க நன்றி .


அவன் : வாஞ்சி நற்பணி மன்ற தலைவரே நீங்கதானே தளபதி 


நான் : நீ இப்படிலாம் சொன்னா மட்டும் நான் அரசியலுக்கு வந்துடுவேன்னு நனைச்சியா , நான் இமய மலைக்கு  போனும் .


அவன் : நான் எப்போ அப்படி சொனேன் ? நீயா imagine பண்ணிக்காத , நான் விஜயவச்சு சொன்னா நீ தலைவர் ரேஞ்சுக்கு போய்டியா ?


நான் : விடுடா சும்மா chat லயாவது சொல்லிக்கலாம்னு பார்த்தா....


அவன் : ஆசைய பாரு, போங்க தம்பி அப்புறம் நாங்கலாம் எங்க போறது ?


நான் : என்ன பா தளபதி மட்டும் என்ன சாதாரண ஆளா? ஜெயலலிதா, விஜயகாந்த் , விஜய் மூனு பேரும் கூட்டணி வச்சு வரபோற தேர்தல சந்திக்க போறங்களாம் , இப்போதான் பஸ் ஸ்டாண்ட்ல நக்கீரன் விளம்பரத்துல பார்த்தேன் .


அவன் : அப்போ எங்க தளபதி கண்டிப்பா அடுத்த MLA ஆகபோரார்னு சொல்லுங்க , Dr. Ilayathalapathi Vijay MLA va ?


நான் : அமாம் MLA தான் Member Of Lorry Drivers Association அவன் நடிக்கற லட்சணத்துக்கு கண்டிப்பா கொஞ்ச நாள்ல சினிமாவ விட்டே துரத்திடுவாங்க , அப்புறம் அவன் லாரி ஓட்டி தான் பொழப்பு நடத்தனும் ...


அவன் : சரி அத விடு கண்டிப்பா நாம இந்தியன் பார்லிமெண்ட்ல இடம் புடிச்சே ஆகனும்.


நான் : கண்டிப்பா நமக்காகவே ரெண்டு சீட்டு எப்பவும் பார்லிமெண்ட்ல காத்திருக்கும் 


அவன் : ok thats good   , நாம ரெண்டு பேரும் சேர்ந்து கரூர் மக்களுக்காக பார்லில குரல் கொடுப்போம் .


நான் : நமக்கு கொடுக்கறது Audience சீட் அங்க இருந்து குரல் கொடுத்தா போலீஸ்ச விட்டு வெளிய துரத்திடுவாங்க ... சரி உங்க தளபதி MLA மேட்டர்க்கு வா..





அவன் : யோ அப்படிலாம் யாரையும் கேவலமா பேசாதையா , தளபதிக்காக உயிரையே கொடுக்குற கூட்டம் எங்களுது பா..


நான் : நீ உயிரைலாம் கொடுக்க வேண்டாம் just உங்க தளபதியோட சுறா படத்த continue வா ரெண்டு show பாரு போதும் , உயிர நீ கொடுக்க வேண்டாம் அதுவா போய்டும் .


அவன் : ரெண்டு தடவ என்ன ஆயிரம் தடவ பார்போம் ..


நான் : மூணாவது தடவ நீ பார்க்கும்போதே செத்துடுவ அப்புறம் எங்க ஆயிரம் தடவ பார்க்குறது ?


அவன் : மனதில் உறுதி வேண்டும் 


நான் : அதுக்கு மொத உயிர் வேண்டும்


அவன் : அந்த படத்துக்கு என்னையா ? நாங்கலாம் ஏகனேயே ரெண்டு தடவ பார்த்துட்டு உயிரோட இருக்கோம் ..


நான் : தல படத்த தப்பா பேசாத அந்த ஏகன் படத்த 16 மொழிகள்ள டப் பன்ன பேச்சிவார்த்தை நடந்துட்டு இருக்கு தெரியுமா ?


அவன் : தமிழ் நாட்டு மக்கள கொன்னது பத்தாதா ? எனது ஆழ்ந்த அனுதாபங்கள் அந்த நாட்டு மக்களுக்கு ..


நான் : தலய ஓட்ட ஆரம்பிச்சுட்டானே என்ன பண்ணலாம் ........?


venkat saran is offline 








இந்த வருடம் ஊழல் வருடம்









இந்த வருடம் ஊழல்களின் வருடம் போல இருக்கு , எனக்கு விவரம் தெரிஞ்சு இதனை ஊழல் ஒரே ஆண்டுல வெளிவருவது ( சினிமாவாட இது  வெளிவரதுக்கு ) இதுதான் முதல் முறை , ஆனா எனக்கு ஒன்னுதான் புரியல எல்லாமே பன்னது பெரிய பெரிய ஊழல்தான் ஆனா பெருசா ஏதும் நடவடிக்கை எடுத்தமாதிரி தெரியல , யாராவது ஒருத்தர ஊழல்ல பிடிக்குறாங்க உடனே ஒரு வாரத்துக்கு அவரை பத்தின மேட்டர் இல்லாம எந்த பேப்பரும் , எந்த சேனலும் நியூஸ் போடுறதில்ல , உடனே சம்மந்தபட்டவர் அவரோட பதவிய ராஜினாமா பண்ணிடுவாரு இல்லேன்னா அவர பதவி நீக்கம் செஞ்சுடுவாங்க அதோட அவ்வளவுதான் , சில பெற மட்டும் கைதும் செஞ்சுருகாங்க , எனக்கு தெரிஞ்சு முதன்முதலா அம்பலம் ஆன பெரிய ஊழல் கேத்தன் தேசாய்வோட ஊழல்தான் அம்மாடி எவ்வளவு சொத்து அந்த ஆளுக்கு ,




அடுத்து மாட்டுனது நம்ம ஐபில் தலைவர் லலித் மோடி , அதுலயும் ஏகபட்ட முறைகேடு, விளையாட்டு மேட்டர்ல  விளையாடிட்டார், அடுத்து விளையாடினது நம்ம சுரேஷ் களவானி சாரி சுரேஷ் கள்மாடி, cnbc tv 18 ல அவர Beautiful peoplenu ஒரு ப்ரோக்ராம்ல பேட்டி எடுத்தாங்க common wealth gamesa பத்தி  என்னா அழகா கதை அளந்தான் , மேட்டர் வெளிய வந்ததுக்கு பின்னாடிதான் தெரிஞ்சது அவரு building plana வச்சுதான் அவ்வளவு பேசுனாருன்னு .




அடுத்து மாட்டினது மகராஷ்டிரா சிஎம் அசோக் சவான் , கார்கில் போர்ல நாட்டுக்காக உயிர விட்டவங்க குடும்பத்துக்கு ஒரே ஒரு வீடு அதுலயும் பிராடு ,

       

என்னடா தமிழ் நாட்டுல எதுவுமே நடக்கலைன்னு பார்த்த நடந்துருச்சு நடத்திட்டார் நம்ம மந்திரி ராஜா , ஒரு லட்சத்து எழுபதஞ்சாயிரம் கோடியாம் யாராவது அதுக்கு எத்தன சைபர்னு எனக்கு சொல்லுங்களேன் , அடுத்து latest எல் ஐ சி வீட்டு கடன் வழங்குறதுல முறைகேடுனு பல பெரிய வங்கி அதிகாரிகள கைது பன்னிருகாங்க ... சரி அடுத்த வாரம் என்ன ஊழல்னு பார்போம் .

Monday, November 29, 2010

ஆஸ்திரேலியாவின் விளையாட்டு வெற்றிகளுக்கு காரனம்

கிரிக்கெட்டிலும் சரி காமன் வெல்த் விளையாட்டு போட்டிகள் மற்றும் இன்னும் பல பல விளையாட்டு போட்டிகளிலும் இந்தியாவை விட ஆஸ்திரேலியா அதிக வெற்றிகளை குவிப்பதற்கு என்ன காரனம் என்று எனக்கு ரொம்ப நாளா பெரிய சந்தேகம் இருந்துச்சு, அதுக்கான விடை நேற்றுதான் தெரிஞ்சுச்சு .


அதுக்கு காரனம் இதுதான் , 



என்ன ஒரு கண்டுபிடிப்பு !



Sunday, November 28, 2010

சர்வம் – போலிகள் மயம்


வணக்கம் நண்பர்களே அதிக வேலை பளு(?) அதனால எனக்கு மெயில்ல வந்த ஒரு காமெடிய இங்க post பண்ணிருக்கேன் படிங்க சிரிங்க





போலி மார்க் சான்றிதழ்களை வழங்கி, பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற முயன்ற மாணவர்கள் சிலர் பிடிபட்டுள்ளதையடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க, காவல்துறை தனிப் படைகளை அமைத்துள்ளது. நாடு போய்க் கொண்டிருக்கிற நிலையில், அப்படியே முக்கிய குற்றவாளிகள் சிக்கினாலும், போலீஸ் விசாரணையில் அவர்கள் இப்படி பதில் அளித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

“
உங்க தொழிலே போலி மார்க் சான்றிதழ்கள் தயாரிக்கிறதுதானா?”

“
இல்லைங்க. பல தொழில்களிலே அதுவும் ஒண்ணு. எந்த சர்டிஃபிகேட் வேணும்னாலும் எங்க கிட்டே கிடைக்கும். போலி பாஸ்போர்ட், போலி விசா, போலி பத்திரம், போலி முத்திரைத் தாள்னு நாங்க தயாரிக்காத டாக்குமென்டே இல்லை. பாக்கறதுக்கு ஒரிஜினலை விட நல்லாவே இருக்கும்”

“
அடப் பாவிங்களா! உங்களுக்கு வேறே தொழிலே தெரியாதா?”

“
ஏன் தெரியாது? ஒரு காலத்திலே கள்ள நோட்டே அடிச்சவங்க ஸார் நாங்க. அங்கே எங்களை விட சீனியர்கள் இருந்தாங்க. அதான் போலி சர்டிஃபிகேட்கள் தயாரிக்கிற வேலையிலே இறங்கினோம்”

“
கவர்மென்ட் செய்ய வேண்டிய வேலையை எல்லாம் நீங்க எப்படிய்யா செய்யலாம்?அது சட்ட விரோதம்னு தெரியாதா?”

“
என்ன ஸார் பேசறீங்க நீங்க? உங்க கவர்மென்ட்லே எந்த சர்டிஃபிகேட்டையாவது காலா காலத்துலே வாங்க முடியுமா? மைல் கணக்கிலே க்யூவிலே நின்னு, மாசக் கணக்கிலே இழுத்தடிச்சு, கண்டவங்களுக்கெல்லாம் லஞ்சம் கொடுத்துத்தானே எதையும் வாங்க வேண்டியிருக்குது? எங்க கிட்டே அப்படியில்லை. எந்த சர்டிஃபிகேட்டும் கேட்டவுடனே கிடைக்கும். ஃபிக்ஸட் ரேட். மேற்கொண்டு பைசா தர வேண்டியதில்லை. மக்களுக்கு நீங்களும் நல்லது செய்ய மாட்டீங்க, நாங்களும் செய்யக் கூடாதுன்னா எப்படி?”
“இதுக்கெல்லாம் உங்களுக்கு பணம் எங்கேயிருந்து கிடைச்சுது?”

“
போலி செக் கொடுத்து, பேங்க்லேர்ந்து பணம் வாங்கித்தான் முதல் போட்டேன்.”

“
எப்படி ஒரிஜினல் மாதிரியே உங்களாலே போலிச் சான்றிதழ்களைத் தயாரிக்க முடியுது?”

“
நாங்க உங்களை மாதிரி சம்பளத்துக்கு வேலை செய்யறவங்க இல்லை ஸார். தொழில்லே அக்கறை இருக்கிறவங்க. அதனாலேதான் எங்களை ஒழிக்க அரசாங்கத்தாலே முடியலை. போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கிறேன்னு புறப்பட்டீங்க. என்ன ஆச்சு? ஒரிஜினலையெல்லாம் ரத்து பண்ணிட்டு நிக்கறீங்க. தேவையா உங்களுக்கு இந்த வேலை?”

“
இப்ப நான் எந்த சர்டிஃபிகேட்டைக் கேட்டாலும் உடனே தர முடியுமா?”

“
என்ன ஸார் அப்படிச் சந்தேகப்படறீங்க? இப்பவே உங்களுக்கு போலி ப்ரமோஷன் ஆர்டர் போட்டுத் தரவா? யாரும் கண்டுபிடிக்க முடியாது. கோர்ட்டுக்குப் போனாக் கூடக் கவலையில்லை. அங்கேயும் எங்க ஆளுங்க இருக்காங்க. தேவைப்பட்டா போலி ஜட்ஜ்மென்டே வாங்கிக் காட்டறேன்”

“
ஐயையோ... அதெல்லாம் வேண்டாம்” 
“பயப்படறீங்க போல இருக்குது. சரி, பேங்க் லோன் எத்தனை லட்சம் வேணும்? பத்தே நிமிஷத்திலே எல்லா டாக்குமென்டையும் ரெடி பண்ணி, சேங்ஷனும் வாங்கிக் கொடுத்துடறேன்”

“
யோவ்... கேக்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுய்யா! எப்படி உங்களாலே இதெல்லாம் செய்ய முடியுது?”

“
தனியா முடியுமா ஸார்? அததுக்குன்னு ஆள் வெச்சிருக்கோம். பேப்பர் வாங்கணும். ஸ்டாம்ப் செய்யணும். கையெழுத்துப் போடணும். பிரிண்ட் பண்ணனும். ஏஜென்டுங்க வெக்கணும். டிஸ்ட்ரிப்யூஷன் செய்யணும். டைப்பிஸ்ட், க்ளார்க், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், பி.ஆர்.ஓ.ன்னு ஏராளமான பேருக்கு சம்பளம் கொடுக்கறோம். பாதி வருமானம் அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுக்கறதிலேயே போயிடுது. ஒரு தொழிலதிபர் ஆகறதுன்னா சும்மாவா?”

“
ஒரு சட்ட விரோத செயல்லே இத்தனை பேரையா ஈடுபடுத்தறீங்க?”

“
அதை ஏன் அப்படிப் பாக்கறீங்க? இந்தத் தொழில் மூலமா எத்தனை குடும்பங்களைக் காப்பாத்தறோம்னு பாருங்க. உங்க கவர்மென்டாலே இவங்களுக்கெல்லாம் வேலை கொடுக்க முடியுமா? ஆனா எங்களுக்கு இன்னும் ஆள் தேவைப்படுது. யாராவது இருந்தா சொல்லுங்க”

“
உங்களாலே கவர்மென்ட்டுக்கு எவ்வளவு கெட்ட பேரு தெரியுமா?”

“
என்ன கெட்ட பேரு? சொல்லப் போனா, கவர்மென்ட் வேலையை நாங்க குறைச்சிருக்கோம். நான் கட்டற அளவுக்கு வருமான வரி நீங்க கட்டறீங்களா?அரசாங்கத்துக்கு உங்களாலே லாபமா? என்னாலே லாபமா? மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க”
“மாட்டிக்குவோம்ன்ற பயமே இல்லையாய்யா உங்களுக்கு?”

“
நல்ல கேள்வி. இப்படித்தான் என் ஃப்ரண்ட் ஒருத்தன் பத்தாவதே பாஸ் பண்ண முடியாம கஷ்டப்பட்டுக்கிட்டிருந்தான். நான்தான் பரிதாபப்பட்டு டாக்டர் சர்டிஃபிகேட் வாங்கிக் கொடுத்து அவனை போலி டாக்டராக்கினேன். மாட்டிக்கிற மாதிரி சூழ்நிலை வந்ததும், டக்குன்னு அவனை போலி ஸி.பி.ஐ. அதிகாரியா மாத்திட்டேன்”

“
நீ எப்படிய்யா இந்தத் தொழிலுக்கு வந்தே?”

“
அது பெரிய கதைங்க. எங்கப்பா பெரிய லட்சாதிபதியா இருந்தவருங்க. ஒருநாள் வருமான வரித் துறை அதிகாரிகள் நாலஞ்சு பேர் வந்து, வீட்டை சோதனை போட்டு எல்லாத்தையும் அள்ளிக்கிட்டுப் போயிட்டாங்க. அப்புறம்தான் அவங்க போலி வருமான வரித்துறை அதிகாரிகள்னு தெரிஞ்சது”

“
போலீஸ்லே புகார் கொடுத்தீங்களா?”

“
கொடுத்தோம். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க எங்கப்பா போலீஸுக்கு எக்கச்சக்கமா லஞ்சமும் கொடுத்தார். அப்புறம்தான் அவங்க போலி போலீஸ் அதிகாரிகள்னு தெரிஞ்சது.”

“
ஐயையோ!” 
“கவலையிலே எங்கப்பா சாராயம் குடிக்க ஆரம்பிச்சாரு. பாவம், அது கள்ளச் சாராயம்னு அப்ப அவருக்குத் தெரியலை”

“
அப்புறம்?”

“
கள்ளச் சாராயம் குடிச்சதிலே உடம்பு கெட்டு, பலவிதமான வியாதிகள் வந்தது. டாக்டர் கிட்டே போனோம். வியாதி முத்தின பிறகுதான் அவர் போலி டாக்டர்னு புரிஞ்சுகிட்டோம்.”

“
அடடா! நல்ல டாக்டர்கிட்டே போயிருக்கக் கூடாதா?”

“
நல்ல டாக்டரைத் தேடிக் கண்டுபிடிச்சுப் போனோம். அவர் எழுதி கொடுத்த மருந்தைத்தான் எங்கப்பா சாப்பிட்டார். ஆனா, அதெல்லாம் போலி மருந்துகள்னு எங்களுக்கு முதல்லேயே தெரியாமப் போச்சு...”

“
அட கஷ்ட காலமே!”

“
சாகறதுக்கு முன்னாலே எங்கப்பா என்னைக் கூப்பிட்டு, ‘மகனே... போலிகளாலே என் வாழ்க்கையே சீரழிஞ்சிடுச்சு. அதுக்கு நீ பழி வாங்கணும். போலிகள் மூலமாவே வாழ்க்கையிலே நீ ஜெயிச்சுக் காட்டணும்’னு சத்தியம் வாங்கிக்கிட்டாரு”
“நீ என்ன பண்ணே?”

“
ஆரம்பத்திலே போலி பாக்கெட் தண்ணி, போலி மினரல் வாட்டர் தயாரிச்சு வித்தேன். வருமானம் போதலை. போலி லாட்டரிச் சீட்டு அச்சடிச்சேன். அரசாங்கம் தடை பண்ணிடுச்சு. திருட்டு வி.சி.டி. போட்டேன். போலீஸுக்கு கமிஷன் குடுத்து கட்டுப்படியாகலை. ரியல் எஸ்டேட் தொழில்லே இறங்கி, போலி மனைகளை வித்தேன். அதுலே எக்கச்சக்க போட்டி. சமாளிக்க முடியலை.”

“
உனக்கு நல்ல சிந்தனையே வராதா?”

“
வந்ததுங்க. அதனாலேதான் எனக்குப் பதிலா இன்னொருத்தனை பரீட்சை எழுத வெச்சு,ப்ளஸ் டூ பாஸ் பண்ணேன். போலி அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் மூலம் தாசில்தார் ஆஃபீஸ்லே க்ளார்க்கா சேர்ந்தேன். ஆறே மாசத்திலே நானே போலி ப்ரமோஷன் ஆர்டர் போட்டுக்கிட்டு தாசில்தாராவே ஆயிட்டேன்...”

“
அடப்பாவி!”

“
இப்படி படிப்படியா முன்னேறும்போதுதான் மக்களுக்கு சேவை செய்யணும்ங்கற ஆசை வந்தது. அங்கேயே தொழில் நுணுக்கம் கத்துக்கிட்டு, போலி டிரைவிங் லைசென்ஸ்,போலி ஜாதி சான்றிதழ், போலி இருப்பிடச் சான்றிதழ்னு மக்களுக்கு வேண்டிய சான்றிதழ்களை தயாரிக்க ஆரம்பிச்சேன். நல்ல வருமானம் வந்தது. தாசில்தார் வேலையை ராஜினாமா பண்ணி தொழிலதிபர் ஆயிட்டேன்.”

“
உன்னை மாதிரி இந்தத் தொழில்லே இருக்கிற எல்லோருமே லட்சாதிபதிகள்தானா?” 
“அப்படிச் சொல்ல முடியாதுங்க. போலி பஸ் டிக்கெட் அச்சடிச்சு கஷ்டப்படறவங்களும் எங்க தொழில்லே இருக்காங்க”

“
போலிச் சான்றிதழ்களைத் தயாரிக்கிறது தப்புன்னு உங்களுக்குத் தோணவே இல்லையா?”

“
எதுங்க தப்பு? எங்க வளர்ச்சியைப் பார்த்துத்தான் இன்னைக்கு அரசாங்கமே க்ளோனிங் முறையிலே போலி ஆடு, மாடுகளைக் கூட உருவாக்க ஆரம்பிச்சிருக்குது. நியாயமா காபிரைட் சட்டப்படி அரசாங்கம் எங்களுக்கு நஷ்டஈடே கொடுக்கணும். போனாப் போகுதுன்னு நாங்க அதைக் கேக்கலை”

“
யோவ் எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போடறே?”

“
அதை விடுங்க ஸார். இப்ப தலைவர்களா இருக்கிற எல்லோருமே ஒரிஜினல்தானா?மக்களையும் தேர்தல் கமிஷனையும் ஏமாத்திட்டு, எத்தனை போலிகள் தலைவர்கள் ஆகியிருக்காங்க? அதைத் தடுக்க உங்களாலே முடியுதா? நாங்க ஏமாந்தவங்கன்னுதானே எங்களைப் பிடிக்கிறீங்க? எங்க விஷயத்திலே தலையிட்டா உங்களுக்குத்தான் பிரச்சனை”

“
உன்னை மாதிரி ஆளுங்களை விட்டா இந்த சமுதாயத்துக்கே ஆபத்து. உங்களை எல்லாம் உள்ளே தள்ளாம விட மாட்டோம்”

“
ஓஹோ! அவ்வளவு தூரத்துக்கு துணிஞ்சுட்டீங்களா? அப்ப பிடிங்க, உங்க சஸ்பென்ஷன் ஆர்டர். முடிஞ்சா, இதை போலின்னு நிரூபிங்க.