Friday, December 10, 2010

போஸ்டர் குறும்பட விமர்சனம்

நான் வலைத்தளம் ஆரம்பிக்க காரணமே அண்ணன் கேபிள் சங்கர் அவர்கள்தான் , அது எப்படி என்பது பல தடவை பல பேரிடம் சொல்லிருப்பதால் அதை அப்படியே விட்டுவிடுவோம் . 


அவரை பற்றி தெரிந்த அனைவருக்கும் கண்டிப்பாக தெரியும் அவருடைய திரைப்பட ஆர்வம் , ஒரு திரைப்பட இயக்குனராக தீவிரமாக முயற்சி செய்து வரும் அவர் தற்பொழுது ஒரு எழுத்தாளராகவும் வெற்றி கண்டுள்ளார். ஒரு காலத்தில் அவரது விமர்சனத்தை படித்துவிட்டு அதற்குபிறகுதான் படம் பார்க்கவே செல்வேன், ஆனால் பலதடவை அவர் நன்றாக பாராட்டிய படம் எனக்கு பிடிக்காது அல்லது எனக்கு மிகவும் பிடித்த படம் அவருக்கு பிடிக்காது விமர்சித்திருப்பார் , ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை ... 


நான் இரண்டு காரணங்களுகாக  சங்கர் அண்ணனின் படத்தை மிகவும் எதிர்பார்கிறேன் , ஒன்று, மூன்று வருடங்களாக அண்ணனின் ப்ளாக் படித்து கொண்டிருக்கிறேன் ஆகையால் அவரது இயக்குனர் கனவை பற்றி நன்றாக தெரியும், அது நிறைவேற வேண்டும் என்ற ஆசை, மற்றொன்று எல்லாருடைய படத்தையும் விமர்சிக்கும் இவரது படம் எப்படி இருக்கும் என்பதை காணும் ஆவல்.. 


அண்ணன் ஏற்கனவே குறும்படத்தை இயக்கி இருந்தாலும் அதை நான் கண்டதில்லை , அவரது வலைத்தளத்தில் அவர் கதை , திரைகதை அமைத்த போஸ்டர் குறும்படம் கலைஞர் தொலைகாட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பு  ஆக இருப்பதாக   அறிவித்திருந்தார் , ஏற்கனவே அந்த நிகழ்ச்சியின் போலீஸ் சுற்றை கண்டிருந்ததால் , அண்ணனின் கைவண்ணத்தை காணும் ஆவல் ஏற்படிருந்தது .. ஆனால் ஆடிட்டிங் வேலை அதிகமாக இருந்ததால் சென்ற ஞாயிற்று கிழமை அலுவலகமே கெதியாக இருந்தேன் ஆகையால் அதை காண முடியவில்லை , நேற்று இரவு அதே நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்தார்கள் , நான் பாதியில் இருந்துதான் நிகழ்ச்சியை பார்த்தேன் ஆகையால் கடைசி மூன்று படங்களைத்தான் பார்க்க முடிந்தது அதில் ஒன்று போஸ்டர்.


படத்தை பலரும் பார்த்திருப்பீர்கள் ஆனாலும் யாரேனும் பார்க்காமல் இருந்தால் அவர்களுக்காக.. படத்தின் கதை இதுதான் ஒரு விபச்சாரம் செய்யும் சாந்தி என்ற பெண்ணை பற்றி ஒரு தெருவில் போஸ்டர் ஓட்ட பட்டிருகிறது , எங்கே விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கமாகி விடுமோ என்று இரவோடு இரவாக அந்த ஏரியா காவல்துறையினர் அந்த போஸ்டரை கிழித்து எறிகின்றனர், அந்த சாந்தியை உடனடியாக பிடிக்க சொல்லி அந்த ஏரியா இன்ஸ்பெக்டர்க்கு அவரது மேலதிகாரிகள் நெருக்கடி அளிக்கின்றனர், மறுநாள் காலை சாந்தி என்ற விபச்சாரம் செய்யும் பெண் அவளது கையாளிடம் புதுசா ரெண்டு பசங்க (பொண்ணுங்க ) வந்துருகாங்க வழக்கமா வர அந்த எக்ஸ்போர்ட் பார்ட்டியிடம் சொல்லு ராசியான ஆளுங்கன்னு சொல்கிறாள் , அவனும் அந்த எக்ஸ்போர்ட் ஆளுக்கு போன் செய்ய நம்பரை தேடி போன் செய்கிறான் அந்த நம்பர் 76 என முடிகிறது ஆனால் அவனோ தவறுதலாக 70 என கால் செய்து விடுகிறான், அது அந்த ஏரியா போலிசின் நம்பர் , போன் செய்தவன் அவர்களது அட்ரசையும் போலீசிடம் சொல்ல போலீஸ் அந்த சாந்தியை பிடிக்கிறது. இரவு போஸ்டர் ஒட்டிருந்த இடத்திற்கு இருவர் வந்து அந்த போஸ்டர்களை தேடுகின்றனர் , அதில் ஒருவன் போன் செய்து சொல்கிறான் , அண்ணே நேத்து சீரியலுக்காக ஒட்டிருந்த போஸ்டர் ஷூட்டிங் நின்னதால அப்படியே விட்டு போனோம்ல அத காணோம்னே எவனோ கிழிச்சிட்டாய்ங்கனே னு சொல்றான்.. ஆக ஷூடிங்க்காக ஒட்டபட்ட போஸ்டர தவறா புஞ்சிகிட்ட போலீஸ் உண்மையிலே சாந்திங்கிற விபசாரியையும் பிடிச்சிட்டாங்க .. 


இதுதான் நான் படத்த பார்த்து புரிஞ்சிகிட்ட அளவில் படத்தோட கதை . படத்தோட கதையிலேயே ஹுயுமர் இருந்தாலும் அதை சொன்ன விதம் அருமை .. பொதுவா போலீஸ் ஸ்டோரினு எடுத்துகிட்டா ரௌடிசம், என்கவுன்டர் இதுதான் பிரதானமா இருக்கும் அதையேதான் நான் பார்த்த அடுத்த ரெண்டு படத்திலையும் கொடுதிருதாங்க ஆனா இந்த படம் அந்த எந்த விஷயத்திலும் சிக்காம அழகா ரசிக்கிற மாதிரி இருக்கு .. 


படத்துல நடிச்ச எல்லோரும் ரொம்ப இயல்பான நடிப்ப வெளிபடுதிருந்தாங்க எனக்கு அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் , போன்ன அட்டென்ட் பண்ணற அந்த காண்ஸ்டேபிள் அப்புறம் அந்த சாந்தியின் கையாள் ( போன் செய்பவர் ) இவர்களின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது , படத்தின் மைனஸ்னா நான் இதற்கு அடுத்து பார்த்த ரெண்டு படம் கரனம் தப்பினால், அச்சம் தவிர் இந்த ரெண்டு படத்தோட ஒப்பிடும்போது making style, edititing, music இதெல்லாம் நம்ம படத்துல கொஞ்சம் low தான் ஆனாலும் நம்ம படத்தின் கதைக்கு செய்ய முடிந்த அளவிற்கு சிறப்பாகவே செய்துள்ளார்கள் , என்னதான் பெரிய நட்சத்திர அந்தஸ்து , பெரிய டெக்னிசியன்ஸ் இருந்தாலும் அசல் , சுறா , இப்போ உத்தமபுத்திரன் போன்ற படங்களை விட களவானி , மைனா போன்ற படங்கள் மனதை கவருதோ அந்த மாதிரி இந்த ரெண்டு படங்களை விட நம்ம படம் தூள் .. 


அடுத்த சின்ன மைனஸ் அந்த சாந்தி சொல்றாங்க அந்த எக்ஸ்போர்ட் பார்ட்டிய வர சொல்லு ராசியான ஆளுங்கனு, ஏற்கனவே வந்துட்டு போயிட்டு இருகிறவங்களுக்கு எதுக்கு மறுபடியும் அவர் அட்ரெஸ் தரனும் ( ஒரு வேள வீடு மாத்திடான்களோ )  எது எப்படியோ எனக்கு படம் ரொம்ப புடிச்சிருந்துச்சு , நடுவர்களுக்கும் புடிச்சிருந்துச்சு சிறந்த படம்னு பெயரும்  கிடைச்சாச்சு, போஸ்டர் பட டீம்க்கு வாழ்த்துக்கள் .. மொத்தத்தில் Poster - Blaster.

1 comment: