Wednesday, December 8, 2010

திரை நட்சத்திரங்களின் கலக்கல் கவிதைகள்

நம்ம திரையுலக பிரபலங்கள் திரைபடத்தில் சொன்ன கவிதைகளின் சிறு தொகுப்பு உங்களுக்காக...


ஜனங்களின் கலைஞன் விவேக் ...





காதல் 
காதல் ஒரு கழட்டி போட்ட செருப்பு 
சைஸ் சரியா இருந்தா 
யாரு வேணாலும் மாட்டிக்கலாம்!


ஆட்டோ 

ஆட்டோவே நீ எப்போது வருவாய் 
உன்னிடம் தரும் அளவிற்கு 
எங்களிடம் இல்லை வருவாய் ! 

அடுத்து நம்ம மிர்ச்சி சிவா





காதல் நாய் 

மரத்துல இருக்குது காயி
மரத்துல இருக்குது காயி
தூங்க தேவை பாயி  
தூங்க தேவை பாயி
நீ ம் னு சொன்னா இந்த சிவா 
உன் காலடி நாயி செல்வி நாயி!

இன்னொரு கவிதை(?)

மவுன் ரோட்டுல அன்னா சாலை 
ரஜினிகாந்த்  முரட்டு காளை......

நம்ம பார்த்திபன் ...


ஒரு அழகான பொண்ணு ஸ்வீட் சாப்பிடுற அழக (அது அழகு ??) நம்ம பார்த்திபன் கவிதையாய் சொல்லறார் .

ஒரு, ஸ்வீட் ஸ்டால்லே 
ஸ்வீட் சாப்பிடுகிறதே ...!

டேய் டேய் இதல்லாம் நோட் பண்ணுங்கடா நோட் பண்ணுங்கடா 

கடைசியா நம்ம கவுண்டமணி அண்ணே , ரெண்டே வரில அவரோட அக்கா மகளுக்காக எழுதின கவிதை ..





அடி அக்கா மகளே இந்து ,
யே வக்கா மகளே இந்து ...

நான் காலேஜ் படிக்கும்போது ஒரு பொண்ண சின்சியரா லவ் பண்ணேன், அவ என்ன பார்க்க நான் அவள பார்க்கனு நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு , ஒருநாள் அவளபத்தி ஒரு கவிதை எழுதி அவ கிளாஸ் பையன்கிட்ட கொடுத்து அனுப்புனேன் , அதுல இருந்து அவ என்ன பாக்குறதையே நிறுத்திட்டா , அப்புறம் என்னோட 34 லவ் மாதிரியே இதுவும் பெயிலா போச்சு ( இது என்னடா பரிட்சையா பெயிலா போறதுக்கு ) அந்த கவிதை இதுதான் , அவ பெயர் பாரதி ..

பாரதி , அழகான பெயர் ,
நீ ஏன் இவ்வளவு ஒல்லியாக இருகிறாய் ?
பேரு வைத்த உன் வீட்டில் யாரும் 
உனக்கு சோறு வைக்கவில்லையா ?

இவ்வளவு அழகான கவிதைய (?) அவளுக்கு பிடிக்காம போயிடிச்சே ..:( 


9 comments:

  1. இந்த பொண்ணுங்களே இப்படித்தான் பாஸ், சிவா டயலாக் செம காமெடி, நல்லா எழுதறீங்க, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பாரதி , அழகான பெயர் ,
    நீ ஏன் இவ்வளவு ஒல்லியாக இருகிறாய் ?
    பேரு வைத்த உன் வீட்டில் யாரும்
    உனக்கு சோறு வைக்கவில்லையா ?

    இவ்வளவு அழகான கவிதைய (?) அவளுக்கு பிடிக்காம போயிடிச்சே ..:(


    ......அதற்காக நீங்க கவுஜ எழுதுறதை விட்டுப்புடாதீங்க.... :-)

    ReplyDelete
  3. கரெக்டா சொன்னிங்க நன்றி இரவு வானம் ..

    ReplyDelete
  4. சித்ரா மேடம் நான் எழுதுனதுக்கு பேரு கவுஜ னு நீங்க சொல்லித்தான் தெரியுது ... ஆமாம் கவுஜைனா என்ன ? கருத்துக்கு ரொம்ப நன்றி மேடம் ...

    ReplyDelete
  5. அழகான கவிதைதான்! அழகான கவிதையையும் அழகான உங்களையும் அவங்களுக்கு பிடிக்காம போனது அவங்க துரதிர்ஷ்டம்தான்!

    ReplyDelete
  6. எஸ் கே சார் உங்களுக்கு தெரியுது அவளுக்கு தெரியலையே

    ReplyDelete
  7. வணக்கம் திருமலை சார் .. கண்டிப்பாக பார்க்குறேன் உங்க வலைதளத்த

    ReplyDelete
  8. உங்களது இந்தப் பதிவினை, நான் இன்று (19 டிசம்பர் 2010 ), வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன். முடிந்தால் இங்கு வந்து படித்து விட்டு உங்கள் கருத்தினை சொல்லவும். நன்றி !

    ReplyDelete