இந்த பதிவில் வரும் தகவல்கள் அனைத்தும் நம்பத்தகுந்த ஒரு சினிமா விநியோகஸ்தர் நமக்கு அளித்தவை என்பதை சிரிக்காமல் தெரிவித்துகொள்கிறோம் .
அன்று பொங்கல் தினம் நேரம் காலை 5 மணி , அதிகாலை மூன்று மணி முதலே திரைஅரங்கின் முன் ரசிகர்கள் கூட்டம், ஒரு புறம் தலைவரின் கட் அவுட் க்கு பாலாபிசேகம் செய்துகொண்டிருந்தனர் அவரது உயிர் ரசிகர்கள் , மறு புறம் எப்பொழுது படப்பெட்டி வரும் என்று ஆவலுடன் காத்துகொண்டிருந்தது மற்றொரு கூட்டம் , 1000 வாலா வெடிக்க , ரசிகர்களின் விசில் காதை கிழிக்க வந்தது முதல் நாள் இரவு முதலே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருந்த படப்பெட்டி ..
இவ்வளவு வரவேற்பு பொங்கல் தினத்தன்று எந்த படத்திற்கு கிடைத்திருக்கும் என்று நீங்கள் யுகித்திருபிர்கள் ஆம் உங்கள் யூகம் சரிதான் அது இரண்டாம் எம் ஜி ஆர் , ரசிகர்களின் இதய தெய்வம் , கிராமத்து நாயகன் , இளைஞர்களின் விடி வெள்ளி , எங்கள் அண்ணன் ராமராஜன் அவர்கள் நடித்த மேதை படம்தான் .
ரசிகர்களின் இவ்வளவு வரவேற்பும் , ஹாலிவுட் படங்களுக்கு இணையான இல்லை இல்லை ஹாலிவுட் படங்களையே மிஞ்சும் அளவிற்கு இருந்த காட்சி அமைப்பும் திரைபடத்தின் வெற்றியை உறுதி செய்தது , இதை கண்ட தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ். ஏ. சந்திரசேகர் மற்றும் அவரது மகன் விஜய்யும் எங்கே மேதை படத்தால் தனது நண்பன் படத்தின் வெற்றி பாதிக்கபடுமோ என்று அச்சம் கொண்டனர் . அவர்கள் பயத்திற்கும் ஒரு காரணம் இருந்தது , இதோ சில உதாரணங்கள் ..
சேலத்தில் ஒரு பிரபல மல்டி ப்ளெக்ஸ் திரைஅரங்கில் பொங்கல் அன்று காலை 11 மணி காட்சியில் மேதை படத்தை திரையிட்ட திரைஅரங்கு ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிய சிலர் அமர இடமின்றி நின்றுகொண்டே படத்தை கண்டு மகிழ்ந்தனர் , ஆனால் நண்பன் படத்தை திரையிட்ட திரை அரங்கமோ வெறும் 10 பேரை வைத்து கொண்டு படத்தை ஓட்டினர். இதுபோன்ற பல நிகழ்வுகள் தமிழகம் முழுதும் நடந்தது .
இதையெல்லாம் கண்டு பொறுக்க முடியாத சந்திரசேகர் மற்றும் விஜய் மேதை திரைபடத்தை திரையிட்ட திரை அரங்குகள் மற்றும் வெளியிட்ட விநியோகஸ்தர்களை மிரட்டியும் பணத்தை கொடுத்ததும் மூன்றாவது நாளே படத்தை மாற்ற செய்தனர் , உதாரனமாக எங்கள் ஊரில் மேதை படத்தை எடுத்துவிட்டு மயூரி நடித்த மயக்கும் மங்கை என்ற பிட் படத்தை திரையிட்டனர் , கவர்ச்சி நடிகை மயூரிக்கு முன்பே ட்ரவுசர் போட்டது எங்கள் தலைவர்தான் அப்படி இருக்க எப்படி எங்கள் தலைவர் படத்தை தூக்கலாம் என்று ரசிகர்கள் போராட்டத்தில் இறங்கினர் .
போராட்டம் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது , நாளை விஜய் நடிக்கும் துப்பாக்கி மற்றும் பவர் ஸ்டார் டாக்டர் ஸ்ரீனிவாசனின் ஆனந்த தொல்லை படங்கள் ஒன்றாக வெளியானால் , விஜய் போன்ற மூத்த நடிகர்களின் இந்த வெறி , பவர் ஸ்டார் டாக்டர் ஸ்ரீனிவாசன் போன்ற இளம் நடிகர்களின் வளர்ச்சியை பாதிக்கும், அப்படி ஏதும் நடக்காமல் இருக்க இதுபோன்ற போரட்டங்கள் தொடர வேண்டும்.
No comments:
Post a Comment