Friday, December 10, 2010

அவன் அவள் அல்வா

எனக்கு கதையும் எழுத வரல , கவிதையும் எழுத வரல அதான் ரெண்டையும் கலந்துகட்டி எழுதலாம்னு ஒரு சிறுமுயற்சி ,


கதை இதுதான் ஒரு பையன் ஒரு பொண்ண சின்சியரா காதலிக்கிறான் , ஆனா அந்த பொண்ணு அவன ஜஸ்ட் ஒரு டைம் பாஸ்காகவும் , அவன் காசுல என்ஜாய் பண்றதுக்காகவும் காதலிக்குற மாதிரி நடிகுறா, இதுதான் கதை ( ஐ கதை எழுதிட்டேன் ) இப்ப அந்த காதலன் அவள் காதலியை பார்த்து கவிதை நடைல (?) வர்ணிக்க , அதற்கு அந்த காதலியும் மனதிற்குள் கவிதை (?) நடைலயே பதில் சொல்றாங்க .. இதில் காதலி சொல்லும் அனைத்தும் அவள் மனதிற்குள் சொல்லி கொள்வது ..


அவன் : 
அன்பே , எப்பொழுதும் உன்முகம் மட்டும் 
எவ்வாறு பிரகாசமாக உள்ளது ?
காலையில் சூரியனும் 
மாலையில் சந்திரனும் 
உன்முகத்தை மட்டும் பார்பதாலா ?


அவள் ( மனதிற்குள் ) :

அன்பே , எப்பொழுதும் உன்முகம் மட்டும் 
எவ்வாறு பிரகாசமாக உள்ளது ?
நீ ஒரு டுயுப் லைட் என்பதாலா ?

அவன் :
அன்பே , நீ நடக்கும் சாலையெங்கும் 
மலர்களை தூவி வைப்பேன் 
உன் பாதத்திற்கு வலிக்காமல் இருக்க!

அவள் ( மனதிற்குள் ):
சாலையெங்கும் மலர்கள் வேண்டாம் 
அன்பே , தினம் ஒரு முழம் போதும் 
எனக்கு பத்துருபாய் மிச்சம் 

அவன் :
அன்பே , உன் சிரிப்பில் இருந்து 
சில்லறையாய் சிதறுகிறதே 
அது எப்படி ?

அவள் :
உன் பாக்கெட்லிருந்து பணம் சிதறும்வரை 
என் சிரிப்பிலிருந்தும் சில்லறை சிதறும் 

அவன் :
நான் எப்போதும் உன்னை நினைத்துக்கொண்டிருக்கிறனே
உனக்கு எப்போதும் விக்கல் வருகிறதா ?

அவள் :
நீ சென்றவுடன் கணேஷ் வந்து விடுவதால் 
உன் ஞாபகம்கூட வருவதில்லை அன்பே !

அவன் :
எப்போதும் நீ எனக்கு மட்டும் அழகாக தெரிகிறாயே    
எப்படி ?

அவள் : 
என் மேக் அப் கலையும்வரை எல்லோர்க்கும் அழகாத்தான் தெரிவேன் 
அப்படி !


அவன் : 
அன்பே உனக்காக நான் உயிரையும் தருவேன் 
எனக்காக நீ என்ன தருவாய் ?


அவள் :
உன்னிடம் தருவதற்கு அல்வாவை தவிர 
வேறொன்றும் இல்லை அன்பே ..


அவன் :
அன்பே , நமது  திருமணம் எப்போது நடக்கும் ?


அவள் :
எப்போதும் போல்  இரவில் உன் கனவில் மட்டும்தான் அன்பே ...


Moral of the Story : அவன் போன்ற காதலனும் , அவள் போன்ற காதலியும் இருக்கும்வரை , அல்வா கடைகளுக்கு அழிவில்லை .






            

2 comments:

  1. //உன்னிடம் தருவதற்கு அல்வாவை தவிர
    வேறொன்றும் இல்லை அன்பே ..//
    இது கூட அவன் காசுலதான் :-)

    ReplyDelete