Monday, August 23, 2010

பங்கு சந்தை முதலீட்டை கற்றுக்கொள்ள வேண்டுமா ?

பங்கு சந்தை முதலீட்டை கற்றுகொள்ள என்னதான் புத்தகங்களை படித்தாலும் what is what என்ற அளவில் மட்டுமே தெரிந்துகொள்ள முடியுமே தவிர அனுபவ ரீதியாக தெரிந்துகொள்வது சிறிது கடினமே, ஆனால் நான் பங்குசந்தையில் நுழைவதற்கு முன்பே அதைப்பற்றி ஓரளவிற்கு அனுபவ ரீதியாக தெரிந்துகொள்ள உதவியது பலருக்கும் தெரிந்த share game தான் , அதாவது நாமாக சில நிறுவனகளின் பங்குகளை வாங்கியதாக நினைத்து கொண்டு அதற்கு ஒரு லாப அளவை நிர்ணயம் செய்து அந்த அளவு வரும் வரை அந்த பங்குகளை  follow செய்வதே share game ஆகும் , இதை விளையாடுவதினால் பங்கு சந்தையின் ஏற்ற இறக்கங்கள், லாபம் கிடைக்க ஆகும் கால அளவு , ரிஸ்கின் அளவு மற்றும் நாம் விலைகொடுத்து வாங்கியதாக நினைத்து கொண்ட பங்கு நிறுவனத்தின் latest updates ஆகியவற்றை நம்மை அறியாமலேயே கற்றுகொள்வோம் ... நான் பங்குசந்தையில் நுழைவதற்கு முன்னால் அதாவது கல்லூரி படிக்கும்போது இந்த விளையாட்டை பலமுறை விளையாடி அதன்மூலம் பங்குசந்தையை பற்றி ஓரளவிற்கு நன்றாகவே கற்றுக்கொண்டேன் . இதுவரை நோட்டிலும் டைரியிலும் விளையாடிய இந்த விளையாட்டை இனி இங்கு விளையாடுகிறேன் .... உதாரணமாக idea cellular பங்குகளை நான் இன்று 70.80 ரூபாய்க்கு வாங்கியதாக எடுத்து கொள்வோம் ... நான் குறுகிய கால முதலீடு செய்பவன் ஆகையால் அதற்கு நான் 15 % லாபம் எதிர் பார்கிறேன், அதாவது 70.80 * 15 % = 81.42 ருபாய் , நான் 100பங்கினை 7080 ரூபாய்க்கு வாங்கினேன் என்றால் நான் எதிர்பார்க்கும் லாபம் 8142 அதாவது 1060 ருபாய் ..இனி அந்த லாபம் வரும்வரை நான் இந்த பங்குகளை follow செய்வதால் என்னால் மேற்கண்ட பயன்களை பெற முடியும் , உங்களுக்கும் பங்குச்சந்தை முதலீட்டில் ஆர்வம் இருந்தால் இந்த முறையை நீங்களும் முயற்சிக்கலாமே ...


பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளையும் ( திட்டுகளையும் ) comment இடலாமே .
 



























2 comments: